செய்ப்பூர்
செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.
செய்ப்பூர் जयपुर | |||||||||
இளஞ்சிவப்பு நகரம் | |||||||||
— பெருநகரம் — | |||||||||
அமைவிடம்: செய்ப்பூர், இராசத்தான்
| |||||||||
ஆள்கூறு | 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | இராசத்தான் | ||||||||
மாவட்டம் | செய்ப்பூர் | ||||||||
ஆளுநர் | |||||||||
முதலமைச்சர் | அசோக் பர்னாமி | ||||||||
தலைவர் | சோதி கண்டல்வால் | ||||||||
மக்களவைத் தொகுதி | செய்ப்பூர் | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
32,10,570 (2009[update]) • 16,021/km2 (41,494/sq mi) | ||||||||
மொழிகள் | இந்தி | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi) • 431 மீட்டர்கள் (1,414 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.jaipur.nic.in |
அமைவிடம்
தொகுமேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது.
வரலாறு
தொகுமக்கள்தொகையியல்
தொகு2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர்.[1]
இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
போக்குவரத்து
தொகுசெய்ப்பூர் தொடருந்து நிலையம்
தொகுசெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, சம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விசயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, சான்சி, புவனேசுவர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது.[2]
செய்ப்பூர் வானூர்தி நிலையம்
தொகுஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது.
செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மசுகட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது.[3]
சாலைப் போக்குவரத்து
தொகு1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அச்சுமீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது.[4]
ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 செய்ப்பூர் வழியாக செல்கிறது.
சுற்றுலாத்தலங்கள்
தொகுபடக்காட்சிகள்
தொகு-
பிர்லா மந்திர், செய்ப்பூர்
-
சாங்கிலி திகம்பர சமணக் கோயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ Jaipur City Census 2011 data
- ↑ https://indiarailinfo.com/departures/jaipur-junction-jp/272 ஜெய்ப்பூர் தொடருந்து கால அட்டவணை]
- ↑ Jaipur International Airport
- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
- ↑ "Jal Mahal gets a Rs1000 cr facelift". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-12.