பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Provinces of India), பிரித்தானிய இந்தியாவில் முன்பு இதனை இராஜதானிகள் என்றும், இராஜதானி நகரங்கள் என்றும் அழைப்பர். இம்மாகாணங்கள் கிபி 1612 முதல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்டு 1947 வரை இருந்தது. மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களும் இருந்தன. [1]
வரலாற்று கால வரிசைப்படி இம்மாகாணங்களின் ஆட்சியை மூன்றாகப் பிரிப்பர்.
- கிபி 1612 - 1757 ஆண்டுகளுக்கிடைப்பட்ட முகலாயர்கள், மராத்தியப் பேரரசு மற்றும் பிற உள்ளூர் மன்னர்களிடம் அனுமதி பெற்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிகள் கோவா, சூரத், மும்பை, சென்னை, மசூலிப்பட்டினம், கொல்கத்தா, சிட்டகாங் போன்ற, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் நிலங்களை குத்தகை அல்லது குறைந்த விலைக்கு வாங்கி தொழிற்சாலைகள், கிடங்கிகள் அமைத்து, ஐரோப்பியப் பொருட்களை இறக்கு செய்து வணிகம் செய்தனர்.
- பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில், சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை (இராஜதானி) நகரங்களாக விளங்கியது.
- 1757 - 1858 கம்பெனி கம்பெனி ஆட்சியின் போது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளை, இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, அப்பகுதிகளை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து தங்களது நேரடி ஆட்சியில் நிர்வகித்தனர். வளமற்ற பகுதிகளை, கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும், கம்பெனிக்கு கட்டுப்பட்ட, சுதேச சமஸ்தான மன்னர்களின் ஆட்சியில் விட்டு விட்டனர்.
- இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள் வணிகம் மற்றும் தொழில் செய்வதை படிப்படியாக விட்டு விட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களாக மாறினர்.
- 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர், கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து, ஆட்சியை பிரித்தானியப் பேரரசு தங்கள் நேரடி பொறுப்பில் எடுத்துக் கொண்டு, இந்தியத் தலைமை ஆளுநரை ஆட்சியாளராக நியமித்து இந்தியாவை ஆண்டனர்.
- கிபி 1858 - 1947 முடிய இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்ற பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, பர்மா மற்றும் ஏடன் துறைமுகப் பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டது.
- இந்தியாவின் பெரும் ஆட்சிப்பரப்புகளை வங்காள மாகாணம், சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணம் என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரித்து ஆண்டனர். [2]
பிரித்தானிய இந்தியா (1793-1947)
தொகுகிபி 1608ல் முகலாயர்கள், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிகம் மற்றும் தொழில் செய்ய, அரபுக் கடற்கரையின் சூரத் பகுதியை வழங்கினர்.
பின்னர் 1611ல் ஆந்திரக் கடற்கரையின் மசூலிப்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலைகள் கட்டினர்.[3] 1707ல் இந்தியாவில் முகலாயார் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், மராத்தியப் பேரரசு எழுச்சி கொண்டது. 1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் பேரரசு, ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சியுற்றது.
முன்னர் 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை, 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டை போர்களில் வங்காளம் மற்றும் அயோத்தி நவாபுகளை வென்று, வட இந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பரப்புகளை விரிவுப்படுத்தினர்.
1760ல் நடைபெற்ற வந்தவாசிப் போரில் பிரஞ்சுப் படைகளை ஆங்கிலேயர்கள் சென்னைப் பகுதிகளிலிருந்து விரட்டியடித்தனர்.
1775 - 1818 முடிய பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற ஆங்கிலேய-மராட்டியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தை, பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ பகுதியாக மாற்றினர் [4] [5]
1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிரித்தானிய இந்தியாவின் அரசு ஆட்சி அமைக்கப்பட்டது.[5] அது முதல் இந்தியா, பிரித்தானியப் பேரரசின் காலனியாத்திக்க நாடாக மாறியது.
பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்திற்கும், நீதி முறைகளுக்கு தேவையான சட்டங்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பிரித்தானியாவில் நடைபெறும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு பிரித்தானிய இந்தியா அரசுகளின் துறைகள் மற்றும் மாவட்டங்கள் நிர்வகிக்கப்பட்டது.[6] and the Princely States,[7]
ஆங்கிலேயர்கள் நேரடியாக நிர்வகிக்க இயலாத, வளமற்ற, பாலவன, மலைகளும், காடுகளும் அடர்ந்த பகுதிகளை, தனக்கென சொந்தமாக இராணுவம் வைத்துக் கொள்ளாத இந்தியக் குறுநில மன்னர்கள் மூலம், கப்பம் வாங்கிக் கொண்டு மறைமுக ஆட்சி செலுத்தினர்.
1910 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த இந்திய மக்கள்தொகையில் 77% விழுக்காடும், மொத்த நிலப்பரப்பில் 54% விழுக்காடும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதியில் இருந்தது. [8] மீதமுள்ள இந்திய நிலப்பரப்புகளை இந்திய மன்னர்களும் மற்றும் சிறு நிலப்பரப்புகளை போர்த்துகேய இந்தியா மற்றும் பிரஞ்சு இந்திய ஆட்சினரும் ஆண்டனர்.
ஆகஸ்டு, 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின், பிரித்தானிய இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது
1824 முதல் 1937 முடிய பிரித்தானிய இந்தியாவில் பர்மாவின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டிருந்தது.[6] பின்னர் பர்மாவை தனி காலனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று இலங்கை மற்றும் மாலத்தீவும், பிரித்தானியப் பேரரசின் தனி காலனி நாடுகளாக இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் பாரசீகம், வடமேற்கில் ஆப்கானித்தான், வடக்கில் நேபாளம் மற்றும் திபெத்து, வடகிழக்கில் சீனா, கிழக்கில் தாய்லாந்து, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக கொண்டிருந்தது. இருந்தது. மேலும் ஏடன் மாகாணமும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்தது.[9]
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் நிர்வாகம் (1793-1858)
தொகு31 டிசம்பர் 1600 அன்று துவக்கபப்ட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1611ல் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியான மசூலிப்பட்டினத்திலும், 1611ல் இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான சூரத்திலும் வணிக மையங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினர்.[10]1639ல் சென்னையில் சிறு வணிக மையத்தை நிறுவினர். [10][10] 1661ல் போர்த்துகல் நாடு இளவரசியை மணந்த பிரித்தானிய இளவரசருக்கு, சீர்வரிசையாக, மும்பை வழங்கப்பட்டது.[10]
முகலாயப் பேரரசர் ஷாஜகானின் அனுமதியுடன், 1640ல் வங்காளத்தின் கூக்ளி நகரத்தில் தொழிற்சாலைகள் நிறுவினர்.[10]
ஐம்பதாண்டுகள் கழித்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கிழக்கிந்தியக் கம்பெனியின் தொழிற்சாலைகளை கூக்ளியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
ஜாப் சார்னோக் எனும் கம்பெனி நிர்வாகி கூக்ளி அருகே மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கி அப்பகுதியை கொல்கத்தா எனப்பெயரிட்டு, அப்பகுதியில், 1683ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலாவது தலைமையகத்தை நிறுவினார்.[10]
ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட, சென்னை மாகாணம், மும்பை மாகாணம் மற்றும் வங்காள மாகாணம் என அழைக்கப்படும் இராஜதானிகளில், கிழக்கிந்திய கம்பெனியர், 18ம் நூற்றாண்டின் நடுவில், மூன்று கோட்டைகளுடன் கூடிய வணிக மையங்கள், தொழிற்சாலைகள் நிறுவினர். [11]
இராஜதானிகள்
தொகு-
1700ல் இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வணிக மையங்களைக் காட்டும் வரைபடம்
-
பிளாசி சண்டைக்கு மூன்றாண்டிற்குப் பின், 1760ல் இருந்த மராத்தியப் பேரரசு மற்றும் சில முக்கிய மன்னராட்சி நாடுகள்
-
1908ல் சென்னை இராஜதானி நகரம், 1640ல் புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது.
-
1684ல் நிறுவப்பட்ட மும்பை மாகாணத்தின் 1908ன் வரைபடம்
- சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் (1682–1700) நிறுவப்பட்டது - தலைநகரம்: புனித ஜார்ஜ் கோட்டை
- சென்னை மாகாணம்: 1640ல் நிறுவப்பட்டது.
