கோடைகாலம்

கோடைகாலம் (Summer) நான்கு மிதவெப்ப பருவங்களில் மிகவும் வெப்பமானதாகும். வசந்த காலத்திற்குப் பின்னரும் இலையுதிர்காலத்திற்கு முன்னருமான காலத்தில் கோடைக்காலம் நிகழ்கிறது. கோடைக்கால நாள்கள் நீண்ட பகல் நேரமும் குறைந்த இரவு நேரமும் கொண்டிருக்கும். சங்கராந்தி எனப்படும் சூரியன் அதன் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச சரிவை அடையும் நேரம் அல்லது தேதியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பகால சூரிய உதயம் மற்றும் சமீபத்திய சூரிய மறைவு நிகழ்கிறது. சங்கிராந்திக்குப் பிறகு பருவம் முன்னேறும்போது பகல் நீளம் படிப்படியாகக் குறைகிறது. காலநிலை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்து கோடையின் தொடக்கத் தேதி மாறுபடுகிறது. வடக்கு அரைக்கோளத்தில் கோடைகாலமாக இருக்கும் போது தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலமாக இருக்கும்.

கோடைக்காலம்

காலம்தொகு

சம இரவு நாட்களும் சங்கிராந்தியும் அந்தந்த பருவங்களின் நடுப்பகுதியாக இருக்கும் என்கிறது வானியல் பார்வை.[1][2] ஆனால் சில சமயங்களில் கோடை காலம் என்பது அதிகபட்ச சரிவு நேரமான சங்கிராந்தியில் தொடங்குவதாக வரையறுக்கப்படுகிறது. அதிகபட்ச சரிவு நேரம் பெரும்பாலும் சூன் 21 ஆம் தேதி அல்லது டிசம்பருடன் அடையாளப்படுத்தப்படுகிறது. சூரியக் கணக்கீட்டின்படி கோடைகாலம் மே தினத்தில் தொடங்குகிறது. கோடைகால சங்கிராந்தியானது கோடைகாலத்தின் நடுப்பகுதியாக உள்ளது. பருவகாலப் பின்னடைவு என்பது குறிப்பிட்ட அப்பருவத்தின் மையத்தில் நிகழ்கிறது. இது சராசரி வெப்பநிலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது. அதிகபட்ச வெயில் காய்வுக்கு நேரத்திற்குப் பல வாரங்களுக்குப் பிறகு ஏற்படுகிறது.[3]

வடக்கு அரைக்கோளத்தில் சூன், சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் என்றும் தெற்கு அரைக்கோளத்தில் டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் என்றும் கோடைக்காலத்தை வானிலை மாநாடு வரையறுக்க வேண்டும்.[4][5] வானிலை வரையறைகளின் கீழ், அனைத்து பருவங்களும் தன்னிச்சையாக ஒரு காலண்டர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கி ஒரு மாத இறுதியில் முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.[4] பொதுவாகக் கோடை காலம் என்ற இந்தப் பருவம் சூரிய ஒளியை முதன்மையாகக் கொண்டு நீண்ட (வெப்பம் அதிகமான) பகல் பொழுதுகளைக் கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கமளிக்கிறது. இக்காலத்தில் பகல் வெளிச்சம் அதிமாக இருக்கும். ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஆசுதிரியா, டென்மார்க், உருசியா மற்றும் சப்பான் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலைகள் வானிலையியல் கணக்கீடு மூலம் கணக்கிடப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவிலும் இதே முறை பலரால் பயன்படுத்தப்படுகிறது. அயர்லாந்தில், தேசிய வானிலையியல் நிறுவனத்தின் படி கோடை மாதங்கள் சூன், சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் ஆகும். கோடைக்காலம் மே 1 ஆம் தேதி முதல் சூலை 31 ஆம் தேதி முடிவடைகிறது என்று ஐரிசு நாட்காட்டி குறிப்பிடுகிறது.[6]

 
கோடையின் நடுவில், வடக்கு அரைக்கோளத்தில் நள்ளிரவில் கூட சூரியன் தோன்றும். பின்லாந்தின் இனாரியில் நள்ளிரவு சூரியனின் புகைப்படம்

சம இரவு நாள் எனப்படும் உத்தராயணம் தொடங்கி சங்கிராந்தி வரை நாட்கள் நீண்டு கொண்டே செல்கிறது. சங்கிராந்திக்குப் பிறகு கோடை நாட்கள் படிப்படியாகக் குறையும். எனவே வானிலையியல் கோடை என்பது நீண்ட பகல் நேரமாக இருந்து அதன் பிறகு பட்டைப்படியாக குறைந்து வருகிறது. பகல் நேரங்களை மட்டும் கணக்கிட்டால் கோடையில் வசந்த காலத்தை விட பல மணிநேர பகல் நேரம் இருக்கும். கோடைகால சங்கிராந்தி பருவங்களின் தொடக்கத்தை அல்லாமல் நடுப்புள்ளியை குறிக்கிறது. ஆண்டின் மிகக் குறுகிய இரவு நேரம் கோடையின் நடுப்பகுதியில் நடைபெறுகிறது. கோடைகால சங்கிராந்தி அல்லது அருகிலுள்ள தேதியில் இது பாரம்பரியத்துடன் மாறுபடும். அரை பருவம் அல்லது அதற்கு மேற்பட்ட பருவகால பின்னடைவு பொதுவானதாக இருந்தால், வானியல் குறிப்பான்களின் அடிப்படையில் கணக்கீடு அரை பருவத்திற்கு மாற்றப்படுகிறது.[7] இந்த முறையால், வட அமெரிக்காவில், கோடை காலம் என்பது கோடைகால சங்கிராந்தியிலிருந்து (வடக்கு அரைக்கோளத்தில் பொதுவாக 20 அல்லது 21 சூன்) இலையுதிர் கால சம இரவு வரையிலான காலகட்டமாகும்.[8][9][10]

கோடை காலத்தை பண்பாட்டு விழாக்களின் அடிப்படையில் கணக்கிட்டால், அமெரிக்காவின் கோடை காலம் பாரம்பரிய நினைவு நாள் வார இறுதியில் (மே மாதத்தின் கடைசி வார இறுதி) தொடங்கி தொழிலாளர் தினத்தில் (செப்டம்பர் முதல் திங்கட்கிழமை) அன்று முடிவடைகிறது. நான்கு பருவ காலநிலை கொண்ட நாட்டின் பகுதிகள் வானிலை வரையறைக்கு ஏற்ப மிகவும் நெருக்கமானதாகவும் உள்ளது. இதேபோல கனடாவின் பரந்த பிரதேசம் முழுவதும் கோடை நிலைமைகள் பரவலாக மாறுபடும் என்றாலும் இங்கும் பாரம்பரியம் மிக்க விக்டோரியா தினத்தன்று கோடைகாலம் தொடங்குகிறது. அமெரிக்காவில் உள்ளது போல், தொழிலாளர் தினத்தில் முடிவடைகிறது.

பிரேசில், அர்கெந்தினா, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சில தெற்கு அரைக்கோள நாடுகளில், கோடைக்காலம் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. பல குடும்பங்கள் கோடையில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொள்கின்றன.

சீன வானவியலில், கோடை காலம் மே மாதம் 5 ஆம் தேதியன்று அல்லது அதைச் சுற்றி தொடங்குகிறது. இது கோடைகாலத்தை நிறுவுதல் என்ற பொருள் கொண்ட லாக்சியா என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. ஆகத்து மாதம் 6 ஆம் தேதி அல்லது அதைச் சுற்றி முடிவடைகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கோடை காலம் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மற்றும் சூன் மாதம் வரை நீடிக்கும். அங்கு இது ஆண்டின் வெப்பமான நேரமாகும்.

கடல்சார் மிதவெப்ப தெற்கு அரைகோளத்தில் வெப்பநிலை பின்னடைவு என்பது குறைவாக உள்ளது.[11] ஏனெனில் இந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோடைக்காலம் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாத கடைசி நாளில் முடிவடையும் காலநிலை வரையறையைப் பயன்படுத்துகின்றன.[12][13]

காலநிலைதொகு

 
ஆத்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள டார்வினில் ஈரமான காலநிலை இரவில் இடியுடன் கூடிய மழை.

