1957 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில்ர்ருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 371 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு மூன்றாம் முறையாக பிரதமரானார்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 494 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 193,652,179 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 45.44% 0.57pp | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுஇத்தேர்தலில் 403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. வேறு சில கட்சிகளும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் பதினோறு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரசும் நேருவும் செல்வாக்கின் உச்சியில் இருந்தனர். எளிதாக சென்ற தேர்தலில் வென்றதை விட கூடுதல் வாக்குகளையும் இடங்களையும் வென்றனர்.
முடிவுகள்
தொகுமொத்தம் 45.44 % வாக்குகள் பதிவாகின
கட்சி | % | இடங்கள் |
காங்கிரசு | 47.78 | 371 |
சுயேட்சைகள் | 19.32 | 42 |
இந்திய பொதுவுடமைக் கட்சி | 8.92 | 27 |
பிரஜா சோசலிசக் கட்சி | 10.41 | 19 |
கணதந்திர பரஷத் | 1.07 | 7 |
ஜார்கண்ட் கட்சி | 0.62 | 6 |
பட்டியல் ஜாதிகள் ஜூட்டமைப்பு | 1.69 | 6 |
பாரதிய ஜனசங்கம் | 5.97 | 4 |
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி | 0.77 | 4 |
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி | 0.42 | 3 |
பார்வார்டு ப்ளாக் (மார்க்சியம்) | 0.55 | 2 |
மக்கள் ஜனநாயக முன்னணி | 0.87 | 2 |
இந்து மகாசபை | 0.86 | 1 |
மொத்தம் | 100 | 494 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 2nd Lok Sabha பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம்