வடமேற்கு தில்லி மாவட்டம்

தில்லியில் உள்ள மாவட்டம்

வடமேற்கு தில்லி மாவட்டம் (North West Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் செப்டம்பர் 2012-இல் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது)

வடமேற்கு தில்லி மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • நிர்வாகம்தில்லி மாநிலம்
பரப்பளவு
 • மொத்தம்443 km2 (171 sq mi)
ஏற்றம்
213 m (699 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்36,56,539
 • அடர்த்தி8,254/km2 (21,380/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிவடமேற்கு தில்லி
உள்ளாட்சி நிர்வாகம்வடக்கு தில்லி மாநகராட்சி
தில்லியின் 11 மாவட்டங்கள்

அமைவிடம்

தொகு

வடமேற்கு தில்லி மாவட்டத்தின் வடக்கில் அரியானாவின் சோனிபத் நகரம், வடகிழக்கில் உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், தென்கிழக்கில் வடக்கு தில்லி மாவட்டம், தெற்கில் மேற்கு தில்லி மாவட்டம், மேற்கில் அரியானாவின் சஜ்ஜர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

வடமேற்கு தில்லி மாவட்டம் சரசுவதிவிகார், ரோகிணி, மற்றும் என கஞ்சன்வாலா என மூன்று வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் முப்பது கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வடமேற்கு தில்லி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,656,539 ஆக உள்ளது. நகரங்களில் 94.15% மக்களும்; கிராமங்களில் 5.85% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,960,922 ஆண்களும்; 1,695,617 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 865 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 443 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 8,254 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.45 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.66 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 78.41 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 449,894 ஆக உள்ளது. [2]

சமயம்

தொகு

வடமேற்கு தில்லி மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,211,042 (87.82 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 291,330 (7.97 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 92,129 (2.52 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 43,460 (1.19 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 14,100 (0.39 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 2,281 (0.06 %) ஆக உள்ளது.

மொழிகள்

தொகு

தேசிய தலைநகர் வலயத்யத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "North West District". Archived from the original on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
  2. North West Delhi District : Census 2011 data

வெளி இணைப்புகள்

தொகு