துராணிப் பேரரசு

துராணிப் பேரரசு (Durrani Empire) (பஷ்தூ: د درانیانو واکمني), ஆப்கானின் இறுதி பேரரசு என்பர்.[4] இப்பேரரசை 1747இல் காந்தாரத்தை தலைநகராகக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நிறுவியவர் அகமது ஷா துரானி ஆவார். [5][6]

துராணிப் பேரரசு
د درانیانو ټولواکمني
1747–1826
துராணிப் பேரரசு
துராணிப் பேரரசு
தலைநகரம்கந்தகார்
(1747–1776)
காபூல்
(1776–1823, 1839–1842)
பெஷாவர்
(1776–1818; (குளிர்கால தலைநகர்)[1][2]
ஹெறாத் நகரம்
(1818–1826)[3]
பேசப்படும் மொழிகள்பஷ்தூ மொழி & பாரசீக மொழி
சமயம்
இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
ஷா 
• 1747–1772
அகமது ஷா துராணி(first)
• 1839–1842
சூஜா ஷா துராணி(last)
வரலாற்று சகாப்தம்நவீன காலத்திற்குச் சற்று முந்திய காலம்
• தொடக்கம்
1747
• முடிவு
1826
முந்தையது
பின்னையது
Afsharid dynasty
Mughal Empire
Maratha Empire
Khanate of Bukhara
Emirate of Afghanistan
Qajar dynasty
Sikh Empire
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 இந்தியா
 ஈரான்
 பாக்கித்தான்
 தஜிகிஸ்தான்
 துருக்மெனிஸ்தான்
 உஸ்பெகிஸ்தான்

துராணிப் பேரரசு, தற்கால ஆப்கானிஸ்தான், வடகிழக்கு இரான், கிழக்கு துருக்மேனிஸ்தான், பாகிஸ்தானின் பெரும் பகுதிகள் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளை, கி. பி 1747 முதல் கி. பி 1826 முடிய ஆட்சி செய்தது.

துராணிப் பேரரசின் பஷ்தூன் படைவீரர்கள் 1 மே 1746 மற்றும் 5 பிப்ரவரி 1762 அன்று ஆயிரக்கணக்கான பஞ்சாப் சீக்கியர்களை படுகொலை செய்தனர்.[7][8][9]தான் சார்ந்த பஷ்தூன் இன மக்களுடன், மேலும் பல்வேறு மலைவாழ் பழங்குடி மக்களின் ஆதரவைப் பெற்ற துராணி, பலூச் மக்களுடன் கூட்டு சேர்ந்து, ஆப்கான் நிலப்பரப்பை மேற்கில் கொரசான் முதல் கிழக்கில் காஷ்மீர் மற்றும் தில்லி வரையிலும், வடக்கில் அமு தாரியா முதல் தெற்கில் அரபியன் கடல் வரையும் ஆப்கான் நாட்டை விரிவு படுத்தினார். [10][11]

ஆப்கானின் படைகள் கஜினி மற்றும் காபூல் நகரங்களை உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியது.

1749இல் மொகலாயர் தற்கால பாகிஸ்தானையும், வடமேற்கு இந்தியாவின் ஆப்கானியர்களிடமிருந்து பறித்தது. அகமது ஷா மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரத்தை கைப்பற்றினான். அகமது ஷாவின் படைகள் இந்தியாவை நான்கு முறை தாக்கி காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினர். 1757ஆம் ஆண்டின் முற்பகுதியில், தில்லி மாநகரை தாக்கி, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் சிந்து பகுதிகளை கைப்பற்றி, மொகலாயப் பேரரசு பெயரளவில் இயங்க அனுமதிக்கப்பட்டது. [12]

1772இல் அகமது ஷா துராணி இறந்த பின், அவரது மகன் தைமூர் ஷா காபூலை அரசியல் தலைநகராகவும், சியால்கோட் நகரை குளிர்கால தலைநகராகவும் கொண்டார்.

துராணிப் பேரரசு, நிலையான நவீன ஆப்கானிஸ்தான் தேசிய அரசு அமைய அடித்தளமிட்டது.[13] எனவே அகமது ஷா அப்தாலியை ஆப்கானிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

அகமது ஷா அப்தாலியின் போர்கள் (1747–1772)

தொகு
  • மணிப்பூர் போர் (1748)
  • லாகூர் போர் (1752)
  • சப்சாவர் போர் (1755)
  • தில்லியை கைப்பற்றல் (1757)
  • கோஹல்வார் போர் (1757)
  • லாகூர் போர் (1759)
  • பராரி காட் போர் (1760)
  • இரண்டாம் சிக்கந்தரபாத் போர் (1760)
  • குஞ்ச்புராவை கைப்பற்றல் (1760)
  • குஜ்ஜரன்வாலா போர் (1761)
  • மூன்றாம் பானிபட் போர் 1761

