கொடுமுடி
கொடுமுடி (ஆங்கிலம்: Kodumudi), இந்தியாவின் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடி வட்டத்தில் உள்ளதொரு பேரூராட்சி ஆகும். கொடுமுடி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கொடுமுடி பேரூராட்சி | |
அமைவிடம் | 11°04′44″N 77°53′12″E / 11.078800°N 77.886700°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,225 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi) • 155 மீட்டர்கள் (509 அடி) |
குறிப்புகள்
|
அமைவிடம்
தொகுகொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் நாமக்கல் 42 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 40 கி.மீ.; தெற்கில் கரூர் 28 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு11.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 92 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,946 வீடுகளும், 13,225 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
தொகுகொடுமுடி 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E[6]-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 144 மீட்டர் ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. திருப்பாண்டிக் கொடுமுடி என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. <ref> கொங்கு மண்டல சதகம், பாடல் 12, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 10 </re
கோயில்கள்
தொகுபழக்க வழக்கங்கள்
தொகுகொடுமுடி, காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன், வன்னி இலைகள் கொண்ட காவடியுடன், பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.
புகழ்பெற்றவர்கள்
தொகு- கே. பி. சுந்தராம்பாள், பாடகி மற்றும் நடிகை.
போக்குவரத்து வசதிகள்
தொகுஇத்தலம், ஈரோடு - கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர, புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
- திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.
- கோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.
- மாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- கரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
- பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும்.
- சென்னை கோயம்பேட்டிலிருந்து கொடுமுடிக்கு பேருந்தும் உண்டு.
- காங்கேயத்திலிருந்து 40 km தொலைவில் அமைந்து உள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
தொகு- சென்னை - திருச்சி விமானநிலையம்
- சென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம்
கல்வி நிறுவனங்கள்
தொகு- சிந்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி
- எஸ். எஸ். வி மேல்நிலை பள்ளி, கொடுமுடி
- எஸ். எஸ். வி பெண்கள் மேல்நிலை பள்ளி, கொடுமுடி
- எஸ். எஸ். வி. உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி, சிவகிரி
- கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளி, சோளங்காபாளையம் - 638 154
- எஸ். எஸ். வி. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி
- ஸ்ரீ வள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி,
இச்சிப்பாளையம்
- ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி,
க. ஒத்தக்கடை
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொடுமுடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kodumudi Population Census 2011
- ↑ Falling Rain Genomics, Inc - Kodumudi