1962 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் மூன்றாம் நாடாளுமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு மூன்றாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 361 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு நான்காம் முறையாக பிரதமரானார்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 494 இடங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 216,361,569 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 55.42% 9.98pp | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுஇத்தேர்தலில் முந்தைய தேர்தல்களில் நடப்பிலிருந்த இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ஒழிக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் மட்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. 492 தொகுதிகளில் இருந்து 492 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். பதினாறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசும் ஜவகர்லால் நேருவும் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தனர். ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற இந்திய அரசுத் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மேலும் காங்கிரசுக்கு சவால் விடும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சி எதுவும் இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. இக்காரணங்களால் சென்ற தேர்தல்களைப் போலவே காங்கிரசு எளிதில் பெருமளவு வாக்குகளையும் இடங்களையும் வென்றது.
முடிவுகள்
தொகுமொத்தம் 55.42 % வாக்குகள் பதிவாகின
கட்சி | % | இடங்கள் |
காங்கிரசு | 44.72 | 361 |
இந்திய பொதுவுடமைக் கட்சி | 9.94 | 29 |
சுதந்திராக் கட்சி | 7.89 | 18 |
பாரதிய ஜனசங்கம் | 6.44 | 14 |
பிரஜா சோசலிசக் கட்சி | 6.81 | 12 |
சுயேட்சைகள் | - | 11 |
இந்திய குடியரசுக் கட்சி | 2.83 | 10 |
திமுக | 2.01 | 7 |
சோசலிசக் கட்சி | 2.69 | 6 |
கணதந்திர பரஷத் | 0.3 | 4 |
அகாலி தளம் | 0.72 | 3 |
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி | 0.41 | 3 |
ராம் ராஜ்ய பரிஷத் | 0.6 | 2 |
பார்வார்டு ப்ளாக் | 0.72 | 2 |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 0.36 | 2 |
லொக் சேவக் சங்கம் | 0.24 | 2 |
புரட்சிகர சோசலிசக் கட்சி | 0.39 | 2 |
இந்து மகாசபா | 0.65 | 1 |
அனைத்து கட்சி மலையக தலைவர்கள் மாநாடு | 0.08 | 1 |
அரியானா லோக் சமிதி | 0.1 | 1 |
நூத்தன் மகா குஜராத் ஜனதா பரிஷத் | 0.17 | 1 |
மொத்தம் | 100 | 492 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 3rd Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்