கிஷ்துவார் மாவட்டம்

கிஷ்துவார் மாவட்டம் (Kishtwar District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யின் ஜம்மு பிரதேசத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கிஷ்துவார் நகரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் லே மாவட்டம் மற்றும் கார்கில் மாவட்டத்திற்கு பின்னர் இது மூன்றாவது மக்கள் தொகை குறைவான மாவட்டமாகும். இம்மாவட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆடுகள் மேய்க்கும் குஜ்ஜர் இன இந்து சமய மக்கள் அதிகம் வாழும் மாவட்டமாகும். 13 மார்ச்சு 2008 இல் துவக்கப்பட்ட புதிய மாவட்டமாகும்.

கிஷ்துவார் மாவட்டம்
மாவட்டம்
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் கிஷ்த்துவார் மாவட்டத்தின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் கிஷ்த்துவார் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
தலைமையிடம்கிஷ்துவார்
பரப்பளவு
 • மொத்தம்7,824 km2 (3,021 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,30,696
 • அடர்த்தி29/km2 (76/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்http://kishtwar.nic.in

அமைவிடம் தொகு

கிஷ்துவார் மாவட்டத்தின் வடகிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் இமாசல பிரதேசம், தெற்கில் இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டம், தென்மேற்கில் தோடா மாவட்டம் மற்றும் வடமேற்கில் அனந்தநாக் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

நிர்வாகம் தொகு

1,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிஷ்துவார் மாவட்டம் கிஷ்துவார், பட்டர், மார்வா, சட்டுரூ என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் கிராமப்புற வளர்ச்சிக்கென மார்வா, வார்வான், தச்சன், கிஷ்துவார், திராஷாலா, இந்தர்வல், சட்டூரு மற்றும் பட்டர் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[2] ஊராட்சி ஒன்றியங்கள் பல பஞ்சாயத்து கிராமங்களை கொண்டுள்ளது.

அரசியல் தொகு

கிஷ்துவார் மாவட்டம் இந்தர்வால் மற்றும் கிஷ்டுவார் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிஷ்துவார் மாவட்ட மக்கள் தொகை 230,696 ஆகும். இதில் ஆண்கள் 120,165 ஆகவும்; பெண்கள் 110,531ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 140 வீதம் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 56.20% ஆகும். அதில் ஆண்களின் படிப்பறிவு விகிதம் 68.92% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு விகிதம் 42.36% ஆகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 39,396 ஆக உள்ளனர்.

சமயம் தொகு

மொத்த மக்கள் தொகையில் இசுலாமியர் 57.75%, இந்துக்கள் 40.72%, பௌத்தர்கள் 0.91%, சீக்கியர்கள் 0.20% ஆகவும் உள்ளனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்துவார்_மாவட்டம்&oldid=3355961" இருந்து மீள்விக்கப்பட்டது