பெருநகர் பகுதி

பெருநகர் பகுதி (metropolitan area) என வேலைவாய்ப்பும் மக்கள்தொகையும் மிகுந்த நகரமையத்தை சுற்றி சமூக பொருளியல் காரணங்களால் பிணைந்துள்ள சிறுபயணத் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய நகரப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்காரணங்களால் பெருநகர்ப் பகுதி சில நேரங்களில் பயணிகள் வட்டம் என்றும் தொழிலாளர் சந்தை பகுதி என்றும் அறியப்படுகிறது.காட்டாக, சென்னையை அண்மித்துச் சூழ்ந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நகரங்களும் காஞ்சிபுரம் மாவட்ட நகரங்களும் அவற்றின் பணிவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளால் பிணைக்கப்பட்டு சென்னை பெருநகரம் என அழைக்கப்படுகிறது.

இந்தியாதொகு

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரின் வரையறையின்படி 40 இலட்சம் (4 மில்லியன்) மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்கள் பெருநகரங்களாக அறிவிக்கப்படுகின்றன.[1] மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத்,நாக்பூர், அகமதாபாத், புனே, நாசிக்,கோயம்புத்தூர் , சேலம் மற்றும் சூரத் ஆகிய பன்னிரெண்டு நகரங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்நகரங்களில் வாழும் அரசு ஊழியர்கள் கூடுதல் வீட்டு வாடகைப்படி பெற தகுதியானவர்கள்.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருநகர்_பகுதி&oldid=3129067" இருந்து மீள்விக்கப்பட்டது