முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜில்ஜிட்-பால்டிஸ்தான் அல்லது நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்(ஆங்: Federally Administered Northern Areas, உருது: شمالی علاقہ جات) பாகிஸ்தானின் வடக்கில் அமைந்த ஓர் அரசியல் பிரிவு ஆகும். இப்பகுதியின் தலைநகரம் கில்கித். மொத்தத்தில் 1.5 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். 1970இல் இந்த அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டது. வடக்கில் ஆப்கானிஸ்தான், வடகிழக்கில் சீன மக்கள் குடியரசு, தென்கிழக்கில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைந்தன.

நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்
ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியின் கொடி பாகிஸ்தான் நிலப்படம், சிவப்பில் நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்.
தலைநகரம்
 • அமைவிடம்
கில்கித்
 • 35°21′N 75°54′E / 35.35°N 75.9°E / 35.35; 75.9
மக்கள் தொகை (2003)
 • மக்களடர்த்தி
1,500,000 (மதிப்பிடு)
 • 20.7/km²
பரப்பளவு
72 971 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் உருது (தேசிய)
ஷினா (ஆட்சி)
பல்ட்டி
வாக்கி
கஜுனா
கோவார்
பிரிவு சார்ப்பான பகுதி
 • மாவட்டங்கள்  •  6
 • ஊர்கள்  •  7
 • ஒன்றியச் சபைகள்  •  
தொடக்கம்
 • ஆளுனர்/ஆணையர்
 • முதலமைச்சர்
 • நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   ஜூலை 1, 1970
 • இம்ரான் அலி
 • இர்ஃபான் அலி, ஷஹீத் ஹுசேன்
 • வடக்கு நிலங்களின் சட்டமன்றம் (29)
இணையத்தளம் வளர்ச்சி வாயில்

1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சென்றன. மேற்குப் பகுதியானது ஆசாத் காஷ்மீர் என பாகிஸ்தானாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என இந்தியாவாலும் அழைக்கப்படும். இது பாகிஸ்தான் அரசுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக உள்ளது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க வடக்கு நிலங்கள் என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது.

1963 இல் பாகிஸ்தான் வடக்கு நிலங்கள் பகுதியிலிருந்து காரகோரம் பகுதியை சார்ந்த ஒரு பகுதியை சீன அரசிற்கு அளித்தது. உலகின் 2வது உயரமான கொடுமுடியான கே-2 & மற்றொரு உயரமான கொடுமுடியான நங்க பர்வதம் இங்கு உள்ளன.

Provincial symbols of the Gilgit-Baltistan
Animal Wild yak[1][2] Bzo.JPG
Bird Shaheen falcon[1][2] Shaheen Falcon (Falco peregrinus peregrinator) - Flickr - Lip Kee.jpg
Tree Himalayan oak[1][2] Karsu oak rings.jpg
Flower Granny's bonnet Aquilegia alpina1JUSA.jpg
Sport Yak polo Yak polo match.jpg


  1. 1.0 1.1 1.2 "Symbols of Gilgit-Baltistan". knowpakistan.gov.in. பார்த்த நாள் 14 August 2013.
  2. 2.0 2.1 2.2 "Gilgit-Baltistan Key Indicators". பார்த்த நாள் 14 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_நிலங்கள்&oldid=2741954" இருந்து மீள்விக்கப்பட்டது