தலைநகர் ஆட்பகுதியும் மாவட்டங்களும்

ஒரு தலைநகர் ஆட்பகுதி அல்லது தலைநகர் மாவட்டம் என்பது நாட்டின் அரசு கோலோச்சும் சிறப்பு நிர்வாகக் கோட்டம் ஆகும். ஒரு கூட்டாட்சி அமைப்பில் எந்தவொரு மாநிலமும் தன்னகத்தே நாட்டின் தலைநகரம் இருப்பதால் சிறப்புற இயலாது. தலைநகர் ஆட்பகுதி ஒரு சிறப்பு கூட்டாட்சி மாவட்டமாக இருக்கலாம்.

இங்கு நாட்டின் தலைநகரை நிர்வகிக்கும், ஆனால் தனி சிறப்புநிலை வழங்கப்படாத கோட்டங்களை இனம் காண வேண்டும்.(எடுத்துக்காட்டாக இல்-டெ-பிரான்ஸ் பகுதிக்கும் மற்ற பிரான்ஸின்) பகுதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை). சில கூட்டாட்சி நாடுகளில் (பெல்ஜியம் போல்), தங்கள் தலைநகருக்கு மற்ற மாநிலங்களுக்கு இணையாக முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

சில கூட்டாட்சி நாடுகளில் தலைநகரை சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு எந்த தனி சிறப்பும் வழங்கப்படுவதில்லை.வேறு சில நாடுகளில் தேசிய தலைநகரம் மாநில தலைநகரத்துடன் ஒன்றிணைந்துள்ளது: பொஸ்னியாவும்,ஹெர்ஸகொவினாவுமிற்கான தலைநகர்சரயேவோ, பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவுற்குமான கூட்டாட்சியின் தலைநகருமாகும்; மற்றும் சுவிற்சர்லாந்து நாட்டுத்தலைநகர் பெர்ன், பெர்ன் கன்டோன் தலைநகரமுமாகும்.

இரண்டு தேசிய தலைநகரங்கள் தனி கூட்டாட்சி மாவட்டங்களுமல்லாது,கூட்டாட்சி மாநில தலைநகரங்களுமல்லாது உள்ளன: கனடாவின் தலைநகர் ஒட்டாவா,மற்றும் மைக்ரோனேசியா கூட்டாட்சியின் தலைநகர் பாலிகிர். கனடா அரசு ஒட்டாவா பகுதியை தேசிய தலைநகர் வலயமாக அறிவித்திருந்தாலும் இது ஒரு நிர்வாக அமைப்பல்ல; கூட்டாட்சி அமைப்பில் இப்பகுதியில் உள்ள நிலங்களையும் கட்டிடங்களையும் நிர்வகிக்கும் அரசு நிறுவனத்தின் எல்லைப்பகுதியேயாகும்.

தங்கள் தேசிய தலைநகரப் பகுதிகளுக்கு சிறப்பு நிர்வாக மாவட்ட அல்லது ஆட்பகுதி கொண்டவை கீழே உள்ளன:

இந்தியா தொகு

தேசிய தலைநகர் பகுதி (NCT) இந்தியாவின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதியாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: புது தில்லி, தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட். இது தவிர கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது.

நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது.

இங்கு ஆட்சியமைப்பு தனித்த இயல்புடையது; மக்களால் தேர்ந்த அரசு மாநகர பொறுப்புகளை கையாள நடுவண் அரசு காவல் மற்றும் பொது நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

.