தில்லி அரசு

தில்லி அரசு என்பது, இந்திய நாட்டின் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களை ஆளும் அரசாகும். தில்லியின் துணை ஆளுனரின் செயலாட்சியில், நீதித்துறையும் சட்டசபையும் நடைபெறுகிறது. தில்லி சட்டமன்றமானது, 70 சட்டமன்ற உறுப்பினர்களைக்(MLA) கொண்டுள்ளது.

தில்லி அரசு
தலைமையிடம்தில்லி
செயற்குழு
ஆளுநர்வினை குமார் சாக்சேனா
முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால்
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • மாநிலச் சட்டப் பேரவை
சபாநாயகர்ராம் நிவாஸ் கோயல்
நீதித்துறை
உயர் நீதிமன்றம்தில்லி உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிசதீஷ் சந்திர வர்மா

இங்குள்ள காவல் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் தில்லி அரசிற்கு இல்லை; இந்தியத் தலைநகரின் பாதுகாப்பு கருதி, தில்லி மாநிலத்தின் காவல் துறையை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது.

அமைச்சரவை உறுப்பினர்கள்

தொகு

தில்லி அரச அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியல் [1]:

caption
பெயர் கவனிக்கும் துறைகள்
அசோக் குமார் வாலியா குடும்ப நலன், உயர் கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி, தொழிலாளர் நலன், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்துறை(I&FC)
அரவிந்த சிங் லவ்லி ஊரக வளர்ச்சி, வருவாய், உள்ளூர் அமைப்புகள், குருத்வாரா தேர்தல் மற்றும் ஆட்சித்துறை
அருண் யுசப் மின்சாரம், உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், தொழில் துறை, வேலைவாய்ப்பு
ராஜ்குமார் சவுகான் பொதுப்பணிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், அபிவிருத்தித்துறை
கிரண் வாலியா கல்வி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், சமுக நலம்
ராம்காந்த் கோசுவாமி போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், தேர்தல் நலன்

சான்றுகள்

தொகு
  1. "அமைச்சரவை உறுப்பினர்கள்". Delhi Govt Portal. Archived from the original on 2013-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-27.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_அரசு&oldid=3635009" இலிருந்து மீள்விக்கப்பட்டது