தோடா மாவட்டம்

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்

தோடா மாவட்டம் (Doda district), இந்தியாவின், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் சம்மு பிரதேசத்தில் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிருவாகத் தலைமையிடம் தோடா நகரம் ஆகும்.

தோடா மாவட்டம் Doda
சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் தோடா மாவட்டத்தின் அமைவிடம்
சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் தோடா மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
பிரதேசம்சம்மு
தலைமையிடம்தோடா
பரப்பளவு
 • மொத்தம்8,912[1] km2 (Formatting error: invalid input when rounding sq mi)
எழுத்தறிவு64.68 % (2011)
இணையதளம்http://doda.nic.in

மக்கள் வகைப்பாடு

தொகு

8,912 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தோடா மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 4,09,576 ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 213,641 ஆகவும், பெண்கள் 196,295 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 46 பேர் வீதம் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 64.68 விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 78.41% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 49.69% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 71,240 ஆக உள்ளது.[1]

சமயம்

தொகு

தோடா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 1,87,621 (45.77 %) ஆகவும், இசுலாமியர் 220,614 (53.82 %) ஆகவும், மற்றவர்கள் 722 பேராகவும் உள்ளனர்.

மொழிகள்

தொகு

தோடா மாவட்டத்தில் இசுலாமியர்கள் காஷ்மீரி மற்றும் உருது மொழியும், இந்துக்கள் டோக்கிரி மற்றும் காங்கிரி மொழிகளும் பேசுகின்றனர்.[2]

நிர்வாகம்

தொகு

தோடா மாவட்டம் தோடா மற்றும் பதர்வா இரண்டு கோட்டங்களுடனும்; தோடா, பதர்வா, தாத்ரி, கண்டோ என நான்கு வருவாய் வட்டங்களுடன் கூடியது. 406 கிராமங்கள் கொண்ட தோடா மாவட்டத்தில் பதர்வா, பாக்வா, காட், தாத்ரி, காண்டோ, அசார், மர்மட் மற்றும் குண்டனா என எட்டு ஊராட்சி ஒன்றியங்களும், 232 பஞ்சாயத்து கிராமங்களும் கொண்டுள்ளது.[3]

அரசியல்

தொகு

தோடா மாவட்டம் தோடா மற்றும் பதர்வா என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உடையது.[4]

மாவட்ட எல்லைகள்

தொகு

வடக்கே கிஷ்துவார் மாவட்டம், தென்கிழக்கே சம்பா மாவட்டம் (இமாசல பிரதேசம்), தெற்கே கதுவா மாவட்டம், தென்மேற்கே உதம்பூர் மாவட்டம், மேற்கே இராம்பன் மாவட்டம், வடமேற்கே அனந்தநாக் மாவட்டம் தோடா மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 http://www.census2011.co.in/census/district/634-doda.html
  2. "Bhadrawahi: A language of Pakistan". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  3. "Official webportal of Doda district". NIC Doda. Archived from the original on 2013-05-01. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
  4. "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_மாவட்டம்&oldid=4111877" இலிருந்து மீள்விக்கப்பட்டது