- மும்பை மாகாணம்:1687ல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலகம் சூரத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
- வங்காள மாகாணம்: 1690ல் வங்காள மாகாணம் நிறுவப்பட்டது.
- 1757ல் ராபர்ட் கிளைவ் தலைமையில் கம்பெனிப் படைகள், வங்காள நவாபுகளுக்கு எதிரான பிளாசி சண்டையில் வெற்றி பெற்ற பிறகு, வங்காள நவாபுகளின் அரசுகள் கம்பெனியின் கைப்பாவையாக செயல்பட்டது. [12]
- 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில், ஆங்கிலேயர்கள், அயோத்தி நவாப்பை வென்றதால் பிகார் மற்றும் உத்திரப் பிரதேசப் பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றனர்[12]
- 1773ல் வங்காளப் பகுதி முழுவதும், ஆங்கிலேயர்கள் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.[12]
- 1773 முதல் 1773 முடிய உள்ள காலத்தில், காசி இராச்சியத்தையும், மும்பை அருகே உள்ள சால்சேட் தீவுப்பகுதிகளைக் கைப்பற்றினர்.[13]
- மைசூர் இராச்சியத்தின் சில பகுதிகள் 1792ல் மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
- 1799ல் திப்பு சுல்தானை, நான்காம் மைசூர் போரில் வென்ற ஆங்கிலேயர்கள், மைசூர் இராச்சியத்தின், தெற்கு கன்னடம் உள்ளிட்ட பெரும்பகுதிகளை, சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[13] In 1801[14]
-
1765ல் பிரித்தானிய இந்திய
-
1795ல் பிரித்தானிய இந்தியா
-
1837ல் பிரித்தானிய இந்தியா
-
விரிவாக்கப்பட்ட பிரித்தானிய வங்காளம் மற்றும் பர்மா
புதிய மாகாணங்கள்
தொகு- நாக்பூர் மாகாணம் - (1853 - 1861)
- பஞ்சாப் மாகாணம் (1849–1947) - தலைநகரங்கள் - லாகூர் (குளிர்காலம்) - சிம்லா (கோடைக்காலம்)
- பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912–1936)
- ஒரிசா மாகாணம் - (1936 - 1947)
- பிகார் மாகாணம் - (1936 - 1947)
- வடகிழக்கு எல்லைப்புற முகமை (1874 - 1905)
- கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் (1905 - 1912)
- அசாம் மாகாணம் (1912 – 1947)
- வடமேற்கு மாகாணங்கள் (1836–1902)
- ஆக்ரா மாகாணம் (1836 - 1902)
- ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் (1902–1937)
- ஐக்கிய மாகாணம் (1937–1950)
இந்தியாவில் கம்பெனி ஆட்சி கலைக்கப்படும் வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்
தொகு- ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் மும்பை மாகாணத்தை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் விரிவு படுத்தினர்.
- கர்நாடகப் போர்கள் மற்றும் ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் மூலம் சென்னை மாகாணம் விரிவாக்கப்பட்டது.
- 1757 பிளாசிப் போர் மற்றும் 1764 பக்சார் சண்டை மற்றும் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்களின் மூலம் வங்காள மாகாணம் விரிவாக்கப்பட்டது.
- தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற இந்திய மன்னர்களின் நிலப்பரப்புகளை கம்பெனி நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. இக்கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது. [15] அயோத்தி மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
-
1836ல் பிரித்தானிய இந்தியா வின் ஆட்சியில் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகள்
பிரித்தானியப் பேரரசின் கீழ் இந்திய நிர்வாகம் (1858–1947)
தொகுவரலாற்று பின்னணி
தொகுபிரித்தானிய அரசின் மையங்களாக மாகாணங்கள் நிறுவப்பட்டது. 1834ல் மாகாணங்களின் சட்ட விதிகளை வரையறுக்க, ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்திய அரசு, புதிய பகுதிகளை உடன்படிக்கை மூலம் அல்லது போர் மூலம் கைப்பற்றும் போது, அப்பகுதிகளை அருகில் உள்ள மூன்று இந்திய மாகாணங்களில் ஒன்றுடன் இணைக்கப்பட்டது.[16]
சட்டமன்றங்களால் வரையறுக்கப்படாத கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்கள் பிரித்தானிய இந்திய அரசின் தலைமை ஆளுரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டது. [17]
வரையறுக்கப்படாத, சட்டமன்றங்கள் இல்லாத மாகாணங்கள் தலைமை ஆளுநரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. [18] அவைகள்:
- அஜ்மீர் - மெர்வாரா
- சிஸ் - சத்லஜ் அரசுகள்
- சௌகோர் மற்றும் நெர்புத்தா பகுதிகள்
- வடகிழக்கு எல்லைப்புறப் பகுதிகள் (அசாம்)
- கூச் பெகர்
- தென்கிழக்கு மேட்டுப் பகுதிகள்
- ஜான்சி
- குமாவுன்
-
1880ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகள்
-
பர்மா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளை கைப்பற்றிய பிறகு 1893ல்
-
1915ல் கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைத்து, பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் மற்றும் அசாம் மாகாணத்தை மீண்டும் நிறுவிய பின்னர் பிரித்தானிய இந்தியாவின் வரைபடம்
முறைப்படுத்தப்பட்ட மாகாணங்கள்
தொகு- மத்திய மாகாணம்: நாக்பூர் மாகாணம் மற்றும் சௌகோர் மற்றும் நேர்புத்தா பகுதிகளை இணைத்து 1861ல் நிறுவப்பட்டது. தனியாக நிர்வகிக்கப்பட்டு வந்த பேரர் பகுதியை 1936ல் மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணத்தில் இணைத்து நிர்வகிக்கப்பட்டது.
- பர்மா: கீழ் பர்மா 1852ல் வங்காள மாகாணத்துடன இணைக்கப்பட்டது. மேல் பர்மா 1862ல் நிறுவப்பட்டது. முழு பர்மாவும் 1937ல் பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரித்து, தனியாக பிரித்தானிய பர்மா அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டது.
- அசாம் மாகாணம்: 1874ல் அசாம் உள்ளடக்கிய வடகிழக்கு எல்லைப்புற முகமையை வங்காள மாகாணத்திலிருந்து பிரித்து, வரையறுக்கப்படாத மாகாணமாக இந்தியத் தலைமை ஆளுநரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது. 1905ல் வடகிழக்கு எல்லைப்புற முகமைப் பகுதிகளை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் எனும் புதிய மாகாணத்தில் இணைக்கப்பட்டது. 1902ல் மீண்டும் பழைய வங்காள மாகாணம் நிறுவப்பட்ட பின்னர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு எல்லைப்புற முகமையை வங்காள மாகாணத்தில் இணைக்கப்பட்டது.
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாகாணம் 1875ல் நிறுவப்பட்டது.
- பலுசிஸ்தான் மாகாணம்: 1887ல் மாகாணமாக நிறுவப்பட்டது.
-
1880ல் சென்னை மாகாணம்
-
1880ல் பம்பாய் மாகாணம்
-
1880ல் வங்காள மாகாணம்
-
1861ல் நிறுவப்பட்ட மத்திய மாகாணத்தின் 1880ம் ஆண்டின் வரைபடம்
-
1880ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சமஸ்தானங்களாக இருந்த பலுசிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் தர்கேஸ்தான் வரைபடம்
-
1908ல் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் கலாத்
- வடமேற்கு எல்லைப்புற மாகாணம்: பஞ்சாப் மாகாணத்திலிருந்து, பிரித்து இப்புதிய மாகாணம் 1901ல் அமைக்கப்பட்டது.
- கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம்: வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது. 1912ல் மீண்டும் கிழக்கு வங்காளத்தை வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு எல்லைப்புற முகமையைக் கொண்டு மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.
- பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்: 1912ல் வங்காள மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. 1936ல் இம்மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
- தில்லி: 1912ல் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தில்லியை தனியாகப் பிரித்து, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக நிறுவப்பட்டது.
- ஒரிசா மாகாணம்:1936ல் பிகார்-ஒரிசா மாகாணத்தை பிரித்து, ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.
- சிந்து மாகாணம்:1936ல் பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்து மாகாணம் நிறுவப்பட்டது.
- பந்த்-பிப்லோதா:இப்பகுதியின் சுதேச சமஸ்தானங்களைக் கொண்டு பந்த் - பிப்லோதா மாகாணம் நிறுவப்பட்டது.
