கஞ்சே மாவட்டம்

காஞ்சே மாவட்டம் (Ghanche District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காப்லு நகரம் ஆகும்.[1] காரகோரம் மலைத்தொடர்களால் சூழ்ந்த இம்மாவட்டத்தின் [2][3][4] பரப்பளவு 8,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,60,000 ஆகவுள்ளது.காஞ்சே மாவட்டத்தின் பெரும்பாலானோர் நூர்பக்சியா இசுலாமிய சமயப் பிரிவை பின்பற்றுகின்றனர். சிலர் சியா, சன்னி, வாகாபி இசுலாமியப் பிரிவுகளை பின்பற்றுகின்றனர். இதன் பெரும்பாலான மக்கள் பால்டி மொழி பேசுகின்றனர்.

காஞ்சே
ضلع گانچھے
மாவட்டம்
காரகோரம் மலைத்தொடரில் ஹால்டி கூம்பு வடிவ சிகரங்கள்
காரகோரம் மலைத்தொடரில் ஹால்டி கூம்பு வடிவ சிகரங்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் காஞ்சே மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் காஞ்சே மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
பிரதேசம் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
கோட்டம்பல்திஸ்தான்
தலைமையிடம்காப்லு
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்8,531 km2 (3,294 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்1,60,000
தாலுகாக்கள்3

புவியியல்

தொகு
 
காஞ்சே மாவட்டத்தில் 7,821 மீட்டர் உயரம் கொண்ட மாஷர்புரும் எனப்படும் K-1 கொடுமுடி
 
சியோக் ஆறு பாலத்திலிருந்து குர்சே கிராமத்தின் காட்சி

காஞ்சே மாவட்டத்தின் வடகிழக்கில் சீனா நாட்டின் கஷ்கர் மற்றும் கோத்தன் நகரங்களின் எல்லைப்பகுதியும், கிழக்கில் சியாச்சின் பனியாறும், தென்கிழக்கில் லே மாவட்டம், தென்மேற்கில் கார்மாங் மாவட்டம், மேற்கில் ஸ்கர்டு மாவட்டம், வடமேற்கில் சிகார் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. சியாச்சின் பனியாறு மற்றும் பல்திஸ்தான் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக்கோடு இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது. இம்மாவட்டத்தில் சியோக் ஆறு பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

காஞ்சே மாவட்டம் 3 தாலுகாக்களைக் கொண்டது.

  • காப்புலு தாலுகா
  • தகோனி தாலுகா
  • மாஷர்புரும் தாலுகா

இம்மூன்று தாலுகாக்கள் 56 ஒன்றியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சோர்பத் சமவெளியின் நான்கு கிராமங்களான துர்டுக், சாலுங்கா, தாங், மற்றும் தியாட்சி ஆகியவைகள், 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இந்தியா கைப்பற்றியது.[5][6] [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Khaplu — off the beaten path".
  2. "The serenity of Ghanche: Of mountains, rivers and valleys".
  3. "Mapping education india2015".
  4. "Rifts within Nurbakhshiyas: Dozens arrested after clashes in Ghanche Valley".
  5. "Turtuk, a Promised Land Between Two Hostile Neighbours".
  6. "An encounter with the 'king' of Turtuk, a border village near Gilgit-Baltistan".
  7. "geography of baltistan". Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சே_மாவட்டம்&oldid=3619686" இலிருந்து மீள்விக்கப்பட்டது