போர்த்துகேய கிழக்கிந்திய நிறுவனம்

(போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company, போர்த்துக்கீச மொழி: Companhia do commércio da Índia அல்லது Companhia da Índia Oriental) ஓர் போர்த்துகல் நாட்டு முன்னுரிமை வழங்கப்பட்ட வணிக நிறுவனம் ஆகும்.

போர்த்துக்கேய கிழக்கிந்தியக் கம்பனி
Companhia do Commércio da Índia
நிலைகலைக்கப்பட்டது
பிந்தியதுகாசா ட இந்தியா
நிறுவுகைஆகத்து 1628
செயலற்றது1633 (1633)
தலைமையகம், போர்த்துகேய இந்தியா, போர்த்துக்கேய பேரரசு
சேவை வழங்கும் பகுதிபோர்த்துக்கேய பேரரசு
முதன்மை நபர்கள்போர்த்துக்கல்லின் பிலிப் III
தொழில்துறைபன்னாட்டு வணிகம்

பின்னணி

தொகு

இந்தியாவில் போர்த்துகல் நடத்திய வணிகம் துவக்கத்திலிருந்தே அரசு ஏகபோகமாக இருந்துள்ளது. இதனை 1500ஆம் ஆண்டு வாக்கில் நிறுவப்பட்ட காசா ட இந்தியா என்ற அரச வணிக நிறுவனம் மேற்பார்வையிட்டு வந்தது. ஆண்டுதோறும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போர்த்துக்கேய இந்தியக் கப்பல் அணியை நிர்வகித்து வந்தது. இருப்பினும் 1560களில் காசாவின் நிதிநிலை மோசமடைய 1570இல் மன்னர் செபாஸ்டியன் இந்தியாவிற்கான வணிகத்தை மேற்கொள்ள அனைத்து போர்த்துகல் குடிமக்களுக்கும் உரிமை வழங்கினார். யாரும் முன்வராதநிலையில் 1578ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் காசா இந்தியாவிற்கான ஏகபோக வணிக உரிமத்தை தனியார் வணிகக் கூட்டமைப்புகளுக்கு வழங்கி வரலாயிற்று. ஆண்டு முழுமைக்குமான இந்த ஒபந்ந்த அமைப்பும் 1597இல் புறக்கணிக்கப்பட்டு அரச ஏகபோகம் தொடர்ந்தது.

1580இல் ஏற்பட்ட ஐபீரிய ஒன்றியத்தின்படி இசுப்பானியாவின் மன்னர் பிலிப் II போர்த்துக்கல்லின் முடிமன்னர் ஆனார் 1598க்குப் பின்னர் ஆசிய வணிகத்திலும் போர்த்துக்கேய பேரரசின் உடமைகளிலும் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிகளின் ஆக்கிரமிப்பால் போர்த்துக்கல்லின் நிலையை உறுதிப்படுத்த மன்னர் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 1605இல் Conselho da Índia என்ற மன்றத்தை நிறுவி போர்த்துகேய இந்தியாவை ஆப்ஸ்பர்க் முடியாட்சியின் நேரடி மேற்பார்வைக்கு கொண்டு வந்தார். இது முந்தைய போர்த்துக்கேய ஆணையங்களுடன் குறுக்கிட்டதால் 1614ஆம் ஆண்டில் இந்த மன்றத்தையும் கலைத்தார்.

நிறுவனம்

தொகு

ஆகத்து 1628ஆம் ஆண்டில் இறுதியாக மன்னர் பிலிப் III (இசுப்பானியாவின் IV ) வழங்கிய தனியுரிமையின்படி Companhia do commércio da Índia (அல்லது Companhia da Índia Oriental) செயலுக்கு வந்தது. இந்தக் கம்பனியின் நிர்வாகம் தலைவர் (ஜார்ஜ் மஸ்காரென்ஹாஸ்) ஒருவருடைய வழிகாட்டுதலில் முதலீட்டாளர்களின் ஆறு நிர்வாகிகளுடன் அமைக்கபட்ட பொது இயக்குநர் வாரியத்தின் (Câmara de Administração Geral) கட்டுபாட்டில் இயங்கியது. இந்த வாரியத்திற்கு முழு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தோதும் இவை, நீதி மன்ற செயல்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நிதி ஆளுமை ஆகியன மாட்ரிட்டில் இருந்த மன்னரது அவையின் வணிக வாரியத்திற்கு (Conselho do Comércio) பொறுப்பானது. தனியுரிமை சான்றிதழின்டி முழு மாற்றமடையக் கொடுக்கபட்ட இரண்டாண்டுகள் வரை வேந்திய நிதி அவை (Conselho da Fazenda) போர்த்துகேய இந்திய கப்பல் அணிகளையும் காசா ட இந்தியா மற்றும் இந்தியக் கிடங்குகளை இணையாக நிர்வகித்தது. கம்பனி காசாவில் சுங்கத் தீர்வைகளை வசூலித்தும் தினப்படி நிர்வாகத்தையும் கண்காணித்து வந்தது

ஆறாண்டு கூட்டு்ப் பங்குகளுடன் நிறுவப்பட்ட கம்பனியின் பங்குகளை, குறைந்தது 100 பங்குகளுடன் (cruzados) மேலும் ஆறு ஆண்டுகளுக்கு வாங்க முடியும். இந்த நிறுவனத்திற்கு பவளம், மிளகு, இலவங்கம், கருங்காலி மற்றும் கடற் கிளிஞ்சல்கள் வணிகத்தில் ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. தவிர டச்சு, ஆங்கிலேய கப்பல்களிடமிருந்து சூறையாடியவற்றைத் தக்க வைத்துக் கொள்ளவும் பிற நிர்வாக நீதித்துறை அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது.

மூன்றாண்டுகளுக்கு உறுதியளித்த 1,500,000 குருசடோக்களுடன் மன்னரே பெரும் முதலீட்டாளராக விளங்கினார் லிஸ்பன் போன்ற சில நகராட்சிகளும் முதலீடு செய்தன. தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. எனவே இதனை கவர்ச்சிகரமாக்க பங்கு ஈட்டைத்தவிர உறுதியான 4% ஆண்டு வட்டியும் வேறுசில சிறப்புரிமைகளும் (அரசவையில் பட்டம், கடன் கைப்பற்றுகையிலிருந்து விலக்கு) வழங்கப்பட்டன. மேலும் இசுப்பானியா,இத்தாலி நாட்டினரும் முதலீடு செய்ய அனுமதிக்கப் பட்டனர். இருப்பினும் தனிநபர் முதலீட்டை ஈர்க்க இயலவில்லை. துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பாதியுடனேயே கம்பனி செயல்படத் துவங்கியது.

முடிவு

தொகு

போர்த்துக்கேய கிழக்கிந்திய கம்பனி வெற்றி பெறவில்லை. முதலீட்டாளர்கள் ஐயத்துடனேயே இருந்தனர்; வெளிநாட்டு போர்த்துக்கேய வணிகர்கள் புதிய நிறுவனத்தின் அதிகாரங்களை ஏற்கவில்லை; ஆங்கில-டச்சு நிறுவனங்களின் ஆதிக்கம் ஓங்கியதால் நறுமணப் பொருள் வணிக இலாபங்கள் சுருங்கின. இறுதியில் 1633ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்பனி திவாலானது.[1] காசா ட இந்தியாவும் இந்திய வணிகமும் மீண்டும் வேந்திய நிதி அவையின் கீழ் கொணரப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Bethencourt, Francisco (2007). Portuguese Oceanic Expansion, 1400-1800. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521846448. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு