விசயவாடா
விஜயவாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இது கிருஷ்ணா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. விஜயவாடாவிலிருந்து குண்டூர் 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் விசயவாடாவையும், குண்டூரையும் இரண்டை நகரம் என என்பர்.
விசயவாடா | |
— மாநகரம் — | |
அமைவிடம் | 16°30′54″N 80°37′45″E / 16.51500°N 80.62917°Eஆள்கூறுகள்: 16°30′54″N 80°37′45″E / 16.51500°N 80.62917°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா மாவட்டம் |
ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன்[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
தெலுங்கானா மாநிலத்ததின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தென் மத்திய இரயில்வேயில் விஜயவாடா இரயில் நிலையமே மிகவும் பெரியதாகும்.
கனக துர்கை கோயில், அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானி தீவு, கொண்டபள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்க தகுந்த இடங்கள் ஆகும்.