முதன்மை மாகாணங்கள்
தொகு20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் எட்டு மாகாணங்கள், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.:[19] 1905 - 1912 வங்காளப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதி துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் இருந்தது. 1912ல் மீண்டும் ஒன்றிணைந்த வங்காள மாகாணம் நிறுவப்பட்டு, வடகிழக்கு மாநிலங்களைக் கொண்ட அசாம் மாகாணம், துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது.
மாகாணம்[19] | பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்களில்) | மக்கள்தொகை (மில்லியனில்) | தலைமை நிர்வாகி |
---|---|---|---|
பர்மா மாகாணம் | 170 | 9 | துணைநிலை ஆளுநர் |
வங்காள மாகாணம் | 151 | 75 | துணைநிலை ஆளுநர் |
சென்னை மாகாணம் | 142 | 38 | ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு |
மும்பை மாகாணம் | 123 | 19 | ஆளுநர் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு |
ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் | 107 | 48 | துணைநிலை ஆளுநர் |
மத்திய மாகாணம் | 104 | 13 | தலைமை ஆணையாளர் |
பஞ்சாப் | 97 | 20 | துணைநிலை ஆளுநர் |
அசாம் மாகாணம் | 49 | 6 | தலைமை ஆணையாளர் |
குறு மாகாணங்கள்
தொகுசில சிறிய மாகாணங்கள் தலைமை ஆணையாளர் நிர்வாகத்தில் இருந்தது:[20]
குறு மாகாணம்[20] | பரப்பளவு (ஆயிரம் சதுர மைல்) | மக்கள்தொகை (மில்லியன்) | தலைமை நிர்வாக அதிகாரி |
---|---|---|---|
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | 16 | 2,125 | தலைமை ஆணையாளர் |
பலுசிஸ்தான் மாகாணம் | 46 | 308 | தலைமை ஆணையாளர் |
குடகு மாகாணம் | 1.6 | 181 | மைசூர் இராச்சிய இருப்பிட அதிகாரி |
அஜ்மீர் - மெர்வாரா மாகாணம் | 2.7 | 477 | தலமை ஆணையாளர் |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 3 | 25 | தலைமை ஆளுநர் |
ஏடன்
தொகு- ஏடன் துறைமுகப் பகுதி மாகாணம், 1839 முதல் 1932 முடிய மும்பை மாகாணத்தின் ஆளுநர் ஆட்சியில் இருந்தது. பின்னர் 1937 முதல் பிரித்தானியப் பேரரசின் நேரடி நிர்வாகத்திற்குச் சென்றது.
1947ல் பிரித்தானிய இந்தியாவின் 17 மாகாணங்கள்
தொகு- சென்னை மாகாணம்
- வங்காள மாகாணம்
- பம்பாய் மாகாணம்
- பஞ்சாப் மாகாணம்
- மத்திய மாகாணம் மற்றும் பேரர்
- வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
- பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912 - 1936)
- பிகார் மாகாணம் - (1936 - 1947)
- ஒரிசா மாகாணம் - (1936 - 1947)
- சிந்து மாகாணம் (1936–1955)
- குடகு மாகாணம் - 1834 - 1947
- ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் - (1902–1937)
- ஐக்கிய மாகாணம் (1937–50)
- அசாம் மாகாணம்
- பலுசிஸ்தான் மாகாணம்
- அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- அஜ்மீர் - மெர்வாரா மாகாணம்
- பந்த்-பிப்லோதா மாகாணம் (1935 -1947)
1947ல் பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்கள்
தொகுபிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையில் பெரிதும், சிறிதுமான 562 சுதேச சமஸ்தானங்கள், பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை ஆண்டனர்.
