அகமது ஷா துரானி
அகமது ஷா துரானி (ஆங்கில மொழி: Ahmad Shah Durrani), (பஷ்தூ/பாரசீக மொழி: احمد شاه دراني) (கி.பி.1722–1773) ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் ஆவார். இவர் அகமது ஷா அப்தலி என்றும் அறியப்படுகிறார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[1][2][3][4] இவன் ஆப்கான்நாட்டின் அப்தலி என்ற இனக்குழவினைச் சார்ந்தவன். இவனது பிறப்பு குறித்துத் தெளிவான குறிப்பு இல்லை. ஆனால், கி. பி. 1773-ல் இறந்தான் என்று வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். அப்போது ஆப்கானிஸ்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
அஹமது ஷா துரானி | |||||
---|---|---|---|---|---|
சா, அமீர் | |||||
![]() அஹமது ஷா துரானியின் ஓவியம் | |||||
ஆட்சி | 1747–1772 | ||||
முடிசூட்டு விழா | அக்டோபர் 16, 1747 | ||||
முன்னிருந்தவர் | உசைன் கொடகி | ||||
பின்வந்தவர் | திமூர் சா துரானி | ||||
| |||||
மரபு | துரானி | ||||
அரச குலம் | துராணிப் பேரரசு | ||||
தந்தை | முகம்மது சமான் கான் அப்தாலி | ||||
தாய் | சர்க்குனா அலாகொசை | ||||
பிறப்பு | 1722 கெராட், ஆப்கானித்தான் | ||||
இறப்பு | 1773 (அகவை 50–51) கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் | ||||
சமயம் | சுன்னி இசுலாம் |
இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது. 14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார்.
துவக்கக் கால வாழ்க்கைதொகு
கி. பி. 1737-ல் பாரசீக மன்னன் நாதா்ஷா, ஆப்கானிசுதானத்தினை தன் ஆதிக்கத்திலிருந்த போது, ஏற்பட்ட கலகத்தை அடக்கியபொழுது, இவன் சிறை வைக்கப்பட்டான். ஆயினும் நாதா்ஷா, இவனுடய திறமையையும் ஒழுக்கத்தையும் வியந்து, அகமத்ஷாவை, தனது முக்கிய இராணுவ அதிகாாியாக ஆக்கினான். இவன் 1745-ல் பஞ்சாப் கவா்னராயிருந்த சக்காரியாகான் இறந்தபொழுது, பஞ்சாப் மீது படையெடுத்துப் பெசாவர், லாகூர், சிா்இந்து ஆகியனவற்றைக் கைப்பற்றினான்.[5]
மன்னராகுதல்தொகு
பாரசீகத்தின் நாதிர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுசாவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதன்பிறகு ஆப்கானித்தானின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இதன் பிறகு தனக்குத் தானே, 'துர்ர்-இ-துரான்', 'யுகத்தின் முத்து' என அறிவித்துக் கொண்டார். அதாவது பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். அதனால் அவரது வழித்தோன்றல்கள், 'அப்தலி' என்பதிலிருந்து, 'துரானி' என தங்களை அழைத்துக்கொண்டனர். 'துரானி' என்னும் சொல்லுக்கு முத்து என்று பொருள் ஆகும். இப்படியாக, துரானி வம்சம் தோன்றியது.
இந்திய பயணங்கள்தொகு
அரசனான பிறகு, அகமத்ஷா அப்தலி கி. பி. 1748 முதல் 1767 வரையிலான இடைபட்ட காலத்தில் பல முறை இந்திய பயணங்களைச் செய்தார். இந்த இந்தியப் பயணத்தின் போது, "இந்திய பேரரசின் பலவீனம், பேரரசருக்கான அயோக்கியத்தனம், அமைச்சர்களின் கவனக்குறைவு, பிரமாண்டங்கள் மத்தியில் அவர்களது வாழ்க்கைப் போக்கு போன்றவைகளைக் கொண்டு, இந்திய அரசியலை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். பல மதிப்பு மிக்க செல்வங்களை கொள்ளையடித்து, ஆப்கானில் இருந்த தனது அணியினருக்கு பரிசளித்தார். இதனால் இந்தியாவை குறித்த எண்ணங்கள், ஆப்கானில் மேலோங்கியது. இந்தியாவை நோக்கிய ஆப்கானிய படையெடுப்புக்கு இவரது செயல்கள் அடித்தளங்களாக அமைந்தன.
இந்திய படையெடுப்புகள்தொகு
முதல் முறையாக, கி. பி. 1748 சனவரியில், கந்தஹார், காபூல், பெசாவர் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிறகு, அஹ்மத் ஷா அப்தாலி 12,000 அனுபவம் வாய்ந்த படையினருடன் இந்தியா மீது படையெடுத்தார். ஆனால், முகலாயப்பேரரசின் வாரிசும், இறந்த வாசிர் கமர்-உத்-தினின் மகனான மீர் மன்னும் இணைந்து, மன்பூர் போரில் அகமது சா அப்தலியைத் தோற்கடிக்கத்தனர். மிர் மன்னு, பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது முறையாக, கி.பி 1750 இல், மிர் மன்னு குடியேறுவதற்கு முன் அகமத்சா அப்தாலி, பஞ்சாபின் மீது படையெடுத்து, அவரை தோற்கடித்து பஞ்சாபினைக் கைப்பற்றினார்.
