சிகார் மாவட்டம்
சிகார் மாவட்டம் (Shigar District),இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சிகார் நகரம் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 8,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிகார் மாவட்ட மக்கள் தொகை 70,000 ஆகும். [1]உலகின் இரண்டாவது உயரமான கே-2 கொடுமுடி இம்மாவட்டத்தில் உள்ளது. இது ஸ்கர்டு நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிகார் மாவட்டம்
ضلع شِگر | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் சிகார் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
பிரதேசம் | ஜில்ஜிட்-பால்டிஸ்தான் |
தலைமையிடம் | சிகார் |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,900 km2 (3,400 sq mi) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2017) | 70,000 |
தாலுகா | 1 |
அமைவிடம்
தொகுகாரகோரம் மலைத்தொடரில் அமைந்த சிகார் மாவட்டத்தின் வடக்கில் நாகர் மாவட்டம், ஹன்சா மாவட்டம் மற்றும் சீனாவின் கஷ்கர் பகுதியும், தென்கிழக்கில் கஞ்சே மாவட்டம், தென்மேற்கில் ரோண்டு மாவட்டம் மற்றும் ஸ்கர்டு மாவட்டம்[2]எல்லைகளாக உள்ளது.