மூன்றாம் பானிபட் போர்

தொகு
 
அகமது ஷா துரானி
 
13 சனவரி 1761இல் மராத்தியப் பேரரசின் படைகளை மொகலாயர் மற்றும் அகமது ஷா அப்தாலியின் கூட்டுப்படைகள் வென்று மொகலாயப் பேரரசை தில்லியில் நிலை நிறுத்தப்பட்டது. [14]

அவுரங்கசீப் இறந்த பிறகு இந்தியாவின் தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் செல்வாக்கை இழந்தது மொகலாயப் பேரரசு. பேஷ்வா பாலாஜி பாஜிராவுக்கும், மொகலாயப் பேரரசருக்கும் இடையே 1751-52ஆம் ஆண்டில் ஏற்பட்ட அகமதியா ஒப்பந்தப்படி மொகலாயர் ஆட்சியில் தில்லிப் பகுதி மட்டுமே இருந்தது. மொகலாயரின் பிற பகுதிகள் அனைத்தும் புனே தலைநகராகக் கொண்ட பேஷ்வாக்கள் ஆட்சியில் இருந்தது.

இந்நிலையில் மராத்தியர்கள் வடமேற்கு இந்தியாவை கைப்பற்ற முயன்ற போது, அகமது ஷா துராணி தில்லி மீது படையெடுத்து செல்வங்களை கொள்ளையடித்து விட்டு ஆப்கானிஸ்தான் திரும்பினார்.

ஆப்கானியர்களை பழி வாங்க, பேஷ்வா பாஜிராவால், அனுப்பப்பட்ட இரகுநாதராவ் தலைமையிலான மராத்தியப் படைகள் வடமேற்கு இந்தியாவின் ரோஹில்லர்களையும், ஆப்கானிய படைகளை வெற்றிக் கொண்டனர். லாகூர், முல்தான், காஷ்மீர் மற்றும் மொகலாயர்கள் ஆப்கானியர்களிடம் இழந்த பகுதிகளை மராத்தியப் பேரரசுடன் இணைத்தனர். [15].

இந்நிலையில் அகமது ஷா துரானி, மராத்தியப் பேரரசுக்கு எதிராக, பல்வேறு இசுலாமியக் குழுக்களை ஒன்று கூட்டி, 14 சனவரி 1761 அன்று, பானிபட் என்ற இடத்தில் மூன்றாம் பானிபட் போரை நிகழ்த்தினார். போரின் முடிவில் மராத்தியப் படை தோற்றது. மராட்டியர்கள் டில்லி மற்றும் பஞ்சாப் மீதுள்ள ஆட்சியுரிமையை ஆப்கானியர்களிடம் இழந்தனர். இருப்பினும் ஆப்கானியக் கூட்டுப் படைகளுக்கும் பலத்த சேதம் உண்டானதால், மேற்கு இந்தியாவில் சீக்கியப் பேரரசு எழுச்சி கண்டது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் புக்காராவில் அகமது ஷாவின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் தோண்றியது.

துராணிப் பேரரசின் வீழ்ச்சி

தொகு

1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் வென்ற துராணி பேரரசுக்கு பெரும்புகழ் கிட்யது. பின்னர் 1762இல் பஞ்சாப் பகுதியின் குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து சீக்கியப் பேரரசை அமைத்தனர். 1762இல் சீக்கியப் பேரரசை எதிர்த்து ஆறு முறை அகமது ஷா போரிட்டதால், துராணிப் பேரரசின் வலிமை குன்றியது.[16]லாகூரைத் தாக்கிய பின் சீக்கியர்களின் புனித அமிர்தசரஸ் நகரத்தையும், ஹர்மந்திர் சாகிப் என்ற பொற்கோயிலை இடித்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்களையும் படுகொலை செய்தனர். [17] இப்படுகொலை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு ஆண்டுக்குள், சீக்கியர்கள் மீண்டும் பொற்கோயிலை கட்டி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்று சேர்ந்து, ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் சீக்கியப் பேரரசு நிறுவினர்.

சீக்கியப் பேரரசின் எழுச்சியாலும், அகமது ஷா அப்தாலிக்கு பின்னர் வந்த துராணி அரசர்களின் வலிமையின்மையாலும், உள்நாட்டு போர்களாலும், பிரித்தானிய ஆங்கிலேயர்களாலும் 1826இல் துராணிப் பேரரசு வீழ்ச்சி கண்டது.

