தில்லி கண்டோன்மென்ட்

தில்லி பாசறை (Delhi Cantonment) தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது. பிப்ரவரி 1938 வரை, கண்டோன்மென்ட் வாரியம் தில்லி கண்டோன்மென்ட் அமைப்பு என்று அறியப்பட்டது. இதன் பரப்பளவு தோராயமாக 10,521 ஏக்கர் (4,258 எக்டர்) ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 116,352 என இருந்தது.

தில்லி கண்டோன்மென்ட்
மாவட்ட உட்பிரிவு
தில்லி கண்டோன்ட்மென்ட் தொடருந்து நிலையம்
தில்லி கண்டோன்ட்மென்ட் தொடருந்து நிலையம்
தில்லி கண்டோன்மென்ட் is located in டெல்லி
தில்லி கண்டோன்மென்ட்
தில்லி கண்டோன்மென்ட்
வடக்கு தில்லியில் அமைந்துள்ள தில்லி கண்டோன்மென்ட்
ஆள்கூறுகள்: 28°35′46″N 77°07′48″E / 28.596°N 77.130°E / 28.596; 77.130
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
பரப்பளவு
 • மொத்தம்43 km2 (17 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,16,352
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அ.கு.எண்
110010
தொலைபேசி இணைப்பு எண்'91-011
மாவட்டம்- தென்மேற்கு மாவட்டம்

இது கண்டோன்மென்ட் சட்டம், 2006 [2] மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பல்வேறு கொள்கை கடிதங்களும் அறிவுறுத்தல்களும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. வாரியம் ஒரு உள்ளூர் நகராட்சி அமைப்பாக செயல்பட்டாலும், இது புது தில்லியின் பொது பாதுகாப்பு தோட்டங்களின் இயக்குநரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும், சண்டிகர், மேற்குக் கட்டளையின் முதன்மை இயக்குநர், பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் உள்ளது. [3]

வரலாறு

தொகு

தில்லியிலும், அகமதாபாத்திலும் உள்ள பாசறைகள் முதலில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. தில்லி பாசறை இந்தியத் தரைப்படையின் தலைமையகமாகும். இதில் இராணுவத்தினருக்கான குழிப்பந்தாட்ட மைதானம்; பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் நிறுவனம் ; இராணுவத்தினருக்கான வீடுகள்; இராணுவம் மற்றும் விமானப்படை பொதுப் பள்ளிகள்; மேலும்பல்வேறு பாதுகாப்பு தொடர்பான நிறுவல்கள் அமைந்துள்ளன. மேலும், இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையும் இந்திய ஆயுதப்படைகளின் மூன்றாம் நிலை மருத்துவ மையமும் இங்குள்ளது.

தில்லி கண்டோன்மென்ட் இரயில் நிலையம் என்ற ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர் வண்டிகள் புறப்படுகின்றன.

மக்கள்தொகையியல்

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் [4] இது 124,452 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் 61% ஆண்களும், 39% பெண்களும் இருக்கின்றனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 77% ஆகும். இது தேசிய சராசரியான 74% ஐ விட அதிகம். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% எனவும் பெண்களின் கல்வியறிவு 68% எனவும் உள்ளது. இதன் மக்கள் தொகையில் 12% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சான்றுகள்

தொகு
  1. "About Delhi".
  2. Document, http://www.cbdelhi.in/Documents/ca2006.pdf பரணிடப்பட்டது 31 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. "Delhi Cantonment Board, Ministry of Defence". Archived from the original on 31 May 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2014.
  4. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_கண்டோன்மென்ட்&oldid=3777003" இலிருந்து மீள்விக்கப்பட்டது