கார்மாங் மாவட்டம்
கார்மாங் மாவட்டம் (Kharmang District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தோல்தி நகரம் ஆகும்.[1] 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்மாங் மாவட்டத்தின் மக்கள் தொகை 50,000 ஆகும்.[2]இம்மாவட்டம் 3 தாலுகாக்கள் கொண்டது.
கார்மாங் மாவட்டம்
ضلع کھرمنگ | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | கில்ஜித்-பல்டிஸ்தான் |
தலைமையிடம் | தோல்தி |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,700 km2 (1,000 sq mi) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2017) | 50,000 |
தாலுகாக்கள் | 3 |
அமைவிடம்
தொகுகில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் தென்கிழக்கில் அமைந்த கார்மாங் மாவட்டத்தின் வடக்கில் ஸ்கர்டு மாவட்டம், வடகிழக்கில் கஞ்சே மாவட்டம், மேற்கில் ஆஸ்தோர் மாவட்டம், தெற்கில் லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "کھرمنگ میں موسم سرما کی پہلی برفباری، کئی مقامات پر 5انچ تک برف ریکارڈ کیا گیا". Pamir Times (in உருது). 11 December 2017. பார்க்கப்பட்ட நாள் 8 February 2021.
- ↑ Kharmang District Population & Area