கொல்லம்
கொல்லம் (மலையாளம்:കൊല്ലം), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் ஒரே மாநகராட்சி ஆகும்.
கொல்லம் | |
---|---|
நகரம் | |
![]() | |
![]() கொல்லம் பெருநகரப் பகுதிக்குள் நகரின் இருப்பிடம் | |
கொல்லம் (கேரளம்) | |
ஆள்கூறுகள்: 8°53′N 76°36′E / 8.88°N 76.60°Eஆள்கூறுகள்: 8°53′N 76°36′E / 8.88°N 76.60°E | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | தெற்கு கேரளா |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி |
• மேயர் | பிரசன்னா எர்னஸ்ட்[1] |
• துணை மேயர் | கொல்லம் மது[2] |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691 XXX |
தொலைபேசி | +91-0474 |
இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் | KL-02 |
இணையதளம் | kollamcorporation |
இது இந்தியாவின் மலபார் கடற்கரையில் இலட்சத்தீவுக் கடல் எல்லையில் உள்ள ஒரு பண்டைய துறைமுகம் மற்றும் நகரமாகும். இது மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ளது .[3] இந்த நகரம் அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லடா ஆற்றின் கரையில் உள்ளது .[4][5][6]இது கொல்லம் மாவட்டத்தின் தலைமையகமாகும். கேரளாவின் நான்காவது பெரிய நகரமான கொல்லம் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் தென்னை நார் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இது கேரளாவின் உப்பங்கழியின் தெற்கு நுழைவாயில் மற்றும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
புவியியல்தொகு
இவ்வூரின் அமைவிடம் 8°56′N 76°38′E / 8.93°N 76.64°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடுதொகு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 361,441 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கொல்லம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொல்லம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்தொகு
- ↑ https://kollamcorporation.gov.in/en
- ↑ https://kollamcorporation.gov.in/en
- ↑ "Kollam on the itinerary". The Hindu. 14 September 2018. 14 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cities of Kerala
- ↑ "Kerala Cities". 24 November 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Alphabetical listing of Places in State of Kerala
- ↑ "Kollam". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)