ஆங்கிலோ இந்தியர்கள்
ஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர்.[5][6][7][8][9]. பிரித்தானிய இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகம். இச்சமூகம் பெருநகரங்களை வாழ்விடங்களாக் கொண்டது.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா | Est. 300,000 – 1,000,000 [1] |
ஐக்கிய இராச்சியம் | ~80,000[2] |
மியான்மர் | ~19,200 |
ஆத்திரேலியா | 22,000 |
கனடா | 22,000 |
ஐக்கிய அமெரிக்கா | 20,000 |
பாக்கித்தான் | 1,500 |
இலங்கை | 34,000 |
மொழி(கள்) | |
ஆங்கிலம் முதல் மொழி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்து மொழிகள் இரண்டாம் மொழி. | |
சமயங்கள் | |
உரோமன் கத்தோலிக்கம், மெதாடிசம், மற்றும் பாப்டிசம் .[3] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பரங்கியர்கள், இந்தோ ஆரியர்கள், திராவிடர்கள், பிரித்தானிய மக்கள், ஆங்கிலோ பர்மியர்கள், சுகாட்டிசு-இந்தியர்கள், ஐரிசு-இந்தியர்கள், கிரிட்டங்கு மக்கள், சிங்கப்பூர் ஐரோப்பியர்கள் |
ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[10].
தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[11][12]
வாழ்விடம்
தொகுநவீன ஆங்கிலோ-இந்திய சமூகம் மிகவும் சிறுபான்மை சமூகமாகும். இச்சமூக மக்கள் இந்தியா, இலங்கை, மியான்மார், வங்காளதேசம், பாக்கித்தான், சிங்கப்பூர், மலேசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னாள் ஆங்கிலேயே காலனி நாடுகளில் வாழ்பவர்கள்.
ஆங்கிலோ-இந்தியர்கள், இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், விசயவாடா, ஐதராபாத்து, கான்பூர், லக்னோ, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, போத்தனூர், கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர், மைசூர், கோவா, ஆக்ரா, குர்தா ரோடு, கட்டக், போன்ற நகரங்களில் வாழ்ந்தனர்.[13]
மொழி
தொகுஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளை இரண்டாம் மொழியாக அறிந்தவர்கள்.
சமயம்
தொகுஆங்கிலோ-இந்தியர்கள், கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுகளான உரோமன் கத்தோலிக்கம், பாப்டிசம், மெதாடிசம், புராட்டசுடண்டு சமயங்களைப் பின்பற்றுபவர்கள்.
கலாசாரமும் பண்பாடும்
தொகுஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.
தொழில்
தொகுகல்வி நிலையங்கள், இந்திய இரயில்வே துறை, அஞ்சல் துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, வனத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.[14].மேலும் உள்நாட்டு உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருகிறார்கள்[15]
இந்திய விடுதலைக்குப் பின்
தொகுஇந்திய விடுதலைக்கு முன்னர் எட்டு இலட்சமாக இருந்த ஆங்கிலோ-இந்தியர்களின் மக்கட்தொகை, தற்போது 80,000–125,000 ஆக குறைந்துள்ளது. இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள், திருமண உறவுகள் மூலம் தங்கள் வாழும் உள்நாட்டு மக்களுடன் கலந்து விட்டனர். பலர் ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.[1][16][17]
இந்திய அரசியலில்
தொகுஇந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஆங்கிலோ-இந்திய சமுக மக்களின் இரண்டு பிரதிநிதிகளை, இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.[18][19][20]
தமிழ்நாட்டில்
தொகுஇந்திய விடுதலைக்கு முன்னர், சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களாக இரண்டு ஆங்கிலேய இந்தியர்கள், ஆளுனரால் நியமிக்கப்பட்டனர்.[21] தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் மட்டும் நியமனம் செய்யப்படுகிறார்.[22]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Fisher, Michael H. (2007), "Excluding and Including "Natives of India": Early-Nineteenth-Century British-Indian Race Relations in Britain", Comparative Studies of South Asia, Africa and the Middle East 27 (2): 303–314 [305], doi:10.1215/1089201x-2007-007
- ↑ Blair Williams, Anglo Indians, CTR Inc. Publishing, 2002, p.189
- ↑ Peter Friedlander, 'Religion, Race, Language and the Anglo-Indians: Eurasians in the Census of British India', http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/Anglo-Indian%20Paper.pdf பரணிடப்பட்டது 2005-06-18 at the வந்தவழி இயந்திரம், Accessed: 03/08/09
- ↑ Oxford English Dictionary 2nd Edition (1989)
- ↑ Anglo-Indian, Dictionary.com.
- ↑ "Anglo-Indian". Oxford Dictionary Online. Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.
- ↑ "Treaty Bodies Database – Document – State Party Report" United Nations Human Rights Website. April 29, 1996.
- ↑ "Article 366(2) in The Constitution Of India 1949". பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
- ↑ இனக்கலப்பு
- ↑ அருகி வரும் ஆங்கிலோ இந்தியர்கள்
- ↑ Anglo-Indians: Is their culture dying out?
- ↑ Wright, Roy Dean; Wright, Susan W.. "The Anglo-Indian Community in Contemporary India". Midwest Quarterly XII (Winter, 1971): 175–185. http://escholarshare.drake.edu/bitstream/handle/2092/237/Wright%23237.pdf?sequence=1. பார்த்த நாள்: 19 March 2015.
- ↑ Maher, James, Reginald. (2007). These Are The Anglo Indians . London: Simon Wallenberg Press. (An Anglo Indian Heritage Book)
- ↑ "Jazz and race in colonial India: The role of Anglo-Indian musicians in the diffusion of jazz in Calcutta, Stephane Dorin - Jazz Research Journal, Vol 4, No 2 (2010)". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-19.
- ↑ "Some corner of a foreign field". The Economist. 2010-10-21 இம் மூலத்தில் இருந்து 2011-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110119140656/http://www.economist.com/node/17312300. பார்த்த நாள்: 2011-02-18.
- ↑ The Anglo-Indian Australian Story: My Experience, Zelma Phillips 2004
- ↑ "மக்களவையில் பிரதிநிதித்துவம் வேண்டும்: மத்திய அரசை நெருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-19.
- ↑ உரிமைக்கு போராடும் ஆங்கிலோ-இந்தியர்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ லோக்சபாவிற்கு 2 ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் நியமனம்
- ↑ http://www.tamilhindu.com/2010/05/the-other-face-of-justice-party-05/
- ↑ தமிழக எம்.எல்.ஏ.,வாக ஆங்கிலோ இந்தியர் நியமனம்
வெளி இணைப்புகள்
தொகுஆதார நூற்பட்டியல்
தொகு- Anthony F "Britain's Betrayal in India: The Story Of The Anglo Indian Community" Simon Wallenberg Press, Amazon Books.
- Chapman, Pat "Taste of the Raj, Hodder & Stoughton, London — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-68035-0 (1997)
- Bridget White-Kumar "The best of Anglo-Indian Cuisine – A Legacy", "Flavours of the Past", "Anglo-Indian Delicacies", "The Anglo-Indian festive Hamper", "A Collection of Anglo-Indian Roasts, Casseroles and Bakes"
- Dady D S "Scattered Seeds: The Diaspora of the Anglo-Indians" Pagoda Press
- Dyer, Sylvia "The Spell of the Flying Foxes" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0143065343, Amazon Kindle Edition
- Fernandez, Elstan Anthony "Marine Electrical Technology பரணிடப்பட்டது 2015-02-15 at the வந்தவழி இயந்திரம்" - (7 International Editions) & "Marine Control Technology பரணிடப்பட்டது 2015-02-15 at the வந்தவழி இயந்திரம்" - (2 International Editions); www.marine-electricity.com பரணிடப்பட்டது 2020-08-01 at the வந்தவழி இயந்திரம்
- Gabb A "1600–1947 Anglo-Indian Legacy"
- Hawes C "Poor Relations: The Making of a Eurasian Community "
- Moore G J "The Anglo Indian Vision"
- Stark H A "Hostages To India: Or The Life Story of the Anglo Indian Race" Simon Wallenberg Press.
- Maher, Reginald "These Are The Anglo-Indians" – (An Anglo-Indian Heritage Book) Simon Wallenberg Press
- Phillips Z "The Anglo-Indian Australian Story: My Experience. A collection of Anglo-Indian Migration Heritage Stories"
- Thorpe, O "Paper Boats in the Monsoon: Life in the Lost World of Anglo-India" Trafford Publishing
- Thomas, Noel "Footprints On The Track"