கோடை என்பது பாரம்பரியமாக மிகுவெப்பம் அல்லது சூடான காலநிலையுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. மத்திய தரைக்கடல் காலநிலையில், இது வறண்ட வானிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்ற இடங்களில், குறிப்பாக கிழக்கு ஆசியாவில் பருவமழை காரணமாக இது மழை காலநிலையுடன் கொண்டுள்ளது. ஈரமான பருவம் சவன்னா காலநிலை பகுதியில் தாவர வளர்ச்சியின் முக்கிய காலமாகும்.[14] காற்றின் பருவகால மாற்றத்துடன் ஈரமான பருவம் தொடர்புடையதாக இருப்பதால் இது பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது.[15]

 
1992 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆகத்து மாதத்தில் ஏற்பட்ட லெசுட்டர் சூறாவளியின் படம்

வட அட்லாண்டிக் பெருங்கடலில் தனித்துவமான வெப்பப் புயல் காலமானது சூன் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கிறது.[16] அட்லாண்டிக் சூறாவளி பருவத்தின் புள்ளியியல் உச்சம் செப்டம்பர் 10 ஆம் நாளாகும். வடகிழக்கு பசிபிக் பெருங்கடல் இத்தகைய பரந்த அளவிலான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, ஆனால் அட்லாண்டிக்கிற்கு ஒத்த காலக்கெடுவில் உள்ளது.[17] வடமேற்கு பசிபிக் பெருங்கடல் வெப்பமண்டல சூறாவளிகளை ஆண்டு முழுவதும் காண்கிறது. குறைந்தபட்சம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் அதிக அளவில் செப்டம்பர் தொடக்கத்திலும் உச்சம் அடைகிறது. வட இந்தியப் படுகையில் பொதுவாகப் புயல்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சமும் அடைகின்றன.[16] தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமண்டல சூறாவளி பருவமானது நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் இறுதி வரையில் பொதுவாகவும் பிப்ரவரியின் நடுப்பகுதியிலும் மார்ச்சு மாத தொடக்கத்திலும் உச்சநிலையுடனும் இருக்கும்.[16][18]

அமெரிக்கா மற்றும் கனடாவில் இடியுடன் கூடிய மழைக்காலம் வசந்த காலம் முதல் கோடை முடியும் வரை நீடிக்கும். ஆனால் சில நேரங்களில் இலையுதிர்காலத்தின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை கூட நீடிப்பதுண்டு. இந்த புயல்கள் பொதுவாக மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் சூறாவளியை உருவாக்கலாம்.

விடுமுறை நாட்கள்தொகு

பள்ளி இடைவேளைதொகு

வெப்பமான வானிலை மற்றும் நீண்ட வெப்ப நாட்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பொதுவாக கோடை விடுமுறையை பயன்படுத்துகின்றன. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், கோடை விடுமுறைக்காக ஆண்டின் இந்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வெளியே இருக்கிறார்கள். இருப்பினும் சில நாடுகளில் தேதிகள் மாறுபடும். பல குடும்பங்கள் கோடைக்கு அப்புறமும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு விடுமுறை எடுக்கும். குறிப்பாக தெற்கு அரைக்கோள மேற்கு நாடுகளில் சட்டப்பூர்வ கிறித்துமசு மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் இருப்பது இதற்கான காரணமாகும்.

அமெரிக்காவில் பொதுப் பள்ளிகள் வழக்கமாக மே மாத இறுதியில் நினைவு தின வார இறுதியில் முடிவடையும். அதே நேரத்தில் கல்லூரிகள் மே மாத தொடக்கத்தில் முடிவடைகின்றன. பொதுப் பள்ளி பாரம்பரியமாக தொழிலாளர் தினத்திற்கு அருகில் மீண்டும் தொடங்குகிறது, அதே நேரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆகத்து மாத நடுப்பகுதியில் மீண்டும் தொடங்குகின்றன.

இங்கிலாந்து மற்றும் வேல்சு நாடுகளில் பள்ளி சூலை நடுப்பகுதியில் முடிவடைந்து செப்டம்பர் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும். இசுக்காட்லாந்தில், கோடை விடுமுறை சூன் பிற்பகுதியில் தொடங்கி ஆகத்து மாத நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரையிலான நாட்களில் முடிவடைகிறது. இதேபோல், கனடாவில் கோடை விடுமுறையானது சூன் மாதத்தின் கடைசி அல்லது இரண்டாவது-கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி ஆகத்து மாதத்தின் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்கிழமையில் முடிவடைகிறது, அந்த தேதி தொழிலாளர் தினத்திற்கு முன் வரும் போது தவிர, மற்ற நேரத்தில் மாதத்தின் இரண்டாவது செவ்வாய் அன்று முடிகிறது. உருசியாவில் கோடை விடுமுறை மே மாத இறுதியில் தொடங்கி ஆகத்து மாதம் 31 அன்று முடிவடைகிறது.

