காரகோரம் நெடுஞ்சாலை


காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram Highway (Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.; துவக்கத்தில் இதனை KKH என்றும், பின்னர N-35 அல்லது தேசிய நெடுஞ்சாலை 35 என்றும் சீன-பாகிஸ்தான் நட்புறவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்பட்டது). பட்டுப் பாதையில் அமைந்த காரகோரம் நெடுஞ்சாலை 1,300 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஹசன் அப்தால் எனுமிடத்திலிருந்து துவங்கி, லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத் வழியாக கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெசாவர் நகரத்தின் வழியாக, காஷ்மீரத்தின் வடக்கில் உள்ள ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியிலிருந்து, சீனாவின் தூரமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாநிலத்தின் கஷ்கர் நகரத்தை இணைக்கிறது.

வார்ப்புரு:Infobox road/shieldmain/பாகிஸ்தான்

வார்ப்புரு:Infobox road/name/பாகிஸ்தான்
காரகோரம் நெடுஞ்சாலை
வழித்தடத் தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை 1 & ஆசிய நெடுஞ்சாலை 4 இன் பகுதி
பராமரிப்பு பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் மற்றும் சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து துறை
நீளம்:1,300 km (810 mi)
பாகிஸ்தான்: 887 km (551 mi)
சீனா: 413 km (257 mi)
பயன்பாட்டு
காலம்:
1966 –
வரலாறு:1979-இல் முடிவுற்றது. பொதுப் போக்குவரத்திற்கு 1986 முதல் திறக்கப்பட்டது.
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சீனா கஷ்கர், சிஞ்சியாங், சீனா
சீன நெடுஞ்சாலை எண் 314, (குஞ்செரப் கணவாய்-கஷ்கர்-உரும்கி)
சீனாபாக்கித்தான் குஞ்செரப் கணவாய்
 35 N-35
N-15 N-15
தெற்கு முடிவு:பாக்கித்தான் ஹசன் அப்தால், பஞ்சாப்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:ஹரிபூர், ஆப்டாபாத், மன்செரா, பட்டாகிராம், பேஷம், பத்தான், தாசு, ஜில்ஜித்-பல்டிஸ்தான், சிலாஸ், கில்கித், ஆலியாபாத், குல்மித், சூஸ்த், தஷ்குர்கன், உபல், கஷ்கர்
நெடுஞ்சாலை அமைப்பு
வார்ப்புரு:Infobox road/browselinks/பாகிஸ்தான்

இது 4714 மீட்டர் உயரமுள்ள காரகோரம் மலைத்தொடரின் குஞ்செராப் கணவாய் வழியாகச் செல்லும் உலகின் உயரமான சாலை ஆகும்.[1][2]ஆசிய நெடுஞ்சாலை 4இன் ஒரு பகுதியாக காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது.

வரலாறு

தொகு
 
காரகோரம் நெடுஞ்சாலையின் வழித்தடம்
 
காஷ்மீரின் கில்கித் வழியாகச் செல்லும் காரகோரம் நெடுஞ்சாலையிலிருந்து, ராகபோசி கொடுமுடியின் காட்சி

அனைத்து தட்ப வெப்ப நிலைகளை தாங்கும் வகையில், காரகோரம் நெடுஞ்சாலைப் பணி 1959-இல் துவங்கி, 1979-இல் முடிவுற்றது. ஆனால் பொதுப் போக்குவரத்திற்கு 1986ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது. பாகிஸ்தான் பகுதியில் செல்லும் இந்நெடுஞ்சாலையை பாகிஸ்தான் நாட்டின் இராணுவ எல்லைச்சாலை அமைப்பினர் நிறுவினர்.[3]சீனப் பகுதியில் இந்நெடுஞ்சாலையை சீன இராணுவத்தினர் நிறுவினர்.

 
காரகோரம் நெடுஞ்சாலையில் செல்லும் சரக்கு வாகனம்

நெடுஞ்சாலைப் பயணம்

தொகு

பாகிஸ்தானின் இராவல்பிண்டி மற்றும் லாகூர் நகரங்களிலிருந்து கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கித்-பல்டிஸதான் பிரதேசத்தின் நகரங்களுக்கு பேருந்துச் சேவைகள் நடைபெறுகிறது.

கஷ்கர் முதல் கில்கித் வரை பேருந்துச் சேவை

தொகு

1 சூன் 2006 முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கித் முதல் சீனாவின் சிஞ்சியாங் மாநிலத் தலைநகரம் கஷ்கர் வரை, பொது மக்கள் பயணத்திற்கு பேருந்துச் சேவை நடத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Karakoram Highway
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரகோரம்_நெடுஞ்சாலை&oldid=4087352" இலிருந்து மீள்விக்கப்பட்டது