இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்

இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (Second Anglo-Sikh War), சீக்கியப் பேரரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1848 முதல் 1849 முடிய நடைபெற்றது. இப்போரின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி பெற்று, சீக்கிய பேரரசின் ஆட்சி முடிவுற்றது.[1]

இரண்டாம் ஆங்கிலேய – சீக்கியர் போர்

பஞ்சாப் பகுதியின் வரைபடம், ஐந்து ஆறுகளின் நிலம்
நாள் 18 ஏப்ரல் 1848 – 30 மார்ச் 1849
இடம் பஞ்சாப்
கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி; சீக்கியப் பேரரசு முடிவுற்றது.
பிரிவினர்
கிழக்கிந்திய கம்பெனி சீக்கியப் பேரரசு

சீக்கியப் பேரரசில் இருந்த பஞ்சாப், ஆப்கானித்தான் பகுதிகளை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டு, காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, இராசபுத்திர குலத்தின் டோக்ரா வம்சத்தின் ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் 75 இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர்.[2] இதனால் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் உருவானது.

போருக்கான பின்புலம்

தொகு

மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.

முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்பும், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று.[3]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. history.com/sikhhist/events/anglosikhwars2.html Second Anglo Sikh War[தொடர்பிழந்த இணைப்பு]
  2. காஷ்மீர் வரலாறு: 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை
  3. "Why the Second Anglo Sikh War did take place?". Archived from the original on 2016-10-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.

மேற்கோள்கள்

தொகு

மேல் வாசிப்பிற்கு

தொகு