தெற்கு அரைக்கோளத்தில், பள்ளி கோடை விடுமுறை நாட்களில் கிறித்துமசு மற்றும் புத்தாண்டு தினத்தின் விடுமுறைகளும் அடங்கும். ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் பள்ளி கோடை விடுமுறைகள் திசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கி பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் முடிவடையும். தேதிகள் நாடுகளுக்கிடையில் மாறுபடும். தென்னாப்பிரிக்காவில், புதிய பள்ளி ஆண்டு பொதுவாக சனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது, இதனால் கல்வியாண்டு காலண்டர் ஆண்டுடன் ஒப்பிட்டு சீரமைக்கப்படுகிறது. இந்தியாவில், பள்ளி ஏப்ரல் பிற்பகுதியில் முடிந்து, சூன் மாதத்தின் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் மீண்டும் தொடங்கும். கேமரூன் மற்றும் நைசீரியாவில், பள்ளிகள் வழக்கமாக சூலை மாத நடுப்பகுதியில் கோடை விடுமுறையை முடித்து, செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கும்.

பொது விடுமுறைகள்தொகு

கோடை காலத்தில் பலவிதமான பொது விடுமுறைகள் வரும். அவை:

வடக்கு அரைக்கோளம்
 • ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் வங்கி விடுமுறைகள்.
 • பாசுட்டில் நாள், பிரான்சின் தேசிய தினம் (சூலை 14)
 • பெல்சிய தேசிய தினம் (சூலை 21)
 • கனடா தினம் (சூலை 1)
 • இத்தாலிய தேசிய தினம் மற்றும் குடியரசு தினம் (சூன் 2)
 • சுதந்திர தினம் (இயோர்டான்) (மே 25)
 • சுதந்திர தினம் (பாக்கித்தான்) (ஆகத்து 14)
 • சுதந்திர தினம் (இந்தியா) (ஆகத்து 15)
 • சுதந்திர தினம் (அமெரிக்கா) (சூலை 4)
 • தொழிலாளர் தினம் நினைவு நாள் (அமெரிக்கா) அல்லது விக்டோரியா தினம் (கனடா).
 • சுவீடனின் தேசிய தினம் (சூன் 6) மற்றும் நடு கோடை, சில நேரங்களில் "மாற்று தேசிய தினம்" என்று குறிப்பிடப்படுகிறது
 • பரோயே தீவுகள் (சூலை 29)
 • சுவிசு தேசிய தினம் (ஆகத்து 1)
 • வெற்றி நாள் (துருக்கி) (ஆகத்து 30)
தெற்கு அரைக்கோளம்

ஆத்திரேலியா தினம் (சனவரி 26) பல நாடுகளில் கிறித்துமசு தினம் (டிசம்பர் 25) மற்றும் குத்துச்சண்டை தினம் (டிசம்பர் 26). புத்தாண்டு தினம் (சனவரி 1) மற்றும் அடுத்த நாள் (சனவரி 2) பல நாடுகளில் நியூசிலாந்தில் வைத்தாங்கி தினம் (பிப்ரவரி 6).

செயல்பாடுகள்தொகு

 
கோடை காலம் என்பது பலருக்கு பொதுவாக பயணம், நீச்சல் போன்றவையாகும். மேலும் இது பழங்கள் மற்றும் தாவரங்கள் முழுமையாக வளரும் பருவமாகும்.
 
கோடையில் தென் கரோலினாவின் மர்டில் கடற்கரையில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரத்தில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்

மக்கள் பொதுவாக கோடையில் அதிக நேரம் வெளியில் செலவிடுவதன் மூலம் அதிக வெப்பநிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடற்கரைக்கு பயணம் செய்வது மற்றும் சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகள் கோடை மாதங்களில் நடக்கும். துடுப்பாட்டம், கால்பந்து, குதிரை பந்தயம், கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து, கைபந்து, மென்பந்து, தென்சிசு மற்றும் குழிப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் கோடை காலத்தில் விளையாடப்படுகின்றன.

