பேஷ்வா

மராத்திய பேரரசில் பிரதம அமைச்சர் கொடுக்கப்பட்ட பட்டம்


பேஷ்வா (ஆங்கிலம்: Peshwa; மராத்தி: पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். மராத்தியப் பேரரசர் சாகுஜி தான் முதன்முதலில் தனது மராத்திய பேரரசின் (தேசஸ்த் பிராமணர்), பேஷ்வா எனும் பிரதம அமைச்சர் பதவியில் 1713-இல் பாலாஜி விஸ்வநாத்தை அமர்த்தினார். தலைமை அமைச்சர்களான பேஷ்வாக்கள் பின்னர் மராட்டிய இராணுவத்தையும் கட்டுப்படுத்தினர். பேஷ்வாக்களின் பரம்பரையினர், மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் போர்ப்ப்டைத் தலைவர்களாகவும் செயல்பட்டனர்.

பேஷ்வா of மராத்தியப் பேரரசு
முன்னாள் மன்னராட்சி
மராத்தியப் பேரரசின் கொடி
முதல் மன்னர் சாகுஜி
கடைசி மன்னர் இரண்டாம் சாகுஜி
மன்னராட்சி துவங்கியது 1708
மன்னராட்சி முடிவுற்றது 1808

முகலாயப் பேரரசின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்களின் காலத்தில் மராத்தியப் பேரரசு வெற்றி கொண்டது. [1] சத்திரபதி சிவாஜியின் பேரனின் ஆட்சிக்காலத்திற்குப் பின் மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்கி, முகலாயர்களை வென்று, மராத்தியப் பேரரசை வட இந்தியாவில் விரிவாக்கினர்.

1857ல் சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான நானா சாகிப், மராத்தியக் கூட்டமைப்பின் இறுதி பேஷ்வாவான இரண்டாம் பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர்.

புகழ் பெற்ற பேஷ்வாக்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Peshwa, MARATHA CHIEF MINISTER

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேஷ்வா&oldid=4048976" இலிருந்து மீள்விக்கப்பட்டது