வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP) பிரித்தானிய இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் 1901 - 1955 வரை வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) இருந்தது. பின்னர் இம்மாகாணம் 1955 முதல் 1970 வரை கலைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1970ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010) நிறுவப்பட்டது. 2010ல் இம்மாகாணத்தின் பெயரை கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது.
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010) صوبہ سرحد | |||||
மாகாணம் பாகிஸ்தான் | |||||
| |||||
கொடி | |||||
பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா எனும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 9 நவம்பர் 1901 | |||
• | கைபர் பக்துன்வா மாகாணம் | 15 ஏப்ரல் 2010 | |||
பரப்பு | |||||
• | 1901 | 70,709 km2 (27,301 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 3,05,23,371 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 431.7 /km2 (1,118 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | கைபர் பக்துன்வா மாகாணம் | ||||
www |
19 ஏப்ரல் 2010 முதல் இம்மாகாணத்திற்கு வடமேற்கு எல்லைப்புற மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. நிறுவப்பட்டது. 15 ஏப்ரல் 2010 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது.[1]
70,709 சகிமீ பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் அம்பு அரசு (Amb State), சித்ரால் அரசு (Chitral princely state), தீர் அரசு (State of Dir) மற்றும் புல்ரா அரசுகள் (Phulra princely state), ஸ்வத் அரசு (Swat State) போன்ற சுதேச சமஸ்தானங்கள் தவிர கைபர் பக்துன்வாவின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரமாக பெசாவர் நகரம் விளங்கியது.
இம்மாகாணம் பெசாவர் கோட்டம், தேரா இஸ்மாயில் கான் கோட்டம் மற்றும் மலாகண்ட் கோட்டங்களைக் கொண்டிருந்தது.
1947 வரை இம்மாகாணம், வடக்கில் ஐந்து சமஸ்தானங்களையும், வடகிழக்கில் ஜில்ஜிட் முகமையும், கிழக்கில் மேற்கு பஞ்சாபும், தெற்கில் பலுசிஸ்தானையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இதன் வடமேற்கில் ஆப்கானித்தான் இராச்சியத்தின் பழங்குடிகள் முகமையும் இருந்தது.
வரலாறு
தொகு1761ல் மராத்தியர்களுக்கும், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானிக்கும் நடைபெற்ற மூன்றாம் பானிபட்டு போரில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஆப்கானியப் படைகள் வென்றது. கிபி 1820 நூற்றாண்டு முதல் இம்மாகாணம், சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்து, ஆப்கானிய துராணிப் பேரரசில் சென்றது.
1848-1849ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரின் முடிவில் பஞ்சாபை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கைப்பற்றியபோது, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் எல்லைப்புற பழங்குடிகள் பகுதிகள், ஆப்கானித்தானிற்கும் - பஞ்சாபிற்கிடையே போர் நிறுத்த மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
1901ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியினர் இப்பகுதியை, முதலில் 1901ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் எனப்பெயரிட்டனர்.
1947ல் இந்தியப் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக விளங்கியது.
பின்னர் பஷ்தூன் பழங்குடி மக்களின் கோரிக்கையின் படி, இம்மாகாணத்திற்கு 15 ஏப்ரல் 2010ல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்ட்து.
மக்கள்தொகை
தொகு1998ம் ஆண்டில் மக்கள்தொகை 17,743,645 ஆக இருந்தது. 2017ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 30,523,371 ஆகும்.[2][3] மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.89% உயர்ந்துள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NWFP to KPK". www.insightonconflict.org/.
- ↑ "132 million in 1998, Pakistan’s population now reaches 207.7 million: census report" (in en-us). ARYNEWS. https://arynews.tv/en/pakistan-population-reaches-207-7-million-census/.
- ↑ http://ww2.pbscensus.gov.pk/content/press-release-provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0[தொடர்பிழந்த இணைப்பு]