நீச்சல், நீர் பனிச்சறுக்கு போன்ற பல நீர் விளையாட்டுகளும் இக்காலத்தில் விளையாடப்படுகின்றன. 1896 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை மாதங்களில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2000 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் சிட்னியில் வசந்த காலத்திலும், 2016 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி செனிரோவில் குளிர்காலத்திலும் நடைபெற்றன. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பள்ளிக்கு விடுமுறை என்பதால், குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கோடையில் வெளியிடப்படுகின்றன. பல பள்ளிகள் மூடப்பட்டு விடுவதால் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், கோடை காலத்தில் பயணம் மற்றும் விடுமுறைகள் உச்சமாக இருக்கும். இளவயதினர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும்பாலும் கோடைகால வேலைகளை மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கு, சுற்றுலா, உணவகம் மற்றும் சில்லறை வணிகத் தொழில்களுக்கான வணிக நடவடிக்கைகள் இக்காலத்தில் உச்சத்தை அடைகின்றன.

மேலும் வாசிக்கதொகு

மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோடைகாலம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 1. Ball, Sir Robert S (1900). Elements of Astronomy. London: The MacMillan Company. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4400-5323-8. https://books.google.com/books?id=sNSHRDu98k0C&pg=PA52. 
 2. Heck, Andre (2006). Organizations and strategies in Astronomy. 7. Springer. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-5300-9. https://books.google.com/books?id=YSsaxkeixH0C&pg=PA14. 
 3. Cecil Adams (1983-03-11). "Is it true summer in Ireland starts May 1?". The Straight Dope. 30 August 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 Meteorological Glossary. London: HMSO. 1991. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-11-400363-0. https://archive.org/details/meteorologicalgl0000grea. 
 5. "Professor Paul Hardaker answers questions on meteorological forecasting" பரணிடப்பட்டது 2 பெப்ரவரி 2017 at the வந்தவழி இயந்திரம். Royal Geographical Society.
 6. Ginenthal, Charles (9 December 2015). Pillars of the Past Volume Four. Lulu Press, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781329747944. https://books.google.com/books?id=0MdACwAAQBAJ&dq=irish+summer+%22may+june+and+july%22&pg=PT458. 
 7. Driscol, D. M.; Rice, P. B.; Fong, J. M. Y. (1994). "Spatial variation of climatic aspects of temperature: Interdiurnal variability and lag". International Journal of Climatology 14 (9): 1001. doi:10.1002/joc.3370140905. Bibcode: 1994IJCli..14.1001D. https://zenodo.org/record/1229243. 
 8. "First day of summer worth celebrating". JSOnline. 13 July 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Father's Day is first day of summer". Fox11online.com. 2009-06-19. 17 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Summer Solstice". Eric Weisstein's World of Astronomy. Scienceworld.wolfram.com. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 11. Gabler, Robert E.; Petersen, James F.; Trapasso, L. Michael; Sack, Dorothy (2008). Physical Geography. Belmont, California: Cengage Learning. பக். 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0495555061. 
 12. Williams, Jack (2005-02-22). "Answers: When do the seasons begin". Usatoday.Com. 27 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Bureau of Meteorology". Bom.gov.au. 2011-03-11. 12 September 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2011-09-27 அன்று பார்க்கப்பட்டது.
 14. Charles Darwin University (2009). Characteristics of tropical savannas. பரணிடப்பட்டது 17 பெப்ரவரி 2009 at the வந்தவழி இயந்திரம் Charles Darwin University. Retrieved on 27 December 2008.
 15. Glossary of Meteorology (2009). Monsoon. பரணிடப்பட்டது 22 மார்ச் 2008 at the வந்தவழி இயந்திரம் American Meteorological Society. Retrieved 16 January 2009.
 16. 16.0 16.1 16.2 Atlantic Oceanographic and Meteorological Laboratory, Hurricane Research Division. "Frequently Asked Questions: When is hurricane season?". National Oceanic and Atmospheric Administration. 18 July 2006 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
 17. McAdie, Colin (10 May 2007). "Tropical Cyclone Climatology". National Hurricane Center. 6 May 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 June 2007 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Tropical Cyclone Operational Plan for the Southeastern Indian Ocean and the South Pacific Oceans" (PDF). World Meteorological Organization. 10 March 2009. 25 March 2009 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடைகாலம்&oldid=3581123" இருந்து மீள்விக்கப்பட்டது