முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது.[1] 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

அவையாவன:

இவற்றில் புதுச்சேரி மற்றும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிகள் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசுத் தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுள் சில சட்டம் இயற்றுவதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது.

மேற்கோள்கள்தொகு