மலபார் மாவட்டம்

(மலபார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரை ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இருந்த மலபார் மாவட்டத்தைப் பற்றியது.

மலபார்
മലബാര്‍
மாவட்டம்
கோழிக்கோட்டில் அரபிக் கடல்
மலபார் மாவட்டம்
மலபார் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
 • அடர்த்தி816/km2 (2,110/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறையாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
ஐஎசுஓ 3166 குறியீடு[[ISO 3166-2:IN|]]
வாகனப் பதிவுKL-09 to KL-14,KL-18,KL-49 to KL-60,KL-65 and KL-70 to KL-73
மொத்த மாவட்டங்கள்6 (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காடு, வயநாடு)
மிகப் பெரும் நகரம்கோழிக்கோடு
படிப்பறிவு91.74%
தட்பவெப்ப நிலைவெப்ப மண்டலம் (கோப்பென்)

மலபார் மாவட்டம் (Malabar District) இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் சென்னை மாநிலத்திற்குடபட்ட ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டம் தற்போதைய மாவட்டங்களான கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம், பாலக்காடு (ஆலத்தூர் மற்றும் சித்தூர் தாலுகாக்கள் தவிர்த்து) மற்றும் திருச்சூர் மாவட்டத்தின் சாவக்காடு தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய கர்நாடகத்தின் சில கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. இம்மாவட்டமானது மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலையையும் வடக்கே தென்கனரா மாவட்டத்தையும் தெற்கே கொச்சி சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. இம்மாவட்டமானது மொத்தம் 15,009 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டிருந்தது. மேலும் 233 கிலோமீட்டர்கள் நீளமுள்ள கடற்கரையையும் கொண்டிருந்தது. மலபார் என்பதற்கு மலைநாடு என்று பொருள். கோழிக்கோடு மலபார் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது.

இந்துக்கள் முதன்மையாக உள்ள இந்தப் பகுதியில் கேரளாவின் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் மாப்பிளமார் என அறியப்படுகின்றனர். மேலும் தொன்மையான சிரியன் மலபார் கிறித்தவர்களும் இங்கு வாழ்கின்றனர்.[1]

தாலுகாக்கள்

தொகு
  • கோழிக்கோடு
  • சிறக்கால்
  • கொச்சின்
  • எர்நாடு
  • கோட்டையம்
  • குறும்பரநாடு
  • லட்சத் தீவுகள்
  • பாலக்காடு
  • பொன்னாணி
  • வள்ளுவநாடு
  • வயநாடு

மாவட்டப் பொறுப்பாளர்கள்

தொகு
  • ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையில்
    • கொங்கட்டில் ராமன் மேனன் (1937–39)
    • வர்க்கி சுக்காத் (1939)
  • பிரகாசம் அமைச்சரவையில்
    • ராகவமேனன்(1946-47)
  • ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில்
    • கோழிப்புறத்து மாதவமேனன் (1947-49)
  • குமாரசாமி அமைச்சரவையில்
    • கோழிப்புறத்து மாதவமேனன்(1952-54)
  • ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையில்
    • குட்டிகிருஷ்ணன் நாயர் (1952-54)

உணவு

தொகு

இம்மாவட்டத்தில் மலபார் பிரியாணி புகழ் பெற்றது. அல்வாவும் இம்மாவட்டத்தின் சிறப்பான ஒன்று. கோழிக்கோடில் உள்ள முக்கிய சாலைக்கு மிட்டாய்த் தெரு என்று பெயர். இத்தெருவில் அதிக அல்வாக் கடைகள் இருந்ததால் இப்பெயர் பெற்றது. மேலும் இம்மாவட்டம் மெல்லிதான வாழைப்பழ வறுவலுக்கும் (நேந்திரங்காய் வறுவல்) புகழ் பெற்றது. இங்கு கடல் உணவும் முக்கியமான உணவாகும். இப்பகுதியில் தற்காலத்தில் சீன மற்றும் அமெரிக்க உணவுகள் புகழ்பெற்றவை.

உசாத்துணை

தொகு

இம்மாவட்டத்தைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு 1887-ல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்த வில்லியம் லோகன் எழுதிய மலபார் மேனுவல் (Malabar Manual) என்ற புத்தகம் உதவியாக இருக்கும்.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Kerala". Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. 8 சூன் 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மாவட்டம்&oldid=2972617" இலிருந்து மீள்விக்கப்பட்டது