சாகுஜி
சத்ரபதி சாகுஜி போன்சலே (Shahuji Bhosle) (1682–1749) மராட்டியப் பேரரசின் நிறுவனரும், போன்சலே குல சத்ரபதி சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனும் 5வது மராட்டியப் பேரரசரும் ஆவார். 1689ல் தன் சிறு வயதில் சாகுஜி தன் தாயுடன் தில்லி முகலாயர்களின் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]
சாகுஜி | |
---|---|
5வது மராட்டிய சத்திரபதி | |
ஆட்சிக்காலம் | 12 ஜனவரி 1708 – 15 டிசம்பர் 1749 |
முடிசூட்டுதல் | 12 ஜனவரி 1708 சாத்தாரா நகரம் |
முன்னையவர் | இரண்டாம் சிவாஜி |
பின்னையவர் | இரண்டாம் இராஜாராம் |
பிறப்பு | 18 மே 1682 கங்குலி கோட்டை, மங்கோன் |
இறப்பு | 15 டிசம்பர் 1749 ரங்கமகால் அரண்மனை, சாத்தாரா |
துணைவர் | சாவித்திரிபாய் அம்பிகாபாய் |
மரபு | போன்சலே |
தந்தை | சம்பாஜி |
தாய் | யேசுபாய் |
மதம் | இந்து |
பின் இளைஞராக வளர்ந்த சாகுஜி 1708ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து சாத்தாராவிற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த சத்திரபதி இராஜாராம் – தாராபாய் இணையரின் மகனுமான இரண்டாம் சிவாஜியை, பெரும் பிணக்குகளுடன் பதவியிலிருந்து அகற்றி விட்டு தான் மராத்திய அரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [2][3]
சத்திரபதி சாகுஜி தனது ஆலோசனை கூறவும், மராத்தியப் படைகளை வழிநடத்தவும் பேஷ்வாக்களை நியமித்துக் கொண்டார்.
பேரரசின் விரிவாக்கம்
தொகுமராத்தியப் பேரரசின் முதல் பேஷ்வாவாக நியமிக்கப்பட்ட பாலாஜி விஸ்வநாத் மற்றும் மராத்திய கூட்டமைப்பின் இடைவிடாத முயற்சியால், வட இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[4]
சாகுஜியின் காலத்தில் அவரது படைத்தலைவர்களான ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா வம்சத்தவர்கள் குவாலியர் அரசு, இந்தூர் அரசு, பரோடா அரசுகளின் சிற்றரசர்களாக இருந்தனர்.[5]
பேஷ்வாக்களின் ஆதிக்கம்
தொகுசத்திரபதி சாகுஜியின் மறைவிற்குப் பின் வந்தவர்கள் பெயரளவிற்கு மராட்டிய சத்திரபதிகளாக இருந்தனர். அரசின் அனைத்து அதிகாரங்களும் சத்திரபதியின் பெயரில் பேஷ்வாக்களின் கையில் சென்றது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://archive.org/stream/rukaatialamgirio00aurarich#page/152/mode/2up%7C Rukaat-i-Alamgiri page 153
- ↑ A. Vijaya Kumari; Sepuri Bhaskar. "Social change among Balijas: majority community of Andhra Pradesh". MD. பார்க்கப்பட்ட நாள் 2011-06-24.
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-34-4.
- ↑ Stein, B. (2010). A history of India (Vol. 10). John Wiley & Sons page= 187
- ↑ Gordon, S. (1993). The Marathas 1600–1818 (Vol. 4). Cambridge University Press, pages 121–130.
- Imperial Gazetteer of India, v. 2, p. 441.
- Kasar, D.B. Rigveda to Raigarh making of Shivaji the great, Mumbai: Manudevi Prakashan, Rs. 165 (2005).
- Akkalkot, Solapur district gazette
வெளி இணைப்புகள்
தொகு- Family Tree of Shivaji Maharaj பரணிடப்பட்டது 2017-06-11 at the வந்தவழி இயந்திரம்
- Chhatrapati Shahu Maharaj பரணிடப்பட்டது 2017-06-19 at the வந்தவழி இயந்திரம்
- www.sambhajimaharaj.com