மலைத் தொடர்

புவியியல் சார்ந்த பல மலைகளைக் கொண்ட புவியியல் பகுதி

ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட மலைகளின் தொடர்ச்சியே மலைத்தொடர் (mountain range) எனப்படும். இவை இணைக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் ஒரே வகைப் பாறையாலோ மண்ணாலோ ஆனவை எனக் கூற முடியாது. இவை புவித்தட்டுக்களின் நகர்வினாலும் எரிமலை வெடிப்பினாலும் உருவாகும். மலைத்தொடருக்குச் சிறந்த உதாரணமாக இமயமலைத் தொடரைக் குறிப்பிடலாம். மலைத்தொடர்கள் நிலத்தில் மட்டுமல்லாமல் ஆழ்கடலிலும் காணப்படும்.

உலகிலேயே உயரமான மலைத்தொடரான இமயமலை
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் படி நடுக்கடல் முகடே புவியின் நீளமான மலைத்தொடராகும்..
நிலத்தின் மேல் உள்ள நீளமான மலைத்தொடரான அந்தீசு.

முக்கிய மலைத்தொடர்கள்

தொகு
  • நடுக்கடல் முகடு -புவியில் மிகவும் நீளமான மலைத் தொடர்.
  • இமயமலை- புவியில் மிகவும் உயரமான மலைத்தொடர்.
  • அந்தீசு மலைத் தொடர் - நிலத்தில் மிகவும் நீளமான மலைத்தொடர்.
  • அல்ப்ஸ் மலைத்தொடர்
  • யூரல் மலைத்தொடர்- ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் மலைத்தொடர்.
  • ரொக்கி மலைத்தொடர்

காலநிலையில் ஏற்படுத்தும் செல்வாக்கு

தொகு

உயரமான மலைத்தொடர்கள் காலநிலையில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவை காற்று வீசும் திசையில் அதிக மழையையும் மற்றைய திசையில் மழையற்ற நிலமையையும் உருவாக்கும். அந்தீசு மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அதிக மழை கிடைப்பதும் மேற்குப்பகுதி பாலைவனமாய் இருப்பது இக்காரணியாலேயே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைத்_தொடர்&oldid=2993056" இலிருந்து மீள்விக்கப்பட்டது