பேரரசின் பிற ஆட்சியாளர்கள் (1772–1826)

தொகு
 
காந்தார நகரம், ஆண்டு 1839-1842
  1. தைமூர் ஷா 1772–1793
  2. ஷாமன் ஷா 1793–1801
  3. முகமது ஷா 1801–1803 & 1809–1818
  4. சூஜா ஷா 1803–1809 & 1839–1842
  5. சுல்தான் அலி ஷா 1818–1819
  6. அயூப் ஷா 1819–1823


இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Hanifi, Shah Mahmoud. "Timur Shah transferred the Durrani capital from Qandahar in 1775-76. Kabul and Peshawar then shared time as the dual Durrani capital cities, the former during the summer and the latter during the winter season." p. 185. Connecting Histories in Afghanistan: Market Relations and State Formation on a Colonial Frontier. Stanford University Press, 2011. Retrieved 2012-08-04.
  2. Singh, Sarina (2008). "Like the Kushans, the Afghan kings favoured Peshawar as a winter residence, and were aggrieved when the upstart Sikh kingdom snatched it in 1818 and levelled its buildings." p. 191. Pakistan and the Karakoram Highway. Retrieved 2012-08-10.
  3. L. Lee, Jonathan (1996). The Ancient Supremacy: Bukhara, Afghanistan and the Battle for Balkh, 1731-1901 (illustrated ed.). BRILL. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004103996. பார்க்கப்பட்ட நாள் March 8, 2013. [The Sadozai kingdom] continued to exist in Herat until the city finally fell to Dost Muhammad Khan in 1862.
  4. "Last Afghan empire". Louis Dupree, Nancy Hatch Dupree and others. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  5. "Aḥmad Shah Durrānī". Encyclopædia Britannica. 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  6. "Afghanistan (Archived)". John Ford Shroder. University of Nebraska. 2010. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2010-03-21.
  7. ^ Khushwant Singh, A History of the Sikhs, Volume I: 1469-1839, Delhi, Oxford University Press, 1978, pp. 144-45.
  8. ^ According to the Punjabi-English Dictionary, eds. S.S. Joshi, Mukhtiar Singh Gill, (Patiala, India: Punjabi University Publication Bureau, 1994) the definitions of "Ghalughara" are as follows: "holcaust, massacre, great destruction, deluge, genocide, slaughter, (historically) the great loss of life suffered by Sikhs at the hands of their rulers, particularly on 1 May 1746 and 5 February 1762" (p. 293).
  9. Syad Muhammad Latif, The History of Punjab from the Remotest Antiquity to the Present Time, New Delhi, Eurasia Publishing House (Pvt.) Ltd., 1964, p. 283; Khushwant Singh, A History of the Sikhs, Volume I: 1469-1839, Delhi, Oxford University Press, 1978, p. 154.
  10. http://www.khyber.org/books/pdf/ahmad-shah-baba.pdf
  11. "The Durrani dynasty". Louis Dupree, Nancy Hatch Dupree and others. Encyclopædia Britannica Online. 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-10-01.
  12. "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on Afghanistan. 1997. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  13. "Afghanistan". CIA. The World Factbook. Archived from the original on 2016-07-09. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  14. S. M. Ikram (1964). "XIX. A Century of Political Decline: 1707–1803". In Ainslie T. Embree. Muslim Civilization in India. New York: Columbia University Press. Retrieved 5 November 2011.
  15. Roy, Kaushik. India's Historic Battles: From Alexander the Great to Kargil. Permanent Black, India. pp. 80–1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7824-109-8.
  16. Meredith L. Runion The History of Afghanistan pp 71 Greenwood Publishing Group, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313337985
  17. Purnima Dhavan, When Sparrows Became Hawks:The Making of the Sikh Warrior Tradition, 1699, (Oxford University Press, 2011), 112.

மேற்கோள்கள்

தொகு
  • Malleson, George Bruce (1879) History of Afghanistan, from the Earliest Period to the Outbreak of the War of 1878 W.H. Allen & Co., London, OCLC 4219393, limited view at Google Books
  • Singh, Ganda (1959) Ahmad Shah Durrani: Father of Modern Afghanistan Asia Publishing House, London, OCLC 4341271
  • Fraser-Tytler, William Kerr (1953) Afghanistan: A Study of Political Developments in Central and Southern Asia Oxford University Press, London, OCLC 409453
  • Tanner, Stephen (2002) Afghanistan : a military history from Alexander the Great to the fall of the Taliban Da Capo Press, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-81164-2, also available from NetLibrary
  • Elphinstone, Mountstuart 1779-1859 An account of the kingdom of Caubul, and its dependencies in Persia, Tartary and India : comprising a view of the Afghaun nation and a history of the Dooraunee monarchy.London : Printed for Longman, Hurst, Rees, Orme, and Brown, 1815. Available in digital formats from the Internet Archive Digital Library [1] [2]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துராணிப்_பேரரசு&oldid=4055013" இலிருந்து மீள்விக்கப்பட்டது