தாந்தா சமஸ்தானம்

தாந்தா சமஸ்தானம் (Danta State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாந்தா சமஸ்தானம் 898.73 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18,000 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

தாந்தா சமஸ்தானம்
દાંતા રિયાસત
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1061–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1061
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1901 18,000 
தற்காலத்தில் அங்கம் பனஸ்கந்தா மாவட்டம், குஜராத், இந்தியா
தந்தா சமஸ்தானக் கொடி

வரலாறு

தொகு

1817-ஆம் ஆண்டு வரை மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த தாந்தா சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தந்தா சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தில் இது மகி கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. தாந்தா சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தாந்தா சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் இணைக்கப்பட்டது.[1][2] 1 மே 1960 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தாந்தா சமஸ்தானம், புதிய குஜராத்] மாநிலத்தில் பனஸ்கந்தா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Divanji, R.B. (1934). Report on the Administration of the Danta State for the Year 1933-34. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
  2. Gujarat State Gazetteers. Ahmadabad: Government of Gujarat. 1981. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாந்தா_சமஸ்தானம்&oldid=3378513" இலிருந்து மீள்விக்கப்பட்டது