குவாலியர் (Gwalior) (இந்தி/மராத்தி: ग्वालियर ஒலிப்பு) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு தெற்கே 122 கிலோமீட்டர்கள் (76 mi) தொலைவிலும் மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 423 கிலோமீட்டர்கள் (263 mi) வடக்கேயும் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரமும் இங்குள்ள கோட்டையும் பல வட இந்திய பேரரசுகளின் மையமாக விளங்கியுள்ளன. குவாலியர் நகரம் இதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்திற்கு நிர்வாகத் தலைமையகமாக விளங்குகிறது.

குவாலியர்

ग्वालियर

சிந்தியாக்களின் நகரம்
—  பெருநகரப் பகுதி  —
குவாலியர் கோட்டை (உலக பாரம்பரிய இடம்)
குவாலியர் கோட்டை (உலக பாரம்பரிய இடம்)
குவாலியர்
இருப்பிடம்: குவாலியர்

, மத்தியப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 26°08′N 78°06′E / 26.14°N 78.10°E / 26.14; 78.10
நாடு  இந்தியா
பகுதி சம்பல்
மாநிலம் மத்தியப் பிரதேசம்
மாவட்டம் குவாலியர்
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி, மங்குபாய் சாகன்பாய் படேல்[1]
முதலமைச்சர் மோகன் யாதவ்[2]
நகரத்தந்தை திருமதி. சமீக்ஷா குப்தா (திசம்பர் 15, 2009 முதல்)
மக்களவைத் தொகுதி குவாலியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,01,342 (2010)

3,145/km2 (8,146/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

286.6 கிமீ2 (111 சதுர மைல்)

196 மீட்டர்கள் (643 அடி)

குறியீடுகள்

குவாலியர் கோட்டை பலமுறை கைமாறியுள்ளது; எட்டாவது நூற்றாண்டில் டோமராக்களிடமிருந்து முகலாயர்களுக்கும் பின்னர் சிந்தியாக்களின் கீழ் மராத்தாக்களுக்கும் (1754) கைமாறி குறைந்த காலம் ஜான்சியின் லட்சுமி பாயிடமும் தாத்தியா டோப்பிடமும் பிரித்தானியர்களிடமும் இருந்தது.

இங்கு பல சிறப்புமிகு கல்விக்கூடங்கள் உள்ளன; இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (IIITM), இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக் கழகம், சிந்தியா பள்ளி, மாதவ் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கழகம், இலட்சுமிபாய் தேசிய உடலியல் கல்வி நிறுவனம் ஆகியன இவற்றில் சிலவாகும்.

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாலியர்&oldid=3538997" இலிருந்து மீள்விக்கப்பட்டது