1971 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல்

இந்தியக் குடியரசின் ஐந்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஐந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 352 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்திரா காந்தி மூன்றாம் முறையாக பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1971

← 1967 மார்ச் 1–10, 1971 [1] 1977 →

மக்களவைக்கான 518 இடங்கள்
பதிவு செய்த வாக்காளர்கள்274,189,132
வாக்களித்தோர்55.27% 5.77pp
  First party Second party
 

தலைவர் இந்திரா காந்தி பி. சுந்தரய்யா
கட்சி இந்திரா காங்கிரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ரே பரேலி -
வென்ற
தொகுதிகள்
352 25
மாற்றம் Increase 73 Increase 6
விழுக்காடு 43.68 5.12%

  Third party Fourth party
 

தலைவர் வாஜ்பாய் காமராஜர்
கட்சி பாரதீய ஜனசங்கம் காங்கிரசு (ஓ)
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
குவாலியர் நாகர்கோவில்
வென்ற
தொகுதிகள்
22 16
மாற்றம் 13 புதிய கட்சி
விழுக்காடு 7.35% 10.43%


முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

பின்புலம்

தொகு

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரசு இரண்டாக பிளவுபட்டது. பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் “நிறுவன காங்கிரசு” அல்லது ஸ்தாபனக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியும் உருவாகின. மக்களவையில் பெரும்பான்மையை இழந்த இந்திரா திமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவுடன் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தார். பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கு முன்னராகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். கரீபீ ஹடாவோ (வறுமையை ஒழி) என்ற புதிய கோஷத்துடன் அவர் செய்த பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்திராவின் காங்கிரசு நிறுவன காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை எளிதில் தோற்கடித்து 352 தொகுதிகளில் வென்றது.

முடிவுகள்

தொகு

மொத்தம் 55.27% வாக்குகள் பதிவாகின

கூட்டணி கட்சி வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு %
காங்கிரசு கூட்டணி
இடங்கள்: 375
மாற்றம்:
 113
வாக்கு %: 47.52
இந்திரா காங்கிரசு 352  93 43.68
திமுக 23 3.84
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இடங்கள்: 51 மாற்றம்: 65
வாக்கு %: 24.34
காங்கிரசு (ஓ) 16 17 10.43
பாரதீய ஜனசங்கம் 22 22 7.37
சுதந்திராக் கட்சி 8 15 3.07
சம்யுக்தா சோசலிசக் கட்சி 3 10 2.43
பிரஜா சோசலிசக் கட்சி 2 17 1.04
மற்றவர்கள் சிபிஎம் 25 6 5.13
சிபிஐ 23 4.73
மற்றவர்கள் 67 12 18.3

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு