தேசிய தலைநகர் பகுதி, தில்லி

இது தில்லி மற்றும் புது தில்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பகுதியினைப் பற்றியதாகும். நீங்கள் தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), தில்லி அல்லது புது தில்லி காண விரும்பினீர்களா ?

தேசிய தலைநகர் பகுதி,தில்லி (NCT) இந்தியாவின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதியாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: புது தில்லி, தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட். இது தவிர கிழக்கு தில்லி மாவட்டம், சதாரா மாவட்டம், தென்மேற்கு தில்லி மாவட்டம், தெற்கு தில்லி மாவட்டம், புது தில்லி மாவட்டம், மத்திய தில்லி மாவட்டம், மேற்கு தில்லி மாவட்டம், வடகிழக்கு தில்லி மாவட்டம் வடக்கு தில்லி மாவட்டம், வடமேற்கு தில்லி மாவட்டம், தென்கிழக்கு தில்லி மாவட்டம் என 11 மாவட்டங்களும்;[8][9] 33 வருவாய் வட்டங்களும்; கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது. மூன்று மூன்று மாநகராட்சிகளையும் கொண்டது.

தேசிய தலைநகர் பகுதி
இந்தியாவின் வாயில்

சின்னம்
இந்தியாவில் தேசிய தலைநகர் பகுதியின் அமைவிடம்
இந்தியாவில் தேசிய தலைநகர் பகுதியின் அமைவிடம்
Location of தேசிய தலைநகர் பகுதி
நாடு இந்தியா
பகுதிவட இந்தியா
தலைநகரம், தில்லி சுல்தானகம்1214
தலைநகரம், முகலாயப் பேரரசு1526, இடையிடையே ஆக்ரா
தலைநகரம், பிரித்தானிய இந்தியா1911
புது தில்லி, தலைநகரம், இந்திய ஒன்றியம்1947
புது தில்லி, தலைநகரம், இந்தியக் குடியரசு26 சனவரி 1950
ஒன்றியப் பகுதி[1][2]1956
தேசிய தலைநகர் பகுதி[3]1 பெப்பிரவரி 1992
தலைநகரம்புது தில்லி
மாவட்டம்11
அரசு
 • நிர்வாகம்தில்லி அரசு
 • துணைநிலை ஆளுநர்வினை குமார் சக்சேனா[4]
 • முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் (ஆஆக)
 • சட்டப் பேரவைதில்லி சட்டமன்றம்
ஓரவை (70 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
பரப்பளவு
 • ஒன்றியப் பகுதி1,484 km2 (573 sq mi)
 • நீர்18 km2 (6.9 sq mi)
 • பரப்பளவு தரவரிசை32வது
ஏற்றம்
200–250 m (650–820 ft)
மக்கள்தொகை
 (2011)[6]
 • ஒன்றியப் பகுதி1,67,87,941
 • அடர்த்தி11,312/km2 (29,298/sq mi)
 • நகர்ப்புறம்1,63,49,831
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
110000 – 110099
தொலைபேசி குறியீடு+91—11
ஐஎசுஓ 3166 குறியீடுIN-DL
வாகனப் பதிவுDL
இணையதளம்delhi.gov.in

நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. முதல்வராக ஆரவிந்த் கெஜரிவால் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

இங்கு ஆட்சியமைப்பு தனித்த இயல்புடையது; மக்களால் தேர்ந்த அரசு மாநகர பொறுப்புகளை கையாள நடுவண் அரசு காவல் மற்றும் பொது நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

இது தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)வின் அங்கமாகும்.

ஆட்சி

தொகு

2013 திசம்பரில் முடிவுற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசு தாமாக முன்வந்து ஆதரவளித்ததால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.

ஆண்டு காங்கிரசு பாசக ஆம் ஆத்மி மற்றவர்கள்
2008 43 23 0 4
2013 8 32 28 2
2015 0 3 67 -
2020 0 8 62 -

ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசு உட்பட யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்து கெச்சுரிவால் திசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் [10].[11] சன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி இக்கட்சியின் முதல்வர் கெச்சுரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினார்[12][13] அவர்கள் சட்டமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும்படி கூறினர் ஆனால் லெப்டிண்ட் ஆளுநர் நசூபு சங்கு சட்டமன்றத்தை கலைக்காமல் தற்காலிக இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார்.[14]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Constitution (Seventh Amendment) Act, 1956". Ministry of Law and Justice (India). 1956. Archived from the original on 1 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  2. "The States Reorganisation Act, 1956" (PDF). Ministry of Law and Justice (India). 1956. Archived from the original (PDF) on 17 March 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  3. "The Constitution (Sixty-Ninth Amendment) Act, 1991". Government of India. National Informatics Centre, Ministry of Communications and Information Technology, Government of India. Archived from the original on 21 August 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2007.
  4. "Vinai Kumar Saxena appointed Delhi Lieutenant Governor after Anil Bajial's exit" (in en). Hindustan Times. 23 May 2022. https://www.hindustantimes.com/cities/delhi-news/vinai-kumar-saxena-becomes-new-lt-governor-of-delhi-101653318800386.html. 
  5. "Delhi Info". unccdcop14india.gov.in. Archived from the original on 29 November 2020. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
  6. "Census of India: Provisional Population Totals Paper 1 of 2011, NCT of Delhi". Census of India. 2011. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
  7. "Delhi (India): Union Territory, Major Agglomerations & Towns – Population Statistics in Maps and Charts". City Population. Archived from the original on 2 March 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  8. Delhi gets two more revenue districts: Southeast, Shahdara
  9. 2 new revenue districts on capital’s map
  10. "As Kejriwal takes oath, Sheila Dikshit pack bags, books and paintings". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.
  11. "Arvind Kejriwal's swearing-in: Congress absent, BJP's Harsh Vardhan attends". ndtv. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.
  12. "Back to Aam Aadmi. Arvind Kejriwal quits as Delhi Chief Minister". Ndtv. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Arvind Kejriwal's resignation letter: full text". Ndtv. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "Delhi to be placed under President's Rule, Assembly under suspension". ibn-live. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]