பாசூர்
பாசூர் (Pasur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பாசூர் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | ஈரோடு | ||||||
வட்டம் | கொடுமுடி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
3,670 (2011[update]) • 595/km2 (1,541/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 6.17 சதுர கிலோமீட்டர்கள் (2.38 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/pasur |
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி காவேரி ஆறு செல்கிறது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அமைவிடம்
தொகுபாசூர் பேரூராட்சி ஈரோடு - கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் ஈரோட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A வசதியும் உண்டு. முக்குடி வேலம் பாளையம் - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பழனி கவுண்டன் பாளையம் - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பாசூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pasur Population Census 2011