1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-1952 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25ஆம் நாள் தொடங்கி 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் வரை 68 கட்டங்களாக நடைபெற்றது. [1] இந்திய தேர்தல் வரலாற்றில் நீண்ட காலம் நடந்த இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 கோடி.[2] இத்தேர்தல் சில ஆவணங்களில் "இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952" என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தேர்தலின்பொழுது சுகுமார் சென் என்பவர் தேர்தல் ஆணையராக இருந்தார்.[1] இத்தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது. வடஇந்தியாவைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் பெண்கள் பெயரே இல்லை. மாறாக, இன்னார் மகள், இன்னார் மனைவி என்றே சுமார் 28 இலட்சம் பெண்கள் குறிக்கப்பட்டிருந்தனர். அதனைக் கண்ணுற்ற சுகுமார்சென் அப்பட்டியலை நீக்கிவிட்டு பெண்களின் உண்மையான பெயர்களைக்கொண்ட வாக்காளர் பட்டியலை உருவாக்கினார்.[1] இத்தேர்தலில் வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.[1] தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களைக்கொண்டு முதலாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 364 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. ஜவகர்லால் நேரு இந்தியக் குடியரசின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரானார். (நேரு இந்தியா குடியரசாவதற்கு முன்பே இந்தியாவின் பிரதமாராகியிருந்தார்)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 489 இடங்கள் அதிகபட்சமாக 245 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 173,212,343 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 44.87% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுஇத்தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 86 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் ஒரு தொகுதியிலிருந்து மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். இக்காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய இந்திய தேசியக் காங்கிரசு முன்னணிக்கட்சியாக விளங்கியது. 1946இல் அமைந்த நேருவின் முதல் இந்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரு அமைச்சர்கள் இத்தேர்தலின் போட்டியிட தனிக்கட்சி தொடங்கியிருந்தனர். சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தையும் டாக்டர் அம்பேத்கர் பட்டியல் சாதியினரின் கூட்டமைப்பு (பின்னாளில் இந்தியக் குடியரசுக் கட்சி) ஆகிய கட்சிகளையும் தொடங்கி தனித்துப் போட்டியிட்டனர்.
காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. 1947-51 காலகட்டத்தில் ஆயுதப்புரட்சியின் மூலம் புரட்சியை கொண்டுவர கம்யூனிஸ்டுகள் முயன்றனர். தெலுங்கானா, மலபார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தொடங்கிய புரட்சிகளை மத்திய மாநில அரசுகள் முறியடித்து அடக்கிவிட்டன. இதனால் 1951இல் வன்முறை வழியைக் கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தை சிபிஐ தேர்ந்தெடுத்தது. இவை தவிர ஆச்சார்ய கிருபாளினியின் கிசான் மசுதூர் பிரஜா (உழவர், உழைக்கும் மக்கள்) கட்சி ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் சோசலிசக் கட்சி ஆகியவையும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் காங்கிரசின் பெரும்பலத்தின் முன் இவை பலவீனமாகவே இருந்தன.
முடிவுகள்
தொகுமொத்தம் 44.87% வாக்குகள் பதிவாகின
கட்சி | % | இடங்கள் |
இந்திய தேசிய காங்கிரசு | 44.99 | 364 |
சுயேட்சைகள் | 15.9 | 37 |
சிபிஐ | 3.29 | 16 |
சோசலிச கட்சி | 10.59 | 12 |
கிசான் மசுதூர் பிரஜா கட்சி | 5.79 | 9 |
பீப்பிள்ஸ் டெமாகிரட்டிக் ஃபிரண்ட் | 1.29 | 7 |
கணதந்திர பரிசத் | 0.91 | 6 |
இந்து மகாசபை | 0.95 | 4 |
அகாலி தளம் | 0.99 | 4 |
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 0.84 | 4 |
ராம் ராஜ்ய பரிஷத் | 1.97 | 3 |
ஜன சங்கம் | 3.06 | 3 |
புரட்சிகர சோசலிசக் கட்சி | 0.44 | 3 |
காமன்வீல் கட்சி | 0.31 | 3 |
ஜார்க்கண்ட் கட்சி | 0.71 | 3 |
தலித் மற்றும் பழங்குடி ஜாதிகள் கூட்டமைப்பு | 2.38 | 2 |
லோக் சேவக் சங்கம் | 0.29 | 2 |
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி | 0.94 | 2 |
பார்வார்டு ப்ளாக் (மார்க்சியம்) | 0.91 | 1 |
கிரிஷிக்கார் லோக் கட்சி | 1.41 | 1 |
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி | 0.22 | 1 |
சென்னை மாநில முசுலிம் லீக் | 0.08 | 1 |
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு | 0.11 | 1 |
மொத்தம் | 100 | 489 |