ஸ்கர்டு மாவட்டம்

ஸ்கர்டு மாவட்டம் (Skardu District) (உருது: ضلع سکردو‎), பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரின் வடக்கில் உள்ள ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் ஒன்றாகும். ஸ்கர்டு மாவட்டத்தின் நிர்வாகத் நகரம் ஸ்கர்டு ஆகும். ஸ்கர்டு மாவட்டம் சிகார், ரோண்டு, குல்தாரி மற்றும் கார்மங்க் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.

ஸ்கர்டு மாவட்டம்
மாவட்டம்
ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தில் ஸ்கர்டு மாவட்டம் (சிவப்பு நிறம்)
ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தில் ஸ்கர்டு மாவட்டம் (சிவப்பு நிறம்)
நாடுபாகிஸ்தான்
பாகிஸ்தானின் தன்னாட்சிப் பகுதிஜில்ஜிட்-பால்டிஸ்தான்
பிரதேசம்ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
நிறுவிய நாள்1 சூலை 1970
தலைநகரம்ஸ்கர்டு
பரப்பளவு
 • மொத்தம்15,000 km2 (6,000 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்2,14,848
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுக்காக்கள்4
1947 இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரின் வரைபடம், 31 டிசம்பர் 1948
ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் ஆறு மாவட்டங்களில் ஸ்கர்டு மாவட்டம் (வெளிர் மஞ்சள் நிறத்தில்)
ஸ்கர்டு கோட்டையிலிருந்து ஸ்கர்டு நகரம்

அமைவிடம்

தொகு

இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் ஸ்கர்டு மாவட்டம் உள்ளது. இதன் தெற்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் மாவட்டம் & பாரமுல்லா மாவட்டம் மற்றும் கிழக்கில் காஞ்சே மாவட்டமும், மேற்கில் அஸ்தோர் மாவட்டம், வடக்கில் ஜில்ஜில் மாவட்டம், வடகிழக்கில் சீனாவின் சிஞ்சியாங் மாநிலமும் எல்லைகளாக உள்ளது.

வரலாறு

தொகு

ஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற 1947 இந்திய-பாகிஸ்தான் போர் போரில், பாகிஸ்தான் நாடு, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின், ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பிரித்து பாகிஸ்தான் தன்னுடன் இணைத்துக் கொண்ட இப்பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Nawaz, Shuja (May 2008), "The First Kashmir War Revisited", India Review, 7 (2): 115–154, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/14736480802055455

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Skardu District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கர்டு_மாவட்டம்&oldid=2795366" இலிருந்து மீள்விக்கப்பட்டது