வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)


வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) (North-West Frontier Province) (NWFP), பிரித்தானிய இந்தியாவில் 1901 முதல் 1947 முடிய இருந்த முன்னாள் மாகாணம் ஆகும். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக 1955 முடிய இருந்தது. பின்னர் இம்மாகாணத்தை கலைத்து விட்டனர். 19 ஏப்ரல் 2010 அன்று மீண்டும் இப்பகுதிக்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயர் சூட்டப்பட்டது. [1]

வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
பிரித்தானிய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் மாகாணம் பாகிஸ்தான்
9 நவம்பர் 1901–14 அக்டோபர் 1955

Flag of வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)

கொடி

Location of வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
Location of வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை காட்டும் வரைபடம்
தலைநகரம் பெஷாவர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 9 நவம்பர் 1901
 •  Disestablished 14 அக்டோபர் 1955
பரப்பு 70,709 km2 (27,301 sq mi)
Government of Khyber Pakhtunkhwa

பாகிஸ்தானின் வடமேற்கில் இமயமலையில் அமைந்த இம்மாகாணம் 70,709 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்டது. இதன் தலைநகரம் பெஷாவர் நகரம் ஆகும்.

வரலாறு தொகு

பிரித்தானியர்கள் 1849ல் ஆப்கானியர்களிடமிருந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைக் கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர். [2]

மாகாண எல்லைகள் தொகு

1947க்கு முன்னர் வரை வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் வடக்கில் மன்னர் அரசுகளும், வடகிழக்கில் கில்ஜித் முகமையும், கிழக்கில் மேற்கு பஞ்சாபும், தெற்கில் பலுசிஸ்தான் மாகாணமும், வடமேற்கில் ஆப்கானித்தனும் எல்லைகளாகக் கொண்டது.

மக்கள் தொகையியல் தொகு

1998ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,75,55,000 ஆகும். இங்கு இசுலாமிய பழங்குடி பஷ்தூ மொழி பேசும் பஷ்தூன்கள் பெரும்பான்மை இனத்தவராக உள்ளனர். மேலும் சிறிதளவில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் உள்ளனர். இப்பகுதியில் அலுவல் மொழி பாரசீக மொழி ஆகும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு