தெற்கு தில்லி மாவட்டம்

தில்லியில் உள்ள மாவட்டம்

தெற்கு தில்லி மாவட்டம் (South Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சாகேத் நகரம் ஆகும்.

தெற்கு தில்லி
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • நிர்வாகம்GNCT of Delhi
பரப்பளவு
 • மொத்தம்247 km2 (95 sq mi)
ஏற்றம்
241 m (791 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்27,31,929
 • அடர்த்தி11,000/km2 (29,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அருகமைந்த நகரம்பரிதாபாத்
மக்களவைத் தொகுதிதெற்கு தில்லி
உள்ளாட்சி அமைப்புதெற்கு தில்லி மாநகராட்சி
தில்லியின் 11 மாவட்டங்கள்

ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில், 11 செப்டம்பர் 2012 அன்று சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [1] [2]

அமைவிடம்

தொகு

தெற்கு தில்லி மாவட்டத்தின் கிழக்கில் யமுனை ஆறு, வடக்கில் புதுதில்லி, தென்கிழக்கில் அரியானாவின் பரிதாபாத் மாவட்டம், தென்மேற்கில் அரியானாவின் குர்கான் மாவட்டம், மேற்கில் தென்மேற்கு தில்லி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

தெற்கு தில்லி மாவட்டம் சாகேத், ஹவுஸ்காஸ் மற்றும் மெஹ்ரௌலி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3]

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,731,929 ஆக உள்ளது. நகரத்தில் 99.55% மக்களும்; கிராமங்களில் 0.45% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.51% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,467,428 ஆண்களும்; 1,264,501 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 862 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 247 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,060 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 86.57 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.73 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 331,043 ஆக உள்ளது. [4]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,155,759 (78.91 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 445,914 (16.32 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 69,520 (2.54 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை () ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 41,880 (1.53 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 3,862 (0.14 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

வணிகத் தலங்கள்

தொகு
  1. சரோஜினி நகர் மார்க்கெட்
  2. லஜ்பத் நகர் மார்க்கெட்
  3. கோட்லா முபாரக்பூர் மார்க்கெட்

மருத்துவம் & தொழில் நுட்ப நிறுவனங்கள்

தொகு
  1. இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
  2. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், தில்லி
  3. ஜாமியா மில்லியா மத்தியப் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_தில்லி_மாவட்டம்&oldid=3777349" இலிருந்து மீள்விக்கப்பட்டது