பவானித் தீவு, விசயவாடா
பவானித் தீவு (Bhavani Island) என்பது இந்திய நாட்டின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசயவாடா நகரின் அருகில் பாயும் கிருட்டினா நதியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். பிரகாசம் குறுக்கணையின் நீரோட்டத்திற்கு எதிர்த் திசையில் இத்தீவு அமைந்துள்ளது. 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தீவு மிகப்பெரிய ஆற்றுத் தீவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது[1][2].
பவானித் தீவு | |
---|---|
பவானித் தீவுக்கு அருகிலுள்ள மனிதனால் உருவாக்கப்பட்டத் தீவு | |
அமைவிடம் | விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 16°31′22″N 80°34′23″E / 16.522780°N 80.573107°E |
பரப்பளவு | 133 ஏக்கர்கள் (54 ha) |
இயக்குபவர் | ஆந்திரா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் |
பெயர்க் காரணம்
தொகுதுர்கா தேவி தெய்வத்தின் இருப்பிடம் கனகதுர்கா கோவிலாகும். துர்கா தேவிக்கு பவானி என்று வேறு பெயரும் இருக்கிறது. இத்துர்கா தேவி வாழும் கோவிலுக்குப் பக்கத்தில் இத்தீவு அமைந்துள்ளதால் பவானித் தீவு எனப்பெயர் பெற்றது[3].
சுற்றுலா மேம்பாடு
தொகுஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் பவானித் தீவை ஒரு சுற்றுலாத்தளமாக மாற்றும் திட்டத்திற்கு அடிகோலி முயற்சி மேற்கொண்டது. சில்பரமம் என்ற கலை மற்றும் கைத்தொழில் கிராமம் உருவாக்குதலையும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டது. கொண்டப்பள்ளி பொம்மை தயாரிப்பாளர்கள்[4][5] போல உள்ளூரில் உள்ள பாரம்பரியக் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது.பவானித் தீவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் ஈடுபட்டது. கிராமப்புற அருங்காட்சியகம், விளையாட்டுகள், தங்கும் குடில்கள், ஆற்றங்கரைப் பூங்காக்கள் மற்றும் கயிற்றுப் பாதைகள் போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுலாப் பயனிகளைக் கவர்ந்திழுப்பதில் கவனம் செலுத்தியது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhavani Island". AP Tourism Department. Archived from the original on 29 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Island info" (பி.டி.எவ்). Goibibo.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
- ↑ "Naming of Island". The Hindu (VIJAYAWADA). 7 Nov 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/tdp-vows-to-fight-move-for-privatisation-of-bhavani-island/article2605579.ece. பார்த்த நாள்: 12 June 2014.
- ↑ P. SUJATHA VARMA (27 May 2013). "Tourism improvements". The Hindu (VIJAYAWADA). http://www.thehindu.com/news/cities/Vijayawada/vijayawadas-bhavani-island-to-regain-its-sheen-soon/article4755368.ece. பார்த்த நாள்: 12 June 2014.
- ↑ P. SUJATHA VARMA (19 May 2014). "Shilparamam to add colour to Bhavani Island". The Hindu (VIJAYAWADA). http://www.thehindu.com/news/cities/Vijayawada/shilparamam-to-add-colour-to-bhavani-island/article6026169.ece. பார்த்த நாள்: 24 July 2014.
- ↑ P. SUJATHA VARMA (5 Feb 2014). "Development of island". The Hindu (Vijayawada). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/berm-parkbhavani-island-ropeway-final/article5655707.ece. பார்த்த நாள்: 12 June 2014.
- ↑ "Bhavani Island was developed as a new adventure sports". jagranjosh.com. 24 Mar 2014. Archived from the original on 30 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.