குவாலியர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)
குவாலியர் மக்களவைத் தொகுதி (Gwalior Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி குவாலியர் மாவட்டம் முழுவதையும் மற்றும் சிவபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
குவாலியர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
குவாலியர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 21,54,601[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பாரத் சிங் குசுவா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற பிரிவுகள்
தொகுகுவாலியர் மக்களவைத் தொகுதி தற்போது பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
14 | குவாலியர் ஊரகம் | குவாலியர் | சகாப் சிங் குர்ஜார் | ஐஎன்சி | |
15 | குவாலியர் | பிரதூமன் சிங் தோமர் | பாஜக | ||
16 | குவாலியர் கிழக்கு | சதீசு சிகர்வார் | ஐஎன்சி | ||
17 | குவாலியர் தெற்கு | நாராயண் சிங் குசுவா | பாஜக | ||
18 | பிதர்வார் | மோகன் சிங் ரத்தோர் | பாஜக | ||
19 | தாப்ரா (ப. இ.) | சுரேசு ராஜே | ஐஎன்சி | ||
23 | கரேரா (ப. இ.) | சிவபுரி | இரமேசு பிரசாத் கதிக் | பாஜக | |
24 | போகரி | கைலாசு குசுவா | ஐஎன்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | வி. ஜி. தேசுபாண்டே | இந்து மகாசபா | |
1952^ | நாராயண் பாசுகர் கரே | ||
1957 | சூரஜ் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1962 | விஜயா ராஜே சிந்தியா | ||
1967 | இராம் அவதார் சர்மா | பாரதிய ஜனசங்கம் | |
1971 | அடல் பிகாரி வாஜ்பாய் | ||
1977 | நாராயண் செஜ்வால்கர் | ஜனதா கட்சி | |
1980 | |||
1984 | மாதவராவ் சிந்தியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1989 | |||
1991 | |||
1996 | மத்தியப் பிரதேச விகாஸ் காங்கிரஸ் | ||
1998 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1999 | ஜெய்பன் சிங் பவையா | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | இராம்சேவக் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2007^ | யசோதரா ராஜே சிந்தியா | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | |||
2014 | நரேந்திர சிங் தோமர் | ||
2019 | விவேக் ஷெஜ்வால்கர் | ||
2024 | பாரத் சிங் குசுவா |
- ^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பாரத் சிங் குசுவா | 6,71,535 | 49.99 | ▼-2.45% | |
காங்கிரசு | பிரவீன் பதக் | 6,01,325 | 44.77 | +4.61% | |
பசக | கல்யாண் சிங் கன்சானா | 33,465 | 2.49% | ||
நோட்டா | நோட்டா | 3,341 | 0.25 | ||
வாக்கு வித்தியாசம் | 70,210 | 5.22 | |||
பதிவான வாக்குகள் | 13,43,229 | 62.13 | 2.31 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | விவேக் நாராயண் செஜ்வால்கர் | 6,27,250 | 52.44 | ||
காங்கிரசு | அசோக் சிங் | 4,80,408 | 40.16 | ||
பசக | மம்தா சிங் குசுவாகா | 44,677 | 3.74 | ||
சுயேச்சை | கோவிந் சிங் | 6,320 | 0.53 | ||
வாக்கு வித்தியாசம் | 1,46,842 | 12.28 | |||
பதிவான வாக்குகள் | 11,96,888 | 59.82 | +7.02 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
குறிப்புகள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Result 2024". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.