ஸ்கர்டு (Skardu) (உருது: سکردو, வார்ப்புரு:Lang-bft), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதிக்கு மேல் உள்ள ஜில்ஜிட் - பால்டிஸ்தானின் ஸ்கர்டு மாவட்டம் மற்றும் பல்திஸ்தான் கோட்டத்தின் [1]நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

ஸ்கர்டு நகர புத்தர் சிலைகள்
ஜில்ஜிட் - பால்டிஸ்தானில் ஸ்கர்டு நகரத்தின் அமைவிடம்
ஸ்கர்டு கோட்டை
சாங்கிரி லா பண்ணை வீடு

அமைவிடம் தொகு

இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில், 10 கிமீ அகலமும்; 40 கிமீ நீளமும் கொண்ட உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில் ஸ்கர்டு நகரம் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ஸ்கர்டு மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். ஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற காஷ்மீர் ஆக்கிரமிப்பு போரில், பாகிஸ்தான் நாடு, ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் இணைத்துக் கொண்ட பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [2]

தட்பவெப்பம் தொகு

ஸ்கர்டு நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 27 °C (81 °F), குறைந்த வெப்பம் 8 °C (46 °F) கொண்டிருக்கும். குளிர்காலத்தில் −10 °C (14 °F) முதல் −24.1 °C (−11 °F) வரை வெப்பம் கொண்டிருக்கும். [3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள தொகு

  1. Skardu, District. "Skardu District". www.skardu.pk. Skardu.pk. Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.
  2. Nawaz, Shuja (May 2008), "The First Kashmir War Revisited", India Review, 7 (2): 115–154, doi:10.1080/14736480802055455
  3. "Skardu Climate Data". web.archive.org. 2014. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
Bibliography

மேலும் படிக்க தொகு

  • Jettmar, Karl et al. (1985): Zwischen Gandhara und den Seidenstrassen: Felsbilder am Karakorum Highway: Entdeckungen deutsch-pakistanischer Expeditionen 1979–1984. 1985. Mainz am Rhein, Philipp von Zabern.
  • Jettmar. Karl (1980): Bolor & Dardistan. Karl Jettmar. Islamabad, National Institute of Folk Heritage.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Skardu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கர்டு&oldid=3573542" இலிருந்து மீள்விக்கப்பட்டது