ராஜ்புத்
ராஜ்புத் அல்லது ராஜபுத்திரர்கள் என்ற சொல்லுக்கு அரசனின் மகன் என்று பொருள்.[1] இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல். ராஜபுத்திரர்கள் எனவும் இவர்களை அழைப்பர். இவர்கள் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் வசித்து வந்தனர். இந்து மதத்தின் வீரம் மிக்கவர்கள் என இவர்களைச் சொல்லலாம்.[2] தற்போதைய ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் இவர்கள் அரசாட்சி செலுத்தி வந்தனர். 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் மிகவும் செல்வாக்கோடு இருந்த காலம்.[3]
1876-இல் ராஜபுத்திர வீரர்கள் |
பூர்வீகம்
தொகுராஜபுத்திரகளின் தோற்றம் பற்றி 6 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றில் எந்தவித பதிவுகளும் இல்லை என வரலாற்றாசிரியர்கள் வி.பி.மாலிக் மற்றும் எம். எஸ் . நாரவானே ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[4] ஹூணர்களால் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து மதத்தின் வருணாசிரமம் போன்றவற்றினால் ஹூணர்கள் இந்திய சமூகத்தோடு கலந்து 36 வகையான ராஜபுத்திரர்கள்[5] இனம் உருவாகியிருக்கக் கூடும் எனச் சொல்கின்றனர்.[6] ஆனால் கவுரி சங்கர் மற்றும் சி.வி.வைத்யா போன்ற வரலாற்று அறிஞர்கள் இதை ஏற்கவில்லை.[7]
ராஜபுத்திர அரச வம்சம்
தொகு9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து, ராஜ்புத் வம்சாவளியினரின் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். மேலும் பல சிறிய ராஜபுத்திர குல அரசாட்சிகள் சில பகுதிகளில் இருந்தது. வட இந்தியாவில் முகலாய அரசர்களின் வெற்றி இவர்களின் அரசு வீழ்வதற்குக் காரணமாய் அமைந்தது. மேலும் பஞ்சாப் மற்றும் கங்கை நதி பள்ளத்தாக்கை முஸ்லீம் கைப்பற்றிய பிறகு, ராஜபுத்திரர்கள் தங்கள் அரசை இழந்து காடுகளில் பதுங்கி வாழ வேண்டியதாயிற்று. பின்னர், அலாவுதீன் கில்சி போன்ற தில்லி சுல்தான்களால் தென்கிழக்கு இராஜஸ்தானின் மேவார் பகுதியின், சித்தோர்கார் கோட்டை, ஜெய்சல்மேர் கோட்டை மற்றும் பல கோட்டைகளைக் கைப்பற்றப்பட்டதால் ராஜபுத்திர அரசுகள் வீழ்ச்சியுற்றது.[1]
கோட்டைகளும் கோயில்களும்
தொகுஇராஜபுத்திர மன்னர்கள் புந்தேல்கண்ட், மகோபா மற்றும் கலிஞ்சர் பகுதிகளை ஆண்ட சந்தல வம்ச இராஜபுத்திர மன்னர்கள் கி பி 10 - 11-வது நூற்றாண்டில் கஜுராஹோ கோயில்களைக் கட்டினர். கலிஞ்சர் கோட்டை, ஜோத்பூர் கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை, உதய்ப்பூர் கோட்டை போன்று மலைகளின் மீது பெரும் கோட்டைகளை கட்டி ஆண்டனர்.
புகழ் பெற்ற இராஜபுத்திர வம்சங்கள்
தொகு- கூர்ஜர பிரதிகார வம்சம்
- சுஹத்வால் வம்சம்
- சௌகான் வம்சம்
- பார்மர் வம்சம்
- சிசோதியா வம்சம்
- சாந்தல வம்சம்
புகழ் பெற்றவர்கள்
தொகு- கூரஜர-பிரதிகார வம்சத்தின் தேவராஜ், வத்சராஜ், இரண்டாம் நாகபட், மகேந்திரபால் மற்றும் மகிபால்
- கஹத்வால் வம்சத்தின் கோவிந்த சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன்
- சௌகான் வம்சத்தின் பிரித்திவிராசு சௌகான்
- செயசந்திரன்
- பார்மர் வம்சத்தின் மால்வா மன்னர்கள் உபேந்திரர், சிந்துராஜ், ஸ்ரீஹர்சன், ஜெய்சிங் மற்றும் உதயாதியன்.
- சிசோதிய வம்ச மகாராணா பிரதாப்
- சாந்தல வம்ச யசோவர்மன், கீர்த்திவர்மன் மற்றும் மதனவர்மன்
சுதந்திரத்திற்குப் பின்
தொகுஇந்தியா சுதந்திரம் அடைந்த பின் ராஜபுத்திர சமஸ்தானத்திற்கு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர்கள் பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் அல்லது தனி நாடாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் இந்தியாவோடு இணைந்திருக்கிறோம் என உடன்படிக்கை செய்தனர்.[8]
உணவுப் பழக்கம்
தொகுஇவர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தனர். மது அருந்தும் பழக்கமும் வெற்றிலை போடும் பழக்கமும் இருந்திருக்கிறது.[9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rajput". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 27 November 2010.
- ↑ Balfour, Edward (1885). The Cyclopædia of India and of Eastern and Southern Asia. Vol. 1. Bernard Quaritch. p. 473.
- ↑ Singhji, Virbhadra (1994). The Rajputs of Saurashtra. Popular Prakashan. p. vi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-546-9.
- ↑ Naravane, M. S.; Malik, V. P. (1999). The Rajputs of Rajputana: a glimpse of medieval Rajasthan. APH Publishing. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-118-2.
- ↑ "The Thirty-six Royal Races of Rajput". Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 2016-04-16.
- ↑ Rajput Indian history
- ↑ Mahajan, Vidya Dhar (1968). Ancient India. S. Chand. p. 551. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.
- ↑ Claude Markovits (1 January 2002). A History of Modern India, 1480-1950. Anthem Press. pp. 406–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-004-4. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
- ↑ Singh K.S. (2002) People of India: Gujarat Part 3 Vol XXII Anthropological Survey of India. P.1174 . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7991-106-3(3852)