சேத்தன் பகத்
சேத்தன் பகத் (Chetan Bhagat) [1] (பிறப்பு 22 ஏப்ரல் 1974) [2] ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் யூடியூபர் ஆவார். 2010இல் டைம் இதழின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பெற்றர்.[3][4]
சேத்தன் பகத் | |
---|---|
2012 இல் சேத்தன் பகத் | |
பிறப்பு | சேத்தன் பிரகாஷ் பகத் 22 ஏப்ரல் 1974 தில்லி, இந்தியா |
மொழி | ஆங்கிலம், இந்தி |
கல்வி | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி (B.Tech) இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (PGP) |
காலம் | 2004-present |
வகை | காதல், புனைகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஃபைவ் பாயிண்ட் சம் வன்', 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ், தெ 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்', ஹால்ஃப் கேர்ள்பிரண்ட்', 'வன் இண்டியன் கேர்ள்' |
கல்வி
தொகுசேத்தன் பகத் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றார், பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்தில் பிஜிபி படித்தார்.[5] ஒரு முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்துப் பணிக்காக அந்தப் பணியினைத் தொடரவில்லை. பத்து புதினங்கள் மற்றும் மூன்று புனைகதை அல்லாத புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது முதல் புதினமான ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் 2004 இல் வெளியிடப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசேத்தன் பகத் மேற்கு டெல்லியில் உள்ள நரைனா விஹாரில் பாரம்பரிய இந்து பஞ்சாபி குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் இளம் பேரரையராகப் பணியாற்றினார், மேலும் இவரது தாயார் புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். தௌலா குவான் இராணுவ பொதுப் பள்ளியில் பயின்றார்.[6] 15ஆம் வயதில் சராசரி மாணவராக இருந்ததாகக் கூறுகிறார்.[7][8]
பகத் 1995 ஆம் ஆண்டு தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 9+ தரத்துடன் இயந்திரப் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றார்.
பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (IIMA) சைந்தையிடல் வணிக நிர்வாகத்தில் 1997 இல் பட்டம் பெற்றார் [9][10] ஜூன் 2018 இல், கலை மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் அவருக்கு "இளம் முன்னாள் மாணவர் சாதனையாளர் விருது 2018" ஐ IIMA வழங்கியது.[11][12]
தொழில் வாழ்க்கை
தொகுசேத்தன் பகத்தின் ஐந்து புதினங்கள் திரைப்படமாக வெளியானது. 2008 இல் ஹலோ ( ஒன் நைட் @ தி கால் சென்டரை அடிப்படையாகக் கொண்டது), 2009 இல் 3 இடியட்ஸ் ( ஃபைவ் பாயிண்ட் சம்யோனை அடிப்படையாகக் கொண்டது), கை போ சே! 2013 இல் ( தெ 3மிஸ்டேக்ஸ் இன் மை லைஃப் என்பதனை அடிப்படையாகக் கொண்டது); 2014 இல் 2 ஸ்டேட்ஸ் ( 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் அடிப்படையாகக் கொண்டது) மற்றும் 2017 இல் ஹாஃப் கேர்ள்பிரண்ட் ( ஹாஃப் கேர்ள்பிரண்ட் அடிப்படையாகக் கொண்டது). பகத் 2014 இல் கிக் ,காய் போ சே! மற்றும் ஹாஃப் கேர்ள்பிரண்ட் போன்ற பாலிவுட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் .[13] 014 இல் 59வது ஃபிலிம்பேர் விருதுகளில்கை போ சே படத்திற்காக பகத் சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[14]
வரவேற்பு
தொகுபகத், தனது எழுத்துத் திறமைக்காக விமர்சிக்கப்பட்டார்.[15] ஒன் இந்தியன் கேர்ள் புதினத்திற்காக 2017 இல் படைப்புத்திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளானார், ஆனால் அதை பகத் மறுத்தார்.[16][17]
ஏப்ரல் 2017 இல், ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகத்தின் புதினமான ஃபைவ் பாயிண்ட் சம்யோனை சேர்க்க தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவு விமர்சிக்கப்பட்டது.[18][19][20]
செப்டம்பர் 2017 இல் பல்கலைக்கழகம் இந்த முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தது.[21][22] ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஸ்வேதா கௌஷல், பகத் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதினார்.[4]
நூற்பட்டியல்
தொகுபுதினம்
தொகு- ஃபைவ் பாயிண்ட் சம் வன் (2004)
- டர் (2006)
- தி 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் (2008)
- 2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் (2009)
- ரெவல்யூசன் 2020 (2011)
- ஹால்ஃப் கேர்ள்பிரண்ட் (2014)
- வன் இந்தியன் கேர்ள் (2016)
- தெ கேர்ள் இன் ரூம் 105 (2018)
- வன் அரேஞ்சிடு மர்டர் (2020)
- 400 டேய்ஸ் (2021)
சான்றுகள்
தொகு- ↑ "Trial court told to hear Chetan Bhagat's plea plagiarism case". The New Indian Express. 6 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
- ↑ Kalita, S. Mitra (2008-05-17). "Chetan Bhagat | The five-point formula: keep it simple". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
- ↑ "The 2010 Time 100". Time. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ 4.0 4.1 "Chetan Bhagat, please stop writing books, concentrate on Bollywood instead". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
- ↑ The Long Video 6 | My lessons from IIM Ahmedabad (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-22
- ↑ "An Interview With Chetan Bhagat". Forbes India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ "Chetan Bhagat tweets his CBSE Class 10 mark-sheet – shares how an aggregate 76% cannot define your future". டைம்ஸ் நவ். பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ "People | Q & A with Chetan Bhagat". verveonline.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ Desk, India TV News (21 October 2013). "25 best quotes by Chetan Bhagat on career, education, love and success – IndiaTV news". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ "The Sunday Tribune – Books". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ "IIM Ahmadabad celebrates alumni success with YAAA 2018". https://www.ibtimes.co.in/iim-ahmadabad-celebrates-alumni-success-yaaa-2018-773149.
- ↑ "Tale of the lucky hostel room". Hindustan Times. 24 February 2012. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
- ↑ "Every time Chetan Bhagat made it to Bollywood – A Bollywood Hit!". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Filmfare Awards Winners From 1953 to 2020". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.
- ↑ "Why I gave Chetan Bhagat the 'nastiest review'". dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Chetan Bhagat accused of plagiarising his latest bestseller, One Indian Girl". Hindustan Times. 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Sales of Chetan Bhagat's 'One Indian Girl' stopped by injunction, on plagiarism charges". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Chetan Bhagat's Five Point Someone in Delhi University English literature syllabus". Hindustan Times. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Chetan Bhagat's Five Point Someone To Be Part Of DU's English Literature Syllabus". outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ "Five Point Someone in DU syllabus: Let's stop blaming Chetan Bhagat and start rueing the state of Indian readership". The Indian Express. 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ MP, Team (24 September 2017). "'Five Point Someone' not part of DU curriculum this session". millenniumpost.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.
- ↑ Malavikka (25 September 2017). "DU's Proposal To Add 'Five Point Someone' in Curriculum Reconsidered". careerindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2020.