பிரித்தானிய முகமைகள்
தொகுஇதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Administrative Divisions of India from 1872 to 2001
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 5 Quote: "The history of British India falls ... into three periods. From the beginning of the 17th to the middle of the 18th century, the East India Company is a trading corporation, existing on the sufferance of the native powers, and in rivalry with the merchant companies of Holland and France. During the next century the Company acquires and consolidates its dominion, shares its sovereignty in increasing proportions with the Crown, and gradually loses its mercantile privileges and functions. After the Mutiny of 1857, the remaining powers of the Company are transferred to the Crown ..." (p. 5)
- ↑ Imperial Gazetteer of India vol. II 1908, ப. 452–472
- ↑ Imperial Gazetteer of India vol. II 1908, ப. 473–487
- ↑ 5.0 5.1 Imperial Gazetteer of India vol. II 1908, ப. 488–514
- ↑ 6.0 6.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 46–57
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 58–103
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 59–61
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 104–125
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 6
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 7
- ↑ 12.0 12.1 12.2 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 9
- ↑ 13.0 13.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 10
- ↑ Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 11
- ↑ பண்பாட்டுச் சின்னங்களும்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Full text of "The land systems of British India : being a manual of the land-tenures and of the systems of land-revenue administration prevalent in the several provinces"". archive.org.
- ↑ Geography of India 1870
- ↑ Geography of India 1870
- ↑ 19.0 19.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 46
- ↑ 20.0 20.1 Imperial Gazetteer of India vol. IV 1908, ப. 56
மேற்கோள்கள்
தொகு- The Imperial Gazetteer of India (26 vol, 1908–31), highly detailed description of all of India in 1901. online edition
- Imperial Gazetteer of India vol. II (1908), The Indian Empire, Historical, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxv, 1 map, 573
- Imperial Gazetteer of India vol. III (1908), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502), Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxxvi, 1 map, 520
- Imperial Gazetteer of India vol. IV (1908), The Indian Empire, Administrative, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552
மேலும் படிக்க
தொகு- Bandyopadhyay, Sekhar (2004). From Plassey to Partition: A History of Modern India. New Delhi and London: Orient Longmans. Pp. xx, 548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2596-0.
- Brown, Judith M. (1994). Modern India: The Origins of an Asian Democracy. Oxford and New York: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Pp. xiii, 474. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-873113-2.
- Copland, Ian (2001). India 1885–1947: The Unmaking of an Empire (Seminar Studies in History Series). Harlow and London: Pearson Longmans. Pp. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-38173-8.
- Harrington, Jack (2010). Sir John Malcolm and the Creation of British India. New York: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-10885-1.
- Judd, Dennis (2004). The Lion and the Tiger: The Rise and Fall of the British Raj, 1600–1947. Oxford and New York: Oxford University Press. Pp. xiii, 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280358-1.
- Majumdar, R. C.; Raychaudhuri, H. C.; Datta, Kalikinkar (1950). An Advanced History of India. London: Macmillan and Company Limited. 2nd edition. Pp. xiii, 1122, 7 maps, 5 coloured maps.
- Markovits, Claude (ed) (2005). A History of Modern India 1480–1950 (Anthem South Asian Studies). Anthem Press. Pp. 607. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84331-152-6.
{{cite book}}
:|first=
has generic name (help) - Metcalf, Barbara; Metcalf, Thomas R. (2006). A Concise History of Modern India (Cambridge Concise Histories). Cambridge and New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். Pp. xxxiii, 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-68225-8..
- Mill, James (1820). The History of British India, in six volumes. London: Baldwin, Cradock, and Joy, 3rd edition, 1826.
- Peers, Douglas M. (2006). India under Colonial Rule 1700–1885. Harlow and London: Pearson Longmans. Pp. xvi, 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-31738-X.
- Riddick, John F. (2006). The history of British India: a chronology.
- Riddick, John F. (1998). Who Was Who in British India.
- Sarkar, Sumit (1983). Modern India: 1885–1947. Delhi: Macmillan India Ltd. Pp. xiv, 486. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-90425-7.
- Smith, Vincent A. (1921). India in the British Period: Being Part III of the Oxford History of India. Oxford: At the Clarendon Press. 2nd edition. Pp. xxiv, 316 (469–784).
- Spear, Percival (1990) [First published 1965]. A History of India, Volume 2: From the sixteenth century to the twentieth century. New Delhi and London: Penguin Books. Pp. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-013836-6.
வெளி இணைப்புகள்
தொகு- Statistical abstracts relating to British India, from 1840 to 1920 at uchicago.edu
- Digital Colonial Documents (India) Homepage at latrobe.edu.au
- Provinces of British India at worldstatesmen.org
- Collection of early 20th century photographs of the cities of Bombay, Calcutta, and Madras with other interesting Indian locations from the magazine, India Illustrated, at the University of Houston Digital Library பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம்
- Coins of British India