குலாப் சிங்
குலாப் சிங் (Gulab Singh) (1792–1857) இந்து இராஜபுத்திர குலத்தின் டோக்ரா வம்சத்தை நிறுவியர் ஆவார். முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரின் முடிவில், சீக்கியப் பேரரசின் கீழ் இருந்த காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அமிர்தசரஸ் உடன்படிக்கையின் படி, 1846இல் காஷ்மீரை ஜம்மு குலாப் சிங்கிடம் 75,00,000 ரூபாய்க்கு விற்று விட்டனர். [1][2]
குலாப் சிங் | |
---|---|
மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 16 மார்ச் 1846— 30 சூன் 1857 |
முன்னையவர் | ஜித் சிங் ஜம்முவின் மன்னர் |
பின்னையவர் | ரண்பீர் சிங் |
பிறப்பு | ஜம்மு | 18 அக்டோபர் 1792
இறப்பு | 30 சூன் 1857 | (அகவை 64)
குழந்தைகளின் பெயர்கள் | ரண்பீர் சிங் |
வம்சம் | ஜாம்வால் |
தந்தை | கிஷோர் சிங் |
மதம் | இந்து சமயம் |
இளமை வாழ்க்கை
தொகுகுலாப் சிங் 18 அக்டோபர் 1792இல் இந்து டோக்ரா இராஜபுத்திர குலத்தில் பிறந்தவர். ஜம்மு மன்னர் ஜித் சிங்கின் நெருங்கிய உறவினர் ஆவார். 1808இல் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கிடம் ஜம்மு மன்னர் தனது ஆட்சி பகுதிகளை இழந்ததால், 1809இல் குலாப் சிங், ஆப்கானிய மன்னர் சூஜா ஷா துரானி மற்றும் சர்தார் நிகல் சிங் அட்டாரி வாலா படையில் சேர்ந்தார். பின்னர் சீக்கியப் பேரரசர் ராஜா ரஞ்சித் சிங் படையில் படைத்தலைவராக சேர்ந்து, முல்தான் மற்றும் ரியாசிப் போர்களில் ரஞ்சித் சிங்கின் முன்னரங்கப் படைத்தலைவராக செயல்பட்டார். 1816இல் ஜம்முவை சீக்கியர்கள் கைப்பற்றி, அப்பகுதியின் சீக்கிய ஆளுனராக குலாப் சிங் நியமிக்கப்பட்டார்.
1821இல் குலாப் சிங், ரஜௌரி மற்றும் கிஷ்த்துவார் பகுதிகளை மன்னர் அக்கர் கான் மற்றும் இராஜா தேக் முகமது சிங்கிடமிருந்து கைப்பற்றினார்.
ஜம்முவின் மன்னராக
தொகுஜம்மு பகுதியின் மன்னர் ஜித் சிங், சீக்கியப் படைகளால் வெல்லப்பட்டப் பின்னர், குலாப் சிங்கின் தந்தை கிஷோர் சிங் ஜம்முவின் மன்னரானார். 1822இல் கிஷோர் சிங்கின் மறைவுக்குப் பின், குலாப் சிங், ஜம்முவின் மன்னராக, ரஞ்சித் சிங்கால் நியமிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மன்னராக
தொகுமுதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரில், சீக்கியர்கள், காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். 84,471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஷ்மீர் பகுதியை, ஆங்கிலேயர்கள், 16 மார்ச் 1846இல் அன்று, ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் ரூபாய் 27 இலட்சத்திற்கு விலைக்கு விற்று விட்டனர். [3] எனவே 16 மார்ச் 1846 முதல் குலாப் சிங் சம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார்.
30 சூன் 1857இல் மன்னர் குலாப் சிங்கின் மறைவிற்கு பினனர் அவரது மகன் ரண்பீர் சிங் காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார். [4] ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் இறுதி மன்னர் ஹரி சிங் ஆவார்.
ரகுநாத் கோயில்
தொகுஜம்மு நகரத்தில் அமைந்த ரகுநாத் கோயிலின் கட்டிடப் பணி மகாராஜா குலாப் சிங் 1835-இல் துவக்கினார். பின்னர் அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால் 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ காஷ்மீர் வரலாறு: 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை
- ↑ Panikkar, K. M. (1930). Gulab Singh. London: Martin Hopkinson Ltd. p. 112.
- ↑ "March 16 1846: A nation sold". Archived from the original on 2016-11-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
- ↑ "/gulabsingh.html MAHARAJA GULAB SINGH". Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
மேலும் படிக்க
தொகு- How Sikhs Lost their Empire by Khushwant Singh
- Gulabnama by Dewan Kirpa Ram, translated by Professor SS Charak
- Memoirs of Alexander Gardner by Hugh Pearse