மகி கந்தா முகமை

மகி கந்தா முகமை (Mahi Kantha) பிரித்தானிய இந்தியாவிற்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கும் பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இந்த முகமை பம்பாய் மாகாணத்தின் ஆளுநரின் கீழ் செயல்பட்டது. 1933-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமையை மேற்கு இந்தியா முகமையுடன் இணைக்கப்பட்டது. [1]1901-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமையின் பரப்பளவு 8094 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 3,61,545 ஆக இருந்தது.

Warning: Value not specified for "common_name"
மகி கந்தா முகமை
பிரித்தானிய இந்தியாவின் முகமை
1820–1933
Location of
Location of
தற்கால குஜராத் மாநிலத்தில் மகி கந்தா முகமையின் வரைபடம்
தலைநகரம் சாத்ரா, காந்திநகர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1820
 •  மேற்கிந்திய சமஸ்தானங்களின் முகமை 1933
பரப்பு
 •  1901 8,094 km2 (3,125 sq mi)
Population
 •  1901 3,61,545 
மக்கள்தொகை அடர்த்தி 44.7 /km2  (115.7 /sq mi)

வரலாறு தொகு

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், 1811-ஆம் ஆண்டு முதல் மேற்கு இந்தியாவில் மராத்தியப் பேரரசு வலு இழந்த காலத்தில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் பரோடா இராச்சியம் மற்றும் மகி கந்தா பகுதிகளிலுள்ள இராச்சியங்களிடமிருந்து திறை வசூலித்தனர். துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மகி கந்தா பகுதி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மகி கந்தா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. முதல் நிலை முதல் நான்காம் நிலை மகி கந்தா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1933-ஆம் ஆண்டில் மகி கந்தா முகமை மற்றும் பனஸ்கந்தா முகமை மற்றும் பாலன்பூர் முகமைகள் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த முகமை பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மகி கந்தா முகமை கலைக்கப்பட்டது. மகி கந்தா முகமையில் இருந்த இராச்சியங்கள் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

மகி கந்தா முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்கள் தொகு

 
மகி கந்தா முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களும்

வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் தொகு

முதல் நிலை சமஸ்தானம் தொகு

இரண்டாம் நிலை சமஸ்தானம் தொகு

துப்பாக்கி குண்டுகள் மரியாதை இல்லாத சுதேச சமஸ்தானங்கள் தொகு

மூன்றாம் நிலை சுதேச சமஸ்தானங்கள் தொகு

  • மால்பூர் சமஸ்தானம்
  • மானசா சமஸ்தானம்
  • மோகன்பூர்

நான்காம் நிலை சுதேச சமஸ்தானங்கள் = தொகு

  • இலோல் சமஸ்தானம்
  • கோரசார் சமஸ்தானம்
  • கடோசன் சமஸ்தானம்
  • காதால் சமஸ்தானம்
  • பெத்தப்பூர் சமஸ்தானம்
  • வல்லபிபூர் சமஸ்தானம்
  • ராணாசன் சமஸ்தானம்
  • நவ சுதாசனா சமஸ்தானம்
  • வர்சோடா சமஸ்தானம்
  • அம்பிலியாரா சமஸ்தானம்
  • அண்ட்ரோலி சமஸ்தானம்

ஐந்தாம் நிலை சுதேச சமஸ்தானங்கள் தொகு

  • அக்லோடி சமஸ்தானம்
  • தபா சமஸ்தானம்
  • தாதாலியா சமஸ்தானம்
  • கெட் சமஸ்தானம்
  • மகோதி சமஸ்தானம்
  • ரூபால் சமஸ்தானம்
  • சதம்பா சமஸ்தானம்
  • தூந்தர் சமஸ்தானம்
  • வலஸ்னா சமஸ்தானம்
  • வாஸ்னா சமஸ்தானம்
  • வதாகம் சமஸ்தானம்

ஆறாம் நிலை & ஏழாம் நிலை சுதேச சமஸ்தானங்கள் தொகு

 
மகி கந்தா முகமை, 1878

விஜயநகர சமஸ்தானம் உள்ளிட்ட 14 ஆறாம் நிலை சுதேச சமஸ்தானங்களும், 12 ஏழாம் நிலை சுதேச சமஸ்தானங்களும் இருந்தன.

ஜமீதார்கள் தொகு

பல ஜமீன்தார்கள் பரோடா இராச்சியத்த்தினர் மூலம் பிரித்தானிய இந்தியாவின் மகி கந்தா முகமைக்கு திறை செலுத்தினர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Arnold Wright ed. Indian States: A Biographical, Historical, and Administrative Survey. 1922.
  2. ADMINISTRATION (1884) (in en). b omby n presidency. https://books.google.com/books?id=OX4IAAAAQAAJ&q=Koli+Thakors&pg=PA89. 

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகி_கந்தா_முகமை&oldid=3388344" இலிருந்து மீள்விக்கப்பட்டது