மூன்றாவது முறையாக, கி.பி. 1751 ஆம் ஆண்டு திசம்பரில், அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்தார், அவர் மீண்டும் மிர் மன்னுவைத் தோற்கடித்து, காஷ்மீரைக் கைப்பற்றினார், மேலும், முகுல் பேரரசரை, சிர்ஹிந்த் வரையிலான, கிழக்கே உள்ள நாட்டை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் முகலாயப் பேரரசு மேலும் சிறிதானது. மிர் மன்னு இப்போது லாகூரில், அப்தாலி ஆளுநராகப் பொறுப்பேற்றார். பஞ்சாபின் உபரி வருவாயை வெற்றியாளருக்கு அனுப்புவதாகவும், அவரிடமிருந்து இறுதி உத்தரவு இல்லாமல் முக்கியமான விஷயங்களைப் பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் மிர் மன்னு உறுதியளித்தார்.
முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலம்கிர் I (கி.பி. 1754-1759) காலத்தில், அப்தாலி மற்றொரு இந்தியப் பயணத்திற்கு தலைமை தாங்கினார். நவம்பர், 1753 இல் மிர் மன்னுவின் மரணத்திற்குப் பிறகு, மே 1754 இல் மிர் மன்னு கைக்குழந்தை, எனவே, அடுத்து வாரிசான முகலானி பேகம் அரசி நடத்திய திறன்ற்ற ஆட்சியால், பஞ்சாப் மாகாணம் சீர்குலைந்து, சமூகக் குற்றங்கள் அதிகமானது. எனவே, அரசி உதவிக்காக டெல்லியின் சக்திவாய்ந்த இமாத்-உல்-முல்க் அழைத்தார். கி. பி. 1756 இல் பஞ்சாபை நோக்கி நாடாளும் பேராசையால் அணிவகுத்துச் சென்று, பஞ்சாபின் ஆளுநராக மிர்முனிம் (Mir Mun'im) என்பவரை நியமித்தார். இதனால் கோபமடைந்த அகமது அப்தாலி,
நான்காவது முறையாக, கி. பி. 1756 ஆம் ஆண்டு நவம்பரில், இந்தியாவின் மீது அதிக பலத்துடன் படையெடுத்து, 23 ஜனவரி 1757 அன்று டெல்லிக்கு வந்தடைந்தார். அந்த ஏகாதிபத்திய நகரம் கொள்ளையடித்தார். இமாத்-உல்-முல்க் சரணடைந்த்தால், படையெடுப்பாளரால் மன்னிக்கப்பட்டார். எனவே, முகுல் பேரரசரிடமிருந்து பஞ்சாப், காஷ்மீர், சிந்து மற்றும் சிர்ஹிந்த் மாவட்டத்தின் உயர் பதவிகளை தனது அணியினருக்காகப் பெற்றார். டெல்லிக்கு தெற்கே உள்ள, ஜாட் நாட்டைக் கொள்ளையடித்த பிறகு, 1757 ஏப்ரலில் அப்தாலி, அவரது மகன் திமூர் ஷாவை, லாகூரில் தனது வைசிராயாகவும், உடன் ஆப்கானிய தளபதிகளில் ஒருவரான சாகன்கானையும் விட்டுவிட்டு, இந்தியாவிலிருந்து ஏராளமான கொள்ளை பொருட்களுடனும், பல சிறைபிடிக்கப்பட்டவர்களுடனும், ஆப்கான் சென்றார். இவன் நான்காம் முறை படையெடுத்த போது, மதுரா, ஆக்ரா முதலிய இடங்களில் செய்த சேதங்கள் அளவிலடங்காது என வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.
கி. பி. 1757 ஆம் ஆண்டு மே முதல் ஏப்ரல் 1758 வரை, தைமூர் ஷாவின் நிருவாகம் முற்றிலும் சட்டமற்ற, ஒழுங்கற்ற காலமாக இருந்தது. சீக்கிய சமூகம், அதன் தலைவர்களில் ஒருவர் மீது நடத்திய தவறான நடத்தையால் கோபமடைந்தது. பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும், கிளர்ச்சிகள் எழுந்தன.
கி. பி. 1761-ல் முன்றாம் பானிப்பட் போரில், மகாராட்டிர்ரை வென்றான். அதுவே அவா்களுடைய வீழ்ச்சிக்கு வழி கோலியதாகும். டெல்லி மொகலாய சக்கரவா்த்தியான முகம்மதுஷாவின் பதினேழு வயது மகளான அசரத் பேகம் என்பவளை வற்புறுத்தி மணந்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. சீக்கியர்களின் விடுதலை எழுச்சிக்கு இவர் அடிகோலினார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Aḥmad Shah Durrānī". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online Version. 2010. 2010-08-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on ஆப்கானித்தான். 1997. 2010-09-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிரெட்ரிக் எங்கெல்சு (1857). "Afghanistan". Andy Blunden. The New American Cyclopaedia, Vol. I. 2010-09-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Clements, Frank (2003). Conflict in Afghanistan: a historical encyclopedia. ABC-CLIO. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781851094028. http://books.google.com/books?id=bv4hzxpo424C&lpg=PP1&pg=PA81#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2010-09-23.
- ↑ https://web.archive.org/web/20070813210837/http://www.afghan-network.net/Culture/ahmadshah.html