இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (இ.தொ.க. தில்லி,Indian Institute of Technology, Delhi, IITD) இந்திய தலைநகர் தில்லியின் ஹௌஸ் காஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். மற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்றே இதுவும் இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று தில்லி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுரி என எடின்பர்க் அரசர் இளவரசர் பிலிப்பினால் அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் அதற்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய நாடாளுமன்றம் தொழில்நுட்பக் கழகங்கள் சட்டத்தைத் திருத்தி இந்நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகம்,தில்லி என தகுதி உயர்த்தப்பட்டது. இக்கழகத்தின் முதன்மை கட்டிடம் மார்ச் 2, 1968 இல் அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் ஃசாகீர் உசைனால் முறையாக திறக்கப்பட்டது.
| |
நிறுவியது | 1961 |
---|---|
வகை | கல்வி மற்றும் ஆய்வு கழகம் |
ஆசிரியர்கள் | 450 |
பட்டப்படிப்பு | 2,300 |
பட்டமேற்படிப்பு | 2,500 |
அமைவிடம் | புதுதில்லி, தில்லி இந்தியா |
வளாகம் | ஊரகம், 320 ஏக்கர் |
இணையதளம் | http://www.iitd.ac.in/ |
வளாகம்
தொகுஇ.தொக. தில்லியின் வளாகம் 320 ஏக்கர் (1.3 ச.கிமீ) பரப்பளவில் தெற்கு தில்லியின் பசுமையான ஹௌஸ் காஸ் பகுதியில் புகழ்பெற்ற வரலாற்றிடம் குதூப்மினார் அருகாமையில் அமைந்துள்ளது.[1] இதன் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளது. இவ்வளாகம் பூங்காக்கள், புல்வெளிகள், வசிப்பிடங்கள், அகலமான தூய சாலைகள் என ஓர் நன்கு திட்டமிடப்பட்ட சிற்றூரைப்போல உள்ளது. நீர் வழங்கல் மற்றும் காப்பு மின்வசதிகள் மற்றும் வணிகமையங்களை கொண்டு தன்னகத்தே வசிப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது.
இ.தொ.க தில்லி வளாகத்தை நான்கு பகுதிகளாப் பிரிக்கலாம்:
- மாணவர்கள் தங்கும் பகுதி -ஆடவர் /மகளிர் தனித் தொகுதிகள்
- ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்கும் பகுதி
- மாணவர்கள் பொழுதுபோக்கு பகுதி -மாணவர் செயல்பாடு மையம்(SAC), உதைபந்து திடல், துடுப்பாட்ட திடல், கூடைப்பந்து களம், ஆக்கி மைதானம், புல்வெளி டென்னிஸ் களங்கள்.
- கல்வி பகுதி - துறை அலுவலங்கள்,விளக்கவுரை கூடங்கள், நூலகங்கள் மற்றும் பட்டறைகள்.
விடுதிகள்
தொகுஆடவருக்கு 9 விடுதிகளும் மகளிருக்கு 2 விடுதிகளுமாக 11 விடுதிகள் உள்ளன. மணமான மாணவர்களுக்கு அடுக்ககங்களும் உள்ளன. விடுதிகள் 'இல்லங்கள்'(Houses) என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் மலைத்தொடர்களை ஒட்டி உள்ளன - சிவாலிக், அரவல்லி, இமாத்திரி, ஜ்வாலமுகி, காரகோரம், கைலாசு, குமோன், நீலகிரி, சாத்புரா,விந்தியாசல் மற்றும் சன்ஸ்கார். அடுக்ககங்கள் பழமையான இந்திய பல்கலைக்கழகங்கள் பெயரைத் தாங்கி நிற்கின்றன - தக்சீலா, நளாந்தா
விடுதிகளிடையே பண்பாட்டு போட்டிகள்/நிகழ்ச்சிகள் மிகுந்த ஆர்வமூட்டுபவையாக உள்ளன. அவற்றில் சில:
- இசை மன்றம்- கிழக்கு இரவு, மேற்கு இரவு, கலப்பு இரவு, இசை மனோரஞ்சன்.
- நடனம் மற்றும் நாடக மன்றம்- சோடி நடனம், குழு நடனம், நாடகம், தெருக்கூத்து.
- ஆங்கில விவாதம் மற்றும் இலக்கிய மன்றம், இந்தி சமிதி, நுண்கலைகள் மன்றம், குறும்பட மன்றம், நிழற்பட மன்றம் -மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரவும் வளர்த்தெடுக்கவும் பல போட்டிகள்
- உள்ளரங்க விளையாட்டு மன்றம் - ஸ்னூக்கர்,சதுரங்கம் என உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகள்
- ஸ்பிக் மாக்கே- புகழ்பெற்ற கலைஞர்களின் கச்சேரிகள் ஏற்பாடு செய்தல்
மாணவர் செயல்பாடு மையம்
தொகுஇங்கு உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், பில்லியர்ட் மேசை, சுவர்ப்பந்து களங்கள், மேசைடென்னிஸ் அறைகள், இசை அறை, நுண்கலை அறை மற்றும் வினாடி வினா,விவாதங்கள் நடத்த கூடம் உள்ளன. இப்பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
துறைகள்
தொகுஇக்கழகத்தில் 13 கல்வித்துறைகளும் 11 பல்துறை மையங்களும் 3 சிறப்பு கல்லூரிகளும் பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆய்வுமையங்களும் ஆய்வுக்கூடங்களும் கொண்டு விளங்குகிறது.
இ.தொ.க தில்லியில் உள்ள துறைகள்:
- செயலாக்க விசையியல்
- உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரிவேதிப் பொறியியல்
- வேதிப் பொறியியல்
- வேதியியல்
- குடிசார் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மின் பொறியியல்
- மனிதம் & சமூக அறிவியல்
- மேலாண்மை கல்வி
- கணிதம்
- எந்திரப் பொறியியல்
- இயல்பியல்
- ஆடை தொழில்நுட்பம்
தவிர இ.தொ.க தில்லி வளாகத்தில் தனியார் அல்லது முன்னோர் நிதியுதவிகொண்டு அமைந்துள்ள மூன்று சீர்மிகு பள்ளிகளாக இவை இயங்குகின்றன:
படித்த முன்னோர்கள்
தொகு- ரஜத் குப்தா - முன்னாள் செயல் இயக்குநர், மக்கின்சே & கம்.
- வினோத் கோஸ்லா- துணை நிறுவனர், சன் மைக்ரோசிஸ்டம்
- பத்மஸ்ரீ வாரியார் - முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, சிஸ்கோ சிஸ்டம்ஸ்
- சேத்தன் பகத் - முன்னாள் வங்கி ஊழியர், எழுத்தாளர், பத்திரிக்கைக் கட்டுரையாளர், உத்வேகப் பேச்சாளர்
- துஷார் ரஃகேஜா
- கிரண் பேடி
- கே. அனந்தகிருஷ்ணன், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, டி.சி.எஸ்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அதிகார வலைத்தளம்
- இ.தொ.க மாணவர்கள்,முன்னோர்கள்,ஆசிரியர்கள் பெற்ற விருதுகள்
- "இதொக தில்லி சிறப்புமிக்க முன்னோர் விருதுகள்". Archived from the original on 2008-04-07. பார்க்கப்பட்ட நாள் 2009-07-31.