தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ (Dadra and Nagar Haveli and Daman and Diu, (DNHDD)) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள, இந்தியாவின் ஓர் ஒன்றியப் பகுதியாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தமன் நகரம் ஆகும்.

தாத்ரா மற்றும் நகர் அவேலி
மற்றும் தாமன் மற்றும் தியூ

சின்னம்
இந்திய வரைபடத்தில் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ பகுதிகளின் அமைவிடம்
இந்திய வரைபடத்தில் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ பகுதிகளின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°25′N 72°50′E / 20.42°N 72.83°E / 20.42; 72.83
நாடு இந்தியா
நிறுவிய நாள்26 சன்வரி 2020 [1]
தலைமையிடம்தமன்[2]
அரசு
 • நிர்வாகம்தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவின் ஒன்றிய நிர்வாகம்
 • உயர்நீதிமன்றம்மும்பை உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்603 km2 (233 sq mi)
 • பரப்பளவு தரவரிசை33
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,85,764
 • அடர்த்தி970/km2 (2,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-DH
வாகனப் பதிவுDD-01,DD-02,DD-03[3]
மாவட்டங்கள்3
தாத்ரா நகர் அவேலி, தியூ, தமன்
இணையதளம்http://dnh.nic.in/
https://daman.nic.in/

தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை இணைத்து, இப்புதிய ஒன்றியப் பகுதியை 26 சன்வரி 2020 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7]

வரலாறு

தொகு

இந்திய விடுதலைக்கு முன்னர் இப்பகுதிகள் கோவா போன்று போர்த்துகேயர்கள் நிர்வாகத்தில் இருந்தது. 1961-ஆம் ஆண்டில் இப்பகுதிகளை போர்த்துகேயர்களிடமிருந்து கைப்பற்றி, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆலோசனையின் படி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 26 சனவரி 2020 அன்று முதல் தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை, ஒன்றாக ஒன்றிணைத்து இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகியின் கீழ் செயல்படுகிறது.

புவியியல்

தொகு

இந்த ஒன்றியப் பகுதி தொடர்ச்சியற்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்த ஒன்றியப் பகுதியின் நிலப்பரப்புகள் குஜராத் மாநிலக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இந்த ஒன்றியப் பகுதி டையு (தியூ), தமன் மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிகக்ப்பட்டுள்ளது. இதில் தியூ மட்டுமே தீவுப் பகுதியாகும்.

மாவட்டங்கள்

தொகு
வ எண் மாவட்டம் பரப்பளவு
км²
மக்கள்தொகை
(2011)
அடர்த்தி
per/км²
இணையதளம்
1 தமன் மாவட்டம் 72 190 855 2650 http://www.daman.nic.in/
2 தியூ மாவட்டம் 40 52 056 1301 http://diu.gov.in/
3 தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் 491 342 853 698 http://dnh.nic.in/
மொத்தம் 603 585 764 970

அரசியல்

தொகு

இந்த ஒன்றியத்தில் தாத்ரா நகர அவேலி மற்றும் தாமன் தியூ என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளது.

உயர் நீதிமன்றம்

தொகு

இந்த ஒன்றியப் பகுதிகளின் நீதிமன்றங்கள், மும்பை உயர் நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://egazette.nic.in/WriteReadData/2019/214745.pdfegazette.nic.in
  2. "Daman will be the new capital of merged UTs Dadra & Nagar Haveli, Daman & Diu". 23 January 2020.
  3. "New vehicle registration mark DD for Dadra & Nagar Haveli and Daman and Diu". Deccan Herald. 23 January 2020. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  4. Dutta, Amrita Nayak (10 July 2019). "There will be one UT less as Modi govt plans to merge Dadra & Nagar Haveli and Daman & Diu". பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-05-09.
  6. "Govt plans to merge 2 UTs -- Daman and Diu, Dadra and Nagar Haveli".
  7. http://164.100.47.4/BillsTexts/LSBillTexts/Asintroduced/366_2019_LS_Eng.pdf

வெளி இணைப்புகள்

தொகு