பர்ஸில் கணவாய்

பர்ஸில் கணவாய் (Burzil Pass) (உயரம்: 4,100 மீ (13,500 அடி) )[3] என்பது வடக்கு பாக்கித்தானில் உள்ள ஒரு பழங்கால கணவாய் ஆகும். இது சிறிநகர் மற்றும் கில்கித்-பல்திஸ்தான் இடையேயான வரலாற்று கேரவன் பாதையின் ஒரு பகுதியாகும்.வடக்கு நிலங்கள், ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றுக்கு இடையேயான நிர்வாகக் கோட்டிலிருந்து சுமார் 5 கி.மீ வடக்கே இந்தக் கணவாய் அமைந்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வடக்கே சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இது காஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் நடைமுறைப்படி எல்லையாக செயல்படுகிறது. இப்பகுதி இப்போது காஷ்மீர் மோதல் பிரதேசமாகவும், பிரிக்கப்பட்டதாகவும் இருப்பதால், பர்ஸில் பாதையின் சில முக்கிய பிரிவுகளை ( ஜம்மு காஷ்மீர் இராச்சியம்) பாக்கித்தான் மூடியுள்ளது. இந்த கணவாய்,கோடைகாலத்தில் பசுமையான ஆல்பைன் புல் தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. ஆஸ்டர் ஆறு கணவாயின் மேற்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது. [4]

பர்ஸில் கணவாய்
பாக்கித்தான் நிர்வாக காஷ்மீரில் பர்ஸில் கண்வாய் வழியாக செல்லும் பாதையின் ஒரு பகுதி
ஏற்றம்4,100 மீ (13,451 அடி)[1]
அமைவிடம்கில்கித்-பல்திஸ்தான், பாக்கித்தான்
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்34°54′00″N 75°06′00″E / 34.90000°N 75.10000°E / 34.90000; 75.10000[2]
பர்ஸில் கணவாய் is located in Gilgit Baltistan
பர்ஸில் கணவாய்
வடக்கு நிலங்களில் கண்வாயின் அமைவிடம்

முக்கியத்துவம்

தொகு

இது, கில்கித்தை சிறிநகர் மற்றும் ஸ்கர்டுடன் தியோசாய் பீடபூமி வழியாக இணைக்கும் மிகப் பழமையான பாதையாகும். பண்டைய காலத்தில் பயணிகள் குதிரையில் ஏறி இந்த வழியாக கணவாயை அதிகளவில் கடந்து சென்றதாக நம்பப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கணவாயின் முகப்பில் ஒரு கட்டிடம் அமைந்திருந்தது. அங்கு விரைதூதர் சேவையாளர்கள் பிரித்தானிய இந்தியாவிலிருந்து சீனாவிற்கு அஞ்சல் மற்றும் செய்திகளை வழங்கினர். [5]

அணுகல்

தொகு

கில்கித் நகரம் சிறீநகரிலிருந்து சுமார் 367 கிமீ (228 மைல்) தொலைவில் உள்ளது.[3] உளர் ஏரியின் வடக்குக் கரைக்கு மேலேயும், ஜம்மு காஷ்மீரின் குரூஸ் வழியாகவும் கண்வாயை சாலை வழியாக அடையலாம்.ref name="Bamzai">Bamzai, P. N. K. (1994). Culture and political history of Kashmir. Vol. 1. Ancient Kashmir. M D Publications. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-31-0. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.</ref> ஆஸ்தோரிலிருந்து கணவாய் வழியாக செல்லும் பாதை பின்வரும் முக்கிய புள்ளிகளைக் கடந்து செல்கிறது: கோரிகோட், ஆஸ்தோ ஆற்றுப் பாலம், மைக்கால் மலைகள், தாட் கிட்ரான், மற்றும் சிலம் சவுக்கி.

புத்தகங்களில் கணவாய்

தொகு
  • ஆய்வாளர் வில்லியம் டக்ளஸ் பர்டன் தனது லுக் டு தி வைல்டர்னஸ் என்ற புத்தகத்தின் "சாவேஜ் அபாதாபூர்" என்ற அத்தியாயத்தில் கணவாயைக் கடப்பதை விவரிக்கிறார். [6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Burzil Pass, a hairpinned climb in Pakistan". www.dangerousroads.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.
  2. GeoNames.org. "Burzil Pass".
  3. 3.0 3.1 Imperial Gazetteer of India. Provincial Series: Kashmir and Jammu (facsimile reprint). Adamant Media Corporation (original: Superintendent of Government Printing, Calcutta). 4 July 2001 [1909]. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-543-91776-8. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
  4. Sultana, K.; Muqarrab Shah; T.M.Upson (2007). "Altitudinal Distribution of Grasses, Sedges and Rushes of Deosai Plateau: Pakistan". The Electronic Journal of Environmental, Agricultural and Food Chemistry 6 (11): 2518. பன்னாட்டுத் தர தொடர் எண்:1579-4377. http://ejeafche.uvigo.es/index.php?option=com_docman&task=doc_view&gid=313&Itemid=33. பார்த்த நாள்: 2009-08-11. 
  5. "The Western Regions according to the Hou Hanshu, Chapter on the Western Regions from Hou Hanshu 88, The Kingdom of Wuyishanli 烏弋山離 (Kandahar, including Arachosia and Drangiana), 2nd ed". John Hill (translation, notes, appendices). September 2003.{{cite web}}: CS1 maint: others (link)
  6. Burden, W. Douglas (1956). Look to the Wilderness. Boston: Little, Brown and Company. pp. 145–165.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஸில்_கணவாய்&oldid=3777186" இலிருந்து மீள்விக